‘’கொங்கை இளநீரால் குளிர்ந்த இளஞ் சொற்கரும்பால்
பொங்குசுழி என்னும் பூந்தடத்தில் – மங்கை நறுங்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ
வெய்துஆம் அக்காமவிடாய்?’’
காமப்பெருக்கால் அடைந்த வெப்பத் துன்பத்தை தாங்க முடியவில்லை. அவளது கொங்கைகளாகிய இளநீரலும், இனிய சொற்களாகிய கரும்பாலும், மலர்கள் பூத்த குளிர்ந்த பொய்கை போன்ற கொப்பூழ்த் தடத்தாலும், ஆய்ந்தெடுத்த மலர்கள் கொண்ட மாலையால் வாசம் வீசும் அழகிய கூந்தலின் நிழலாலுமே இக் காம வெப்பம் ஆறி அடங்கும். அப்படி அடங்கப் பெறமாட்டேனோ.
நளவெண்பா இயற்றிய புகழேந்தி புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவரது காலம் 13-ஆம் நூற்றாண்டு. நளன் அரசன், வீமன் புதல்வி தமயந்தியிடம் அன்னத்தை தூது விட்டு காதலித்தார். சூதாட்டத்தில் நாட்டை இழந்த நளன், மனைவி தமயந்தியை பிரிந்து பல துயரங்களுக்குப்பின் தமது நாட்டை மீட்கின்றார். ஒட்டக்கூத்தரையும் புகழேந்தியையும் ஒருசேர கவிதளத்தில் கூறுவார்கள்.
No comments:
Post a Comment