உணருதல் என்பதற்குச் சிறு பயிற்சி மனிதனுக்குத் தேவைப்படும். இந்த மனித சமுதாயம், பயிற்சியைக் கொள் என்று சொன்னால், கொள்ளாது.
எளிமை என்பது மிகவும் வலிமையானது. வலிமை என்பதும் மிகவும் எளிமையானது. எளிமையாக இருக்கிற நினைக்கிற தன்மை வந்துவிடுமேயானால், மனிதன் தெளிவு என்கிற ஞானத்தைப் பெற்று மிகவும் வலிமை உள்ளவனாக மாறிவிடுகிறான்.
நிறைவினைக் கொண்ட மனிதன் தான் நிறைவுடன் வாழ்வான். குறைவினைக் கொண்ட மனிதர்கள் காலாகாலத்துக்கு எப்போதும் குறை உள்ளவர்களாகத்தான் வாழ்வார்கள்.
கல்வியினால் சிந்திக்க சிந்திக்க ஒரு பொருளில் இருந்து அவை அதிகமாகக் கிடைக்கிறது என்று சொன்னால், அந்தப் பொருள், சிந்திக்கச் சிந்திக்க ஒரு பொருளிலே சுவை கிடைக்கவில்லை என்றால் உங்களுடைய புத்தி ஒரு பொருளாகக் கூட உங்களிடத்தில் இல்லை என்றுதான் பொருள்.
No comments:
Post a Comment