———————————————————-
கழுகுமலை வெட்டுவான் கோவிலை யுனஸ்கோ சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று சில நண்பர்கள் விரும்புகின்றனர். அதற்கான முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று என்னிடம் கேட்டிருந்தனர். மகிழ்ச்சியான செய்திதான். எனது குழந்தைப் பருவ காலத்தில் இருந்து ஓடி விளையாடிய இடமும் கூட. சின்ன வயதிலேயே கழுகு மலையின் மேல் உள்ள மலை உச்சிக்கு செல்வது மகிழ்ச்சியான தருணங்களாக இருந்தது. விசாகத் திருநாளில் கிளிமூக்கு மாம்பழங்களை கடித்துச் சாப்பிட்டு மலையின் உச்சியில் அலைந்து திரிவது அவ்வளவு ஆனந்தம்.
வெட்டுவான் கோவில் குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் இந்து ஏட்டின் முன்னாள் சிறப்பு செய்தியாளர் டி.எஸ்.சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர் வேதச்சலம் சேர்ந்து நூல்களாகக் கொண்டுவர கடமைகள் ஆற்றிக்கொண்டு வருகின்றேன்.
No comments:
Post a Comment