Thursday, September 2, 2021

#தீராக்காதல் திருக்குறள்

 திருக்குறள் இன்றைய தலைமுறையினரிடம் சென்றடையும் வகையில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் 'தீராக்காதல் திருக்குறள்' என்ற பெயரில் ஊடகங்களில் கலை வடிவ நிகழ்ச்சிகள் நடத்தப்படும், கோயில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என்று- நேற்று சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார். மகிழ்ச்சி.

இங்கு ஒரு தகவல்... ஓமந்தூரார் ஆட்சி காலத்தில் (1948) பள்ளிப் பாடத் திட்டத்தில் திருக்குறள் கட்டாயப் பாடமாக ஆக்கப் பட்டது! உயர்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்புக்கு 60, ஏழாம் வகுப்புக்கு 70, எட்டாம் வகுப்புக்கு 80, ஒன்பதாம் வகுப்புக்கு 90, பத்தாம் வகுப்புக்கு 100 என்ற அளவில் தனி நூலாக அச்சிடப் பட்டு பாடத் திட்டத்தில் இருந்தன! அதற்கு முன்னும், பின்னும் பள்ளிக் கல்வியில் திருக்குறளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை! சிறப்பு மதிப்பெண்கள் கொடுத்து குறள் வழிக் கல்வியை பள்ளிகளில், கல்லூரிகளில் மீண்டும் நடைமுறைப் படுத்தலாம்.
( படம் : சட்ட மன்ற காங்கிரஸ் கட்சி விருந்தில் ராஜாஜி,, காமராஜர், வி.வி.கிரியுடன் சி.சுப்ரமணியம் ஓமந்தூரார். )


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...