திருச்சி பொன்மலையில் பிரிட்டிஷார் ஆட்சிகாலத்தில் விடுதலைக்காகவும், இரயில்வேத் தொழிலாளர்கள் உரிமைக்காகவும் கம்யூனிஸ்ட் இயக்கம் போராடியது, இன்றைக்கும் வரலாற்றில் உள்ளது. ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.
இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் பொன்மலை இரயில்வேத் தொழிலாளர்களுடையக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஆங்கிலேய அரசு உறுதியளித்தது. ஆனால் 1946-ல் தான் உறுதியளித்தவாறு செய்யமுடியாது என்று அறிவித்தது.தொழிலாளர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடினார்கள். இந்த போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள்:
1. எம்.கல்யாணசுந்தரம்
2. கே.அனந்தநம்பியார்
3. ஆர்.உமாநாத்
4. தியாகி பரமசிவம்
5. திருநல்வேலி சு.பாலவிநாயகம்
6. சி.கோவிந்தராஜன்
7. எஸ்.கே.நம்பியார்
8. கே.டி.ராஜூ
9. குளித்தலை ஆர்.கருப்பையா
10. பொன்மலை பாப்பா (உமாநாத்)
11. கோலம்பாளையம் வேலுச்சாமி (ஈரோடு)
12. பி.எம்.சுப்ரமணியம் (ஈரோடு)
13. முத்துமாறப்பன் (ஈரோடு)
14. பொன்னப்பன் (ஈரோடு)
15. புருஷோத்தம்மன் (ஈரோடு)
16. வெங்கடாசலம் (ஈரோடு)
17. லிங்கப்பன் (ஈரோடு)
18. மாணிக்கவாசகம் (திருச்சி)
19. காத்தமுத்து (தஞ்சை)
20. டி.ஆறுமுகம் (மன்னார்குடி)
21. முருகேசன் (விழுப்புரம்)
22. பானுபாய் (விழுப்புரம்)
23. சோட்டு என்கிற வாசுதேவன் (விழுப்புரம்)
24. பாஷாஜான் (கள்ளக்குறிச்சி)
தென்னக ரயில்வே-1946 போராட்டத்தில் செப்டம்பர் 5 துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த தியாகிகள்:
1. ராஜூ (28)
2. ராமச்சந்திரன் (26)
3. தியாகராஜன் (24)
4. தங்கவேலு (24)
5. கிருஷ்ணமூர்த்தி (22)
இந்தப் போராட்டம் அன்றைய திருச்சிராப்பள்ளியைத் திருப்பிப் போட்டது.
No comments:
Post a Comment