Sunday, September 5, 2021

#கடந்த காலங்களில் வீச்சோடும், வீரியத்தோடும்

 கடந்த காலங்களில் வீச்சோடும், வீரியத்தோடும் செயல்பட்ட நீ இப்போதெல்லாம் ரொம்ப அமைதியாகிட்ட என்று நண்பர்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். இன்றைக்கல்ல கடந்த சில வருடங்களாக…

நானும் பொறுமையாகவும், அமைதியாகவும் என்னுடைய களப்பணிகளை ஆற்றிகொண்டுதான் இருக்கின்றேன்.
பொதுவாழ்வில் பல தியாகங்களைச் செய்த வ.உ.சிதம்பரனார், சேலம் வரதராஜ நாயுடு, திரு.வி.க போன்ற ஆளுமைகளையே மறந்துவிட்ட மண். கொண்டாட வேண்டியவர்களை கொண்டாடாமல் எந்த அர்ப்பணிப்பும் இல்லாமல் அடையாளமும், கீர்த்தியும், பெருமையும் தேடிக்கொள்வது மெய்யானது அல்ல. என்னைப் பொருத்தவரையில் நண்பர்களின் வினாக்களுக்கு காலம் பதில் சொல்லும்.
இன்றைக்கு வ.உ.சி, ரசிகமணி டி.கே.சி-யின் பிறந்தநாள்.
5-9-2021.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...