*இப்படியான பதிவுகள்…
செரி, அதற்கு என்ன?
பழியா பாவமா*?
‘ஆந்திராவில் கருணாநிதி குடும்பம் வசித்த கிராமம், அவர்கள் பரம்பரையாக மேளம் வாசித்த கோவில், கோவில் நிர்வாகத்தால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வீடு மற்றும் காணி நிலம் அவ்வளவையும் தெளிவாக காட்டி ஊர்வாசிகள் ஸ்டாலின் தற்போது தமிழ்நாட்டை ஆள்கிறார் என்று பெருமைப்பட சொல்கிறார்கள்.’
****
தமிழ் மண்ணில் நீண்டகாலமாக வேர்விட்டு கிளை பரப்பி வாழ்பவர்களைக் குறித்து, இமயமலையில் இருந்து வந்தார்கள்; ஆந்திராவிலிருந்து வந்தார்கள் என்று பேசுகிறார்கள். அவர்களை வந்தேறிகள் என்று தூற்றுகிறார்கள்.
மனிதர்கள் இடம் பெயர்ந்து வாழ்வதென்பது மனிதன் தோன்றிய காலம் தொட்டே நிகழ்ந்து வருவது. சோழ மன்னர்கள் காலத்தில் கர்நாடக, ஆந்திர பகுதி மன்னர்களுடன் மண உறவு வைத்துக் கொள்ளவில்லையா? பாண்டிய மன்னர்களுக்கும் சோழர்களுக்கும் மோதல் நிகழ்ந்தபோது விசுவநாத நாயக்கர் பாண்டிய மன்னனுக்குத் தோள் கொடுக்கவில்லையா? இந்த வரலாற்று உண்மைகளை மறுக்க முடியுமா?
இப்போது மக்கள் உலகம் முழுக்க வேலைக்காகவும், தொழிலுக்காகவும் சென்று வாழ்கிறார்களே... வந்தேறிகள் என்று பேசுவது இந்த உலகமய காலத்தில் எந்தவிதத்தில் நியாயமாகும்?
இப்படி பேசுவது எந்தவிதத்திலும் பொருளற்றது என்பதை வாய்க்கு வந்தபடி பேசும் இவர்களை என்ன சொல்ல….?
#ksrpost
14-1-2022
No comments:
Post a Comment