—————————————
ஜனநாயகம் என்பது அரசியல் சார்ந்த ஒன்றாகவே புரிந்துக்கொள்ளப்படுகிறது. ஜனநாயகம் என்பது தேர்தல் ஆட்சி என்ற கருத்து. அதுவும் இங்கு கமுக்கமான ஓட்டுக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வந்து லஞ்சம்-தங்களை பெருக்கி கொள்வது. இந்த தளத்தில் மக்கள் நல அரசுகள் இல்லாதுபோது குடியரசு என்பது கேள்வி குறிதான்.
ஜனநாயகத்தை குடியரசுடனும், நாடாளுமன்ற அரசாங்கத்துடனும் இணைத்துப் பார்ப்பதால் ஏற்படும் குழப்பத்தை நீக்கும்வரை இதற்கு சரியான பதிலை அளிக்க இயலாது. குடியரசு மற்றும் நாடாளுமன்ற அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து ஜனநாயகம் முற்றிலும் வேறுபட்டது.ஜனநாயகத்தின் வேர் அரசாங்கத்திலோ,நாடாளுமன்றத்திலோ அல்லது இவை போன்ற வேறு எந்த அமைப்பிலோநிலைப்பெற்றிருக்கவில்லை. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர்.
ஆனால், இங்கு சமூக விரோத சக்திகள் எளிதாக ஆட்சிக்கு வந்து வல்லான் வகுத்ததே வாய்க்கால்; குடியரசா? ஜனநாயகமா? சட்டமாவது? விட்டமாவது? வெங்காயமாவது?.
ஜனநாயகம் குடியரசு என்றால் என்ன..? என தெரியா பல முட்டாள் மனிதர்கள் அரசியல் களத்தில் இங்கு உள்ளனர். இதுதான் ஏதார்த்தம்.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.
குடியரசு நாள்.
Republic Day
#KSR_Post.
26-1-2023.
No comments:
Post a Comment