Thursday, January 12, 2023

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குறித்த என்னுடைய ட்விட்டர் பதிவால் திமுகவிருந்து நான் இடை நீக்கம் செய்யப்பட்டேன்…ஆனால்…..

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே, 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குறித்த என்னுடைய ட்விட்டர் பதிவால் திமுகவிருந்து நான் இடை நீக்கம் செய்யப்பட்டேன். 




சரி,09.01.2023 - ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் வாசித்த உரையில் இரண்டாவது பாராவில், காங்கிரஸ் ஆட்சி இருந்த காலத்தைக் குறை சொல்லும்விதமாக, ‘1960களில், இந்தியாவின் மற்ற பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது, சமூக, பொருளாதார, கல்வி, மருத்துவக் குறியீடுகளில் பின்தங்கி இருந்த தமிழ்நாடு’ என்ற வரி வருகிறது. (In the last 50 years, Tamil Nadu has grown significantly in multiple sectors to become a pioneering State in the country. During the 1960s, Tamil Nadu was lagging behind in social, economic, educational and health indicators when compared to other big States.) .

அப்படியானால் தமிழக முதல்வர் தலைமையில் உள்ள இன்றைய திமுக ஆட்சியும் காங்கிரஸுக்கு (அன்றைய ஓமந்தூரார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, காமராஜர் தலைமையிலான ஆட்சிகள் உள்ளிட்ட காங்கிரஸ் ஆட்சிகள்)  எதிராகத்தானே  உள்ளதா?  என்னுடைய ட்விட்டர் பதிவு தவறெனில், இது என்ன? இதற்கு……?

K.S.Radhakrishnan 
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்

#ksrpost
12-1-2023.
—————————————————————
In February 1965, the then West Bengal Governor, Padmaja Naidu, walked out of the congress ruled West Bengal Assembly without addressing the House, annoyed by the continuous interruptions by the Opposition. Also Kerala, AP and other assemblies

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...