Monday, January 16, 2023

#பொங்கல்நல் வாழ்த்துக்கள் #மாட்டுப் பொங்கல்



—————————————
                              (4)
இன்று மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் கொண்டாடப்படுகிறது.

மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். சந்த னம், குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை, கலப்பை, மாட்டு வண்டியை  சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

"பட்டி பெருகோணும்.
பால் பொங்கோணும்.
வெள்ளாமை வெளையோணும்.
பொங்கல் பொங்கோணும்"

"பட்டி"-ஆடு மாடு எருமை போன்ற கால்நடைச் செல்வங்களைக் குறிக்கும் சொல்.
இன்றும் கால்நடைகளை கட்டி வைக்கும் இடத்திற்கு  "கட்டுத் தரை" / "தொண்டுப் பட்டி" / தொழுவம்  எனும் சொற்கள் வழக்கில் உள்ளன.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு ரேக்களா என விளையாட்டுகள்  இந்நாளில் நடைபெறும்.


ஜல்லிக்கட்டின்  தொன்மையை ஆராய்ந்தால் அது கிட்டத்தட்ட 5000 ஆண்டு பழைமை வாய்ந்த ஓர் நிகழ்வாய் தரவுகள் கிடைக்கிறது . சிந்துசமவெளி நாகரீகத்திலேயே இவ்விளையாட்டு குறித்த குறியீடுகள் கிடைத்துள்ளன. அதன்தொடர்ச்சியாக பாறை ஓவியங்களிலும் இவ்வீரவிளையாட்டு குறித்த ஓவியங்கள் உள்ளன 
ஐல்லிகட்டு நிகழ்வு வெறும் வீரம் தொடர்பானது மட்டுமல்ல,ஒரு காளையை தழுவும்போது, அந்த காளை மாடு பிடி வீரர்களின் எதிர்ப்பை  தாண்டி ஒரு 50 அடி தூரம் சென்றுவிட்டால் அந்த காளைக்கு வீரியம் அதிகம் என்று கருதி  அதை இனப்பெருக்கத்திற்கு அனுப்புவார்கள். பிடிபட்ட காளைகளை விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். 

சல்லி என்பதற்கு பணம் என்று பொருள், காளையின் கொம்பில் பணமுடிப்பை கட்டி வைத்து, அதன்பின் காளைகளை  அடக்கும் மாடுபிடிவீரர்கள், மாட்டினை அடக்கி அந்த பணமுடிப்பை கைப்பற்றியதால் இவ்வீர விளையாட்டிற்கு "ஐல்லிகட்டு" எனும் இப்பெயர் வழங்கப்பட்டு , அது இன்றளவும் தொடர்கிறது. 
தொல்லியல் அறிஞர்  ஐராவதம் மகாதேவன் அவரகள் சிந்துசமவெளி மக்கள் மேற்குதொடர்ச்சி மலை வழியே  இடம்பெயர்ந்து இந்தியாவின் தென் பகுதிக்கு  வருகையில் தங்கள் வாழ்வாதரத்திற்கு உறுதுணையாய் கால்நடைகளுடன் இடம் பெயந்ததாகவும் ,அங்கு இருந்த பழக்கமே இன்று வரை தொடருவதாகவும்  கருதுகிறார். 
இந்த ஜல்லிக்கட்டானது  இலக்கியங்களில் ஏறுதழுவல் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.
பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலில்  (330-335) அடிகளிலும் , பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
ஏர் தழுவுதல் நடக்கும் நாள் அல்லது அதன் முந்தைய நாள் அன்று  குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.
வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,
'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக்
முல்லையம் பூங்குழல் தான்' 
என்று குறிப்பிடுகிறது.

இலக்கியம் தவிர்த்து கல்வெட்டுகளிலும் ஏறுதழுவல் இடம்பெற்றுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள ஏறுதழுவல் குறித்த வீரக்கல் ஒன்று ,இப்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது .கோவுர்சங்கன் என்பவர் எருதுவிளையாட்டில் இறந்துவிடுகிறார். அவருக்கு எடுக்கப்பட்ட நடுகல் இது.
இவ்வாறு சிந்துசமவெளியில் தோன்றி, அதன் தொடர்ச்சியாய் பாறைஓவியங்களிலும் இடம்பெற்று, சங்ககாலஇலக்கியங்களிலும் புகழ்பெற்று இன்றும் நம் தமிழர்களின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது ஏறுதழுவல் எனும் நம் ஜல்லிகட்டு


கிராமப்புறங்களில் விழாக் கலை, விவசாயிகளின் மகிழ்ச்சி என் மனதில் எப்போதும் இருக்கும். விவசாயின் மகனான கிராமப்புறங்களில் விழாக் கலை நிகழ்வுகள், விவசாயிகளின் மகிழ்ச்சி என் மனதில் எப்போதும் இருக்கும். கொண்டாட்டங்களின் மூலம் நமது கலாச்சாரத்தை என் மனதில் வலுவாக விதைத்துள்ளேன். அதுதான் என் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளம் அமைத்தது.

வருடாந்திர தை பொங்கல் பண்டிகை கிராமப்புற மற்றும் விவசாயிகள் மிகவும் விசேஷமானது. இது விவசாயிகளின் திருவிழா….. திருவிழாவில் தானியங்கள் வீடு வந்து சேரும். "Share and Care" என்பது இந்திய கலாச்சாரத்தின் முக்கிய கருத்து நமது மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற உணர்வோடு கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயில் இட்டு தூய்மைக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். அத்துடன் சூரியன் வடக்கு புண்ணிய காலத்தில் நுழைந்து வெப்பத்தை கொண்டுவருகிறது. இப்போது நாம் குளிர் மற்றும் இலேசான சொக்கப்பனங்களுக்கு விடை கொடுப்போம். சூரியன் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தருகிறது. அதனால் தான் இந்த பண்டிகையன்று குழந்தைகளுக்கு சூரியனை குறிக்கும் போகி பழங்களை ஊட்டி அவர்கள் ஆரோக்கியமும் ஆயுளும் கிடைக்க அருள்வோம்.

நம் முன்னோர்களை நினைவுகூரும் விழா. நமது கடந்த காலத்தை பெரியவர்களிடம் வைத்து எதிர்காலம் அறியும். நாம் எங்கிருந்து வருகிறோம் என்றும் நம் கலாச்சாரத்தையும் நம் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.  இன்று மூன்றாவது நாளில் மாட்டுகளுக்கு திருவிழா. உழவு செய்ய உதவும் கால்நடைகளுக்கு நன்றிக்கடன் கூடிய கட்டில்களை சுத்தம் செய்து வழிபாடு. நம் வளர்ச்சியில் இவர்களும் பங்காளிகள் என்பது தான் இதன் முக்கிய அர்த்தம். மிருகச் செல்வம் நாட்டின் செல்வம் என்ற பெரியவர்களின் வார்த்தைக்கு இதுவே சான்று.

பண்டிகை என்றால் புத்தாடைகள், மாவு பதார்த்தங்கள் மட்டுமல்ல, அது நம் கலாச்சாரம், பாரம்பரியங்கள். நமது பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள். நம் மகிழ்ச்சியை நால்வருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், பெரியோரை மதிக்க வேண்டும். சமுதாயத்தில் உள்ள அனைவரும் பயன்பெற வேண்டும். நம் வருங்கால சந்ததியினருக்கு கலாச்சார பாரம்பரியங்களை எடுத்துச் சொல்லி பெரியோர்களை பெருமைப்படுத்த அனைவரும் 10 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

1. நாம் நமது வேர்களுக்குத் திரும்பிச் செல்வோம். பெரியவர்கள் காட்டிய வழியில் நாம் முன்னேறுவோம். இந்திய கலாச்சாரம் புத்துயிர் பெற பாடுபடுவோம். சேவைத் திட்டங்களில் பங்கெடுப்போம்.
2. நம் வாழ்க்கை முறையில் மாற்றங்களின் ஆரம்பம் காண்போம். வாழ்க்கை முறை பற்றி அறிந்து பழகுவோம். மேற்கத்திய வாழ்வை விட்டு சுயமாக வாழுங்கள்.
3. நமது ஆரோக்கியத்தை காக்கும் உணவில் கவனம் செலுத்துவோம். நமக்கல்லாத உணவின் மீதான பற்றை குறைத்து உணவில் கவனம் செலுத்தி உடல் நலம் காப்போம்.
4. இளைஞர்களின் கவனத்தை விவசாயத்தின் பக்கம் திருப்புவோம். இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்போம் ரசாயனம் பயன்படுத்துவதை நிறுத்துவோம். விவசாயத்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கு முயற்சி செய்வோம்.பசுமையை வளர்ப்போம்.
5. இந்திய தாய்மொழிகளை மதித்து ஊக்குவிப்போம் தாய்மொழி காக்க போராடுவோம்.
6. உலக நாடுகளால் விதைக்கப்பட்ட இந்திய குடும்ப அமைப்பின் இருத்தலை காப்போம். பாரம்பரிய சமுதாயத்தை வலுப்படுத்தி வலுப்படுத்தும் சக்தி நம் குடும்பம். தலைமுறை தலைமுறையாக நம் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கும் சக்திவாய்ந்த பிணைப்பு அது. வளமான நமது சமூக அமைப்பை ஒருங்கிணைந்த வடிவத்திற்கு கொண்டு வந்த குடும்ப அமைப்பை பாதுகாப்போம்.
7. பகிர்வதும் கவனிப்பதும் இந்திய தத்துவத்தின் அடிப்படை. இருப்பதில் ஒரு பகுதியை நாலுபேரிடம் சந்தோஷமாக பகிர்ந்து அவர்கள் நலம் விரும்புவதுதான் இந்திய நவீன கண்ணோட்டம். அந்த தத்துவத்தை பழக்கமாக்குவோம். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்.
8. உடற்பயிற்சியின் மூலம் உடல் ஆரோக்கியம் பேணுவதோடு, மன அமைதி பெற ஆன்மீகம் பழகுவோம். இயற்கையை நேசிப்போம். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.
9. நமது பொறுப்புகள், கடமைகள், செயற்பாடுகளை நிறைவேற்றி நாட்டின் எதிர்காலத்திற்கு பங்களிப்போம். இந்த நன்னாளில், சக்திவாய்ந்த, ஆரோக்கியமான மற்றும் வளமான நாட்டை உருவாக்க நாம் உறுதியேற்போம்.
10. நமது விளையாட்டு, நமது பாடல், நமது வழி, நமது சொல், நமது மொழி, நமது பெருமை..

பிறருக்கு உதவும் நமது கலாச்சாரத்தை வருங்கால தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வழிகளே பண்டிகைகள். திருவிழாக்களை ஏற்பாடு செய்வது குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியாக வளர உதவுகிறது. அந்த வளர்ச்சி அவர்களுக்கு வாழ்க்கையில் உதவும். வெற்றியை நோக்கி அவர்களை ஊக்குவித்தல். 

நமது அரசியலமைப்புச் சட்டமும் நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் உணர்வை பிரதிபலிக்கிறது அரசியல் சாசன உறுப்பை பார்த்தால் பிரபல ஓவியர் ஸ்ரீ நந்தலால் போஸ் அவர்களின்  கை வண்ணம் நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.

மகாபாரதம், ராமாயணம், அசோக், கௌதம புத்தர் ஆகியோரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அரசியலமைப்பின் மூலையில் உள்ள படங்கள் கடமை பக்தி, சேவை, மனிதநேயம், அறிவு மற்றும் அற பக்தி போன்ற வாழ்க்கை மதிப்புகளை அவசியம். இவை அனைத்திற்கும் முக்கிய நோக்கம் நமது வருங்கால சந்ததியினரின் மனதில் நமது இந்திய மதிப்புகளையும் கலாச்சாரத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்ற தீர்மானமே.

நேர்மையான பொது வாழ்வு அரசியல் சேவையில் தான் உண்மையான செல்வம் இருக்கிறது. பலர் நினைப்பது போல செல்வம் என்பது லாக்கரில் ஒளிந்திருக்கும் சொத்து,துட்டு,தராசின் தங்கம் அல்ல.

• வீட்டு வாசலில் கேட்கும் பெண்களின் கஜ்ஜால் சத்தம்... செல்வம்
• வீட்டிற்கு வந்தவுடன் புன்னகையுடன் என் முன்னே வரும் மனைவியின் பாசம்... செல்வம்.
• எவ்வளவு வளர்ந்தாலும் அப்பாவின் திட்டுக்கள்... செல்வம்.
• அம்மா செய்த உணவு... செல்வம்.
• தேவைப்படும் சிறந்த நண்பனின் துணை.. செல்வம்.
• புத்திசாலித்தனமான மற்றும் முன்மாதிரியாக நடத்தப்படும் குழந்தைகள்... செல்வம்
• எல்லாவற்றிற்கும் மேலாக நாம் காக்க வேண்டியது ஆரோக்கியத்தை தான்.. உண்மையான செல்வம்.

எண்ணத்தை தூய்மையாக்கி ஒருமுகப்படுத்தி தன்னை அறிந்து பிரபஞ்சமாகவே மாற முடியும் நம்மால் மனதை விரித்து பூரண இயற்கையாகவே மாற இயலும் ஒவ்வொரு உயிராலும்.
ஆடம்பரத்தால் எப்போதுமே மகிழ்ச்சி என்பதும் மனநிறைவு என்பதும் இல்லவே இல்லை.

சிறியதே அழகு
எளிமையே பலம்.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

இந்த உத்வேகம் புரிந்து அனைவரும் முன்னேற்றப்பாதையில் மகிழ்ச்சியும் அமைதியுடனும் முன்னேற வாழ்த்துகிறேன் இந்த திருநாளில்... நாடு மற்றும் வெளிநாட்டில் வாழும் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
———————————————————
கரி நாள்  பொங்கல்
உற்றார், உறவினர்கள், நண்பர்களைக் கண்டு இனிப்புகளைப் பரிமாறி சந்தோஷம் அடைவதே காணும் பொங்கலாகும்.
“விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன்” (அகநானூறு:54)
விருந்து எனும் சொல்லிற்கு புதுமை எனும் ஒருபொருளை தொல்காப்பியம் தருகிறது.
பண்டைய தமிழரின் பண்பாட்டில் தலையாய் இருந்த பண்பு விருந்தோம்பல் ஆகும். “பண்டமாற்று முறை வழக்கிருந்த அக்காலத்தில் போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழலில்.இரவலர்கள் மட்டுமின்றி ஏனையோரும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கால்நடையாகவே மக்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. உணவு விடுதிகள் இல்லாத காரணத்தினால் உண்டிக்கும் உறையுளுக்கும் அனைவரும் செல்லும் ஊர்களையே நம்ப வேண்டியிருந்தது. ஆகவே, புதிதாக வருவோர்க்குப் பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழகத்து இல்லங்களில் உருவாயிற்று. 
‘விருந்தோம்பல்’ என்பது தம் இல்லம் தேடி வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று இனிய மொழி கூறி உபசரித்து உணவளிக்கும் உயரிய பண்பாகும்.
—————————————————————-

நம் சங்க இலக்கியங்களில் பதிவான ஏறு தழுவதல் பாடல்கள்
மலைபடுகடாம்:
இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை
(மலை.330-335)
ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்
(கலித்தொகை-102 : 9-10)
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
(கலித்தொகை- 103 : 63-64)
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை:
காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்
வேரி மலர்க் கோதை யாள்"
"நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்
பொற்றொடி மாதராள் தோள்"
இப்படி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் ஏறுதழுவலையும் தமிழர் வாழ்வின் அங்கமாக இருந்ததையும் விவரிக்கிறது.
இந்த பாடல்களில் காளைகளின் நிறம், வகை, வீரம், வேடிக்கைப் பார்க்கும் பெண்களின் கிண்டல்கள், பெண்கள், பெற்றோரின் மன இயல்பு ஆகியவற்றைதான் இந்த சங்கப்பாடல்கள் விவரிக்கின்றன.
முல்லை, மருதம் நில காளைகள் பங்கேற்கும் இந்த வீர விளையாட்டை தமிழக பெண்களும் குரவைக்கூத்து என்ற நாட்டுப்புறப்பாடல் வாயிலாகப் பாடியுள்ளனர்.ஏறுதழுவுதல் அல்லது சல்லிக்கட்டுக்கு முன்னர் குரவைக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் தாங்கள் விரும்பும் ஆண்கள் சல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதலில் வெல்ல வேண்டும் என்பது முதன்மை விருப்பமாகவும் இருந்தது.
அது சரி ஜல்லிக்கட்டு என்பது தமிழ்ச் சொல்லா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது ஜல்லிக்கட்டு அல்ல... சல்லி கட்டு என்பதுதான் சரியானது.
அதாவது சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையமாகும். புளியங் குச்சியால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவதுதான் இந்த சல்லி வளையம். இந்த சல்லி வளையத்தைப் பிடித்து மாட்டிக் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பணமுடிப்பை கைப்பற்றுவதுதான் சல்லிக்கட்டு என்பதாகும். இதுவே நாளடைவில் ஜல்லிக்கட்டாகிவிட்டது.
ஏறுதழுவும் வீரனின் நடுகல் ஒன்று.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...