Monday, January 30, 2023

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு... ***** ‘முதற் சங்கு அமுதூட்டும் மொய்குழலார் ஆசை நடுச்சங்கம் - நல்விலங்கு பூட்டும் கடைச் சங்கம் ஆம்போதது ஊதூம் அம்மட்டோ? இம்மட்டோ? நம் பூமி வாழ்ந்த நலம்.’ - பட்டினத்தார்

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு...
*****

‘முதற் சங்கு அமுதூட்டும் மொய்குழலார்
ஆசை நடுச்சங்கம் - நல்விலங்கு பூட்டும்
கடைச் சங்கம் ஆம்போதது ஊதூம் அம்மட்டோ? இம்மட்டோ? நம் பூமி வாழ்ந்த நலம்.’
- பட்டினத்தார்

ஆகஸ்ட் 2012 - இல் #டெசோ மாநாடு தலைவர் கலைஞர் தலைமையில் நடந்ததை நீங்கள் மறந்திருக்கலாம். அந்த மாநாட்டுக்கு நான் பணிகள் செய்ததையும் மறந்திருக்கலாம். அதைப் பற்றி பேசவில்லை. கட்சிக்காக உழைத்தது யார், எவர் என்று கூட உங்களுக்கு நினைவிருக்காது. அது உங்களுடைய வாடிக்கை. இது விடயம் அல்ல. 
 
நீங்கள் நேரடியாகச் சந்தித்துக் கௌரவித்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 2012 - இல் சென்னைக்கு வந்திருந்தார். போட் கிளப்பில் அவரைச் சந்தித்து கலைஞர் சார்பில் அவரை டெசோ மாநாட்டுக்கு அழைத்தேன். ஆனால் அவர் மாநாட்டுக்கு வரவில்லை. அவர் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. பிற இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிங்கள அரசுயோடு சேர்ந்து டெசோ மாநாட்டுக்கு வரவிடாமல் தடுத்தார். இது உங்களுக்குத் தெரியுமா?
  
இன்றைக்கு உங்களையும் உங்கள் தங்கை கனிமொழியையும் சுமந்திரன் சந்தித்துவிட்டு பந்தாவாக நாட்டுக்குத் திரும்புகிறார். கனிமொழி கருணாக்களும் தேவை - தலைவர் பிரபாகரனும் வேண்டாம் 13-வது திருத்தமும் காணும் -பேருக்கு ஈழமும் வேணும்' என்பார் சுமந்திரன்.
 
முள்ளிவாய்க்கால் துயரத்தின்போது, திமுகவையும் கலைஞரையும் கடுமையாகச் சாடிய வைகோ போன்ற பலரையும் தோழமையோடு ஏற்றுக் கொள்வீர்கள். சுமந்திரனையும் ஏற்றுக் கொள்வீர்கள். முள்ளிவாய்க்கால் பிரச்னையால் ஏற்பட்ட அவப்பெயரை நீக்க அரும் பாடுபட்ட என்னை இடைநீக்கம் செய்வீர்கள். இதுதான் உங்களுடைய நடவடிக்கை. 
அன்றைக்கு வைகோ ‘குய்யோமுறையோ’ என்று கலைஞர், திமுகவை சாடியவர். அவர் இப்போது உங்களுக்கு நல்லவர். சுமந்திரனும் உங்களுக்கு நல்லவர். நீங்களும் உங்கள் தங்கையும் கனிமொழி நன்றாக இருங்கள். இதுதான் உங்கள் அரசியல். நான் என்ன சொல்ல முடியும்?  
 இதுதான் நீங்கள் சொல்லும் திராவிட மாடலா? திரவிடியன் மாடல், திரவிடியன் ஸ்டாக் இரண்டையும் வேறுபடுத்தி உங்களால் பேச முடியுமா?

யார் யாரே வில்சன், இளங்கோ,நாமக்கல் யாரோ ராஜிஷ் குமார், யாரோ ஒரு பாய்
அப்துல்லாவாம் . உங்களுக்கு உழைப்பை கொடுத்தவர்களை புறக்கணிப்பால் அவர்கள் ஒன்றும் வீழ்ந்து விட மாட்டார்கள். நேற்று வரை திமுக கலைஞரை திட்டி தீர்தவர்கள் பதவிகள்,உங்கள் ஆட்சியில் மரியாதைகள்…. நடத்துங்கள். பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி; இணையத்தில் சம்பள ஆட்களை வைத்து புகழ் வார்த்தைகளை பரபரவென்று  சொல்வது,பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் நிலை.கலைஞர் கால இயல்புகள் வேறு ஆனால் இன்று முற்றிலும்  மாறாக ஜெயலலிதா மாதிரியான போக்குகள் ….

எப்படியோ ஆட்சி வந்து விட்டது என நினைக்க வேண்டும் மிஸ்டர் (இன்றைய) சீப் மினிஸ்டர். எதுவும் நிறந்தர மற்றது.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 
#KSR_Post
30-1-2023.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...