மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே, கடந்த 10 - 12 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவை திட்டியவர்களை எல்லாம் சென்னை இலக்கியத் திருவிழாவில், சென்னை புத்தகக் கண்காட்சியில், அயலகத் தமிழர் நாளில், சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சிகளில் தாராளமாகப் பெருமைப்படுத்துங்கள். அது உங்கள் விருப்பம். பாடநூல் நிறுவனம், மாநிலத் திட்டக் குழு, கலைஞர் டிவி போன்ற பல அமைப்புகளில் திட்டியவர்களுக்கு மரியாதை கொடுங்கள். அதிமுக,தேமுதிக என வந்தவர்களை முதல் மரியாதை வழங்கல் என தங்கள் நிலை….இவர்கள் மற்றும் பிறர் திமுகவை திட்டியபோதெல்லாம், திமுகவுக்கு முட்டுக் கொடுத்த எங்களைப் போன்றவர்களை நீங்கள் புறந்தள்ளுவதால், எங்களுடைய பெருமை சிறுமையாகாது.
#ksrpost
11-1-2023
No comments:
Post a Comment