Wednesday, June 4, 2025

#நடிகர்கமலஹாசன் #கன்னடம்

 #நடிகர்கமலஹாசன் #கன்னடம்

——————————————————————
திராவிட மொழிகளின் ஒப்பீடுகளில் தமிழே இவற்றுக்கெல்லாம் மூல மொழியாக இருக்க வேண்டும் என்று ஆய்ந்து கூறிய மொழியியல் அறிஞர் கால்டுவெல் அவர்களைப் பின்பற்றி நடிகர் கமலஹாசன் தனது கருத்தைச் சொல்லி இருக்கின்றார் என்று நினைக்கிறேன். அது கர்நாடகா நீதிமன்றம் வரையிலும் சென்று கமலஹாசனை மன்னிப்புக் கேட்கும் படிச் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது. அவரவர் மொழி அவரவர்க்குப் பெரிது என்றாலும் கூட ஒரு ஆய்வைப் பின்பற்றி அது ஏற்கனவே தென்னிந்திய மொழிகள் குறித்த ஆய்வுகளாகவும் குறிப்பாக மொழி ஆய்வாளர்கள்பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அது ஒரு பொதுக் கருத்து போல இருப்பதாலும் கூட அதைச் சொல்லுவதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை. சொன்னவர் ஒரு பிரபலமானவர் என்பது தான் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது.
அது ஒரு புறம் இருக்க இது மாதிரி விஷயங்களில் எப்பொழுதும் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசிக் கொள்கிற திமுகவின் அல்லது ஸ்டாலினின் முன் களப்பணியாளர்கள் பத்திரிக்கையாளர்கள் நடிகர்கள் சித்தார்த் பிரகாஷ்ராஜ் மற்றும் தத்துவவாதிகள் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் மற்றும் பல நடிக நடிகையர்கள் மற்றும் சிபிஎம் கட்சி தோழர்களும் இது பற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அல்லது ஏன் வாயைத் திறக்க மறுக்கிறார்கள். இதுவரை இவர்கள்காவிரி,முல்லைபெரியாறு, கண்ணகி கோட்டம் பிரச்சனைக்காக எந்த ஒரு
தீவிரமான குரலையும் கொடுப்பதில்லை! ஆனால் தமிழ்நாட்டில் வந்து மட்டும் கருத்துக் கந்தசாமிகளாக மாறி விடுகிறார்கள். கமல் மன்னிப்பு கேட்பதால் மட்டும் இப்பிரச்சனை தீர்ந்து விடுமா?இது விவகாரத்தில் மேற்சொன்னவர்கள் பலரும் குரல் கொடுக்காததால் கமலைத் தனிமைப்படுத்துகிறார்கள் என்று தானே எண்ண வேண்டியிருக்கிறது?
மொழியியல் ஆய்வுகளை படித்து அதன் பிரகாரம் ஒருவர் தன் கருத்தைச்சொல்வதற்கு உரிமை உண்டு தானே. அதை மறுப்பவர்கள் தங்கள் மொழியை உயர்த்தி பிடிப்பதற்கும் இருக்கும் உரிமை போல அதுவும் ஒன்றுதான்.
இது கவனமாக கையாள வேண்டிய ஒரு விடயம்.

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...