அதே காலகட்டம் தொடங்கி விகாரை இருந்த இடத்திலும் அருகில் பிற பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட 350 நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகள் இந்திய வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் இன்றளவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன! பௌத்த சமய எச்சங்கள் என்கிற அளவில் நாகப்பட்டினம் நகரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சந்தை தோப்பை சேர்ந்த புத்தர் சிலை மட்டுமே இப்பொழுது உள்ளது! ஆனால் நாகப்பட்டினத்தில் புத்த விகாரையின் எச்சங்களோ புத்தரின் செப்புத் திருமேனிகளோ அந்த நகரில் இப்போது இல்லை!!
இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் புத்த விகாரை இருந்ததற்கு சாட்சியாக இந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் மட்டுமே உள்ளன!! மேலும் மாமன்னர் ராஜராஜசோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் பிற மதங்களுக்கு ஆதரவு கொடுத்ததற்கும் சமய நல்லிணக்கத்துடன் இருந்ததற்கும் பிற சமயங்களைப் போல பௌத்த மதத்திற்கு ஆதரவு அளித்ததற்கும் ஆதாரமாக இருந்த இந்த செப்பேடுகள் நமது பழம் பொக்கிஷங்களாக இன்று மீட்டெடுக்கப்பட்டு நம் கைகளுக்கு வந்துள்ளன. ஆகவே ஆனைமங்கலச் செப்பேடுகளை. நாகப்பட்டினத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிக்கு தக்க பாதுகாப்புடன் வைக்கலாம்!! மீட்கப்பட்டதை உரிய முறையில் பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதே தற்போதைய தேவை!! இனி வருங்காலங்களில் ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களும் ஆனைமங்கலச் செப்பேடுகளைப் பற்றிக் குறிப்பிடும் போது லைடென் பல்கலைக்கழகத்தில் உள்ள என்பதற்கு மாறாக தமிழ்நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ள என்ற பெருமையுடன் குறிப்பிடுவர் என்கிற றார் ஜம்புலிங்கம்.! இது மாதிரியான வரலாற்றுப் பின்புலங்களின் அடிப்படையில் தான் நான் இங்கு மத நல்லிணக்கம் மட்டுமே இருந்தது என்று தொடர்ந்து கூறி வருகிறேன். மதச்சார்பின்மை என்கிற வறட்டு வாதம் சுதந்திரத்திற்கு பிறகு வந்து பல உண்மைகளை மறைத்து விட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் போக மீதம் இருக்கும் பெரும்பான்மை மக்களை இந்துக்கள் என்று ஆங்கிலேயர் குறிப்பிட்டாலும் இங்கு மத நல்லிணக்கம் என்பது எல்லா வரலாற்று காலங்களிலும் நிகழ்ந்து வந்திருக்கிறது! அந்தப் பன்முகத்தன்மையை நிர்வகிக்கக்கூடிய சகிப்புத்தன்மை இந்துக்களுக்கு இடையே பரவலாகக் காணப்பட்டது ஒரு அற்புதம். ஆட்சி அதிகாரங்களிலும் கூட இங்கு மார்க்கங்களுக்கு மரியாதை இருந்தது என்பதைத்தான் இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளும் கூறுகின்றன! பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு இந்து மன்னராகிய ராஜராஜ சோழன் அசோகர் போன்றவர்கள் எவ்வளவு பாடுபட்டு உள்ளார்கள் என்பதை இந்தச் செப்பேடுகள் மூலம் அறிய வரும் பொழுது நமது பாரதத்தின் பெருமை வேறு எந்த உலகத்திலும் நிலைநாட்டப்பட முடியாத ஒன்றாக இருக்கும் என்பதோடு வேற்றுமையில் ஒற்றுமை என்கிற தத்துவத்தில் உலகின் தலைசிறந்த நாடாகவும் விளங்குகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதன் இறையாண்மையை நமது பிரதமர் இந்தச் செப்பேடுகளை மீட்டுக் கொண்டு வந்ததன் மூலம் உறுதி செய்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
06.06.2026
06.06.2026 முதலாம் நரேந்திரச் சோழன் நமது பிரதமர்! பிரதமரின் 12 -வது ஆண்டு ஆட்சி சாதனையை பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் ந...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment