Thursday, June 25, 2026

#ஆனைமங்கலச்செப்பேடுகள்

 #ஆனைமங்கலச்செப்பேடுகள்

சோழர் காலத்தைச் சார்ந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் 1700 களில் டச்சு வருகையின் போது நாகப்பட்டினத்திற்கு கிறிஸ்துவ மத பணிக்காக வந்த ஃபுளோரன்டியஸ் கேம்பர் என்பவரால் நெதர்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன!! . தமிழ் சமஸ்கிருத மொழிகளைக் கொண்ட இந்த 21 செப்பேடுகளும் சுமார் 30 கிலோ எடையுடையவை. இதில் பிணைக்கப்பட்டுள்ள செப்பு வளையத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது!! இந்தச் செப்பேடுகளில் பௌத்த விகாரைக்கு ராஜராஜ சோழன் அறக்கொடைகள் வழங்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன! நெதர்லாந்தின் லைடென் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தது! இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போது நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த சோழர்கால ஆனைமங்கலச் செப்பேடுகள் ஹேக் நகரில் மே 18 இல் நடைபெற்ற நல்லுறவு விழாவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன!! தமிழர்களின் மிகச்சிறந்த பொக்கிஷமாகப் போற்றப்படும் இந்த ஆணை மங்கலச் செப்பேடுகள் குறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த பௌத்த ஆய்வாளரான முனைவர் பா ஜம்புலிங்கம் கூறியது! நமது பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின் விளைவாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்துள்ளது! இந்தச் செப்பேடுகள் லைடென் செப்பேடுகள் என இதுவரை அழைக்கப்பட்டது! இனி மேல் அவை ஆனைமங்கலச் செப்பேடுகள் என்று அழைக்கப்படும்! மேலும் சோழ நாட்டைச் சேர்ந்த துறைமுகப் பட்டினமான நாகப்பட்டினத்தில் அசோகர் எழுப்பிய “பதரதிட்ட விகாரை” என்கிற பௌத்த விகாரை இருந்ததாகவும் அங்கு ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசாரிய தர்மபால தங்கி “மெட்டி பகரண்ட்டகதா” என்ற உரை நூலை பாலி மொழியில் எழுதியதாகவும் அங்கு மகா காச பதேரர். தங்கியிருந்தார் எனவும் மயிலை சீனி வெங்கடசாமி தனது பௌத்தமும் தமிழும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த வரலாறு எவ்வளவு முக்கியமானது என்று யோசித்துப் பார்க்கிறேன். 720இல் பல்லவ மன்னன் ராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம போத்தவர்மன் காலத்தில் சீனாவில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வருகிற பௌத்த சமய வணிகக் குழுக்களின் வழிபாட்டுக்காக ஒரு புத்த விகாரம் கட்டப்பட்டது! பின்னாளில் இது “சீனா கோயில்” என்று அழைக்கப்பட்டது! வெனிஸ் நாட்டிலிருந்து சீனாவுக்குச் சென்ற மார்க்கோபோலோ நாகப்பட்டினத்தில் சீனக் கோயில் என்ற ஒரு கோயில் இருந்ததாகக் கூறுகிறார்! இவ்வாறாக பரவத் தொடங்கிய பௌத்தமானது சோழ மன்னர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் வேரூன்றத் தொடங்கியது. 11ஆம் நூற்றாண்டில் கடாரம் என்று அழைக்கப்பட்ட நாட்டில் ஸ்ரீ விஜய நாட்டு மன்னரான சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ மார விஜயோத்துங்கவர்மன் சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் அனுமதியுடன் நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரம் கட்டியதாக பெரிய ஆனைமங்கலச் செப்பேடு கூறுகிறது!! ஸ்ரீமார விஜயோத்தங்கனின் தந்தையான சூளாமணி வர்மன் பெயரால் கட்டப்பட்டதால் அதற்கு சூளாமணி விகாரம் எனவும் பெயரிடப்பட்டது!!. அதன் பராமரிப்பிற்காக முதலாம் ராஜராஜன் தனது 21 வது ஆட்சியாண்டில் (ஆயிரத்து ஆறாம் ஆம் ஆண்டு) தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆனைமங்கலம் என்ற ஊரின் நில வருவாயைக் கொடையாக வழங்க வாய்மொழியாக ஆணையிடுகிறார்!! வாய் மொழியாக அளிக்கப்பட்ட இந்தக் கொடையானது அவரது மகன் முதலாம் ராஜேந்திரன் ( 1012 - 1044) காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டதுடன் செப்பேடு பட்டயமாகப் பொறிக்கப்பட்டது! அதுவே பெரிய ஆனைமங்கலச் செப்பேடு என அழைக்கப்படுகிறது!!. முதலாம் குலோத்துங்க சோழன் (1070 -1120) மேலும் சில ஊர்களைத் தந்ததாக சிறிய ஆனைமங்கலச் செப்பேடு கூறுகிறது! அப்போது இந்த விகாரம் “ராஜராஜ பெரும் பள்ளி” என அழைக்கப்பட்டது!! ராஜேந்திர சோழப் பெரும்பள்ளி என்ற மற்றொரு பௌத்த விகாரமும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது!! 21 ஏடுகளைக் கொண்ட முதல்த் தொகுதி ராஜேந்திர சோழனாலும் மூன்று ஏடுகளைக் கொண்ட இரண்டாவது தொகுதி குலோத்துங்கச் சோழனாலும் வழங்கப்பட்டது. 14 அங்குள்ள நீளமும் ஐந்து அங்குல அகலமும் கொண்ட 27 செப்பேடுகளைக் கொண்ட தொகுதியானது வெண்கல வளையத்தால் கோர்க்கப்பட்டுள்ளன!! அவ்வாறே மற்றொரு தொகுதியும் கோர்க்கப்பட்டுள்ளது!! அந்தக் காலத்தில் கல்வி பண்பாடு அரசியல் கட்டிடக்கலை பொருளாதார ஆட்சி அமைப்பு உள்ளிட்ட செய்திகளை இந்தச் செப்பேடுகள் தனக்குள் கொண்டுள்ளன!! முன் பகுதியில் சோழர்கால முத்திரை காணப்படுகிறது!! இந்தச் செப்பேடுகள் தமிழக சோழர் பௌத்த வரலாற்றுக்கு முக்கியமான பங்களிப்பதாகத் திகழ்கின்றன!! நாகப்பட்டினத்தில் இருந்த விகாரைகள் 1867 இல் இடிக்கப்பட்டு சுவடின்றி மறைந்து விட்டன என்கிறார்கள்!

No comments:

Post a Comment

06.06.2026

  06.06.2026 முதலாம் நரேந்திரச் சோழன் நமது பிரதமர்! பிரதமரின் 12 -வது ஆண்டு ஆட்சி சாதனையை பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் ந...