அண்டை நாட்டு நல்லுறவுகளில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் நமது பிரதமர் மோடி அவர்கள் இன்று உலகெங்கிலும் உள்ள ஜனநாயக அரசுகளின் நம்பிக்கைக்குரிய ஒரு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டின் பிரதமராகவும் இருக்கிறார்என்பது சர்வதேச அரங்கில் ஒரு முக்கியத்துவமான பார்வையாக இருக்கிறது.! ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகளில் ஜனநாயகப் பூர்வமாக இயங்கி வரும் இந்தியா அதன் சகிப்புத்தன்மையில் இன்னும் வலிமையாக இருப்பது தான் அதன் சிறப்பு. குறிப்பாகக் காசா பகுதி மக்களுக்கும் பாலஸ்தீனத்திற்கும் மிகச்சிறந்த உதவிகளைச் முடிந்த அளவு செய்து வரும் இந்தியா இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே சமாதானம் நிலவ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. சமயத்தில் அமெரிக்காவின் ஏக போகத்தையும் கண்டிக்கவும் செய்கிறது. அந்த வகையில் பிரதமர் மோடி அவர்களின் பயணங்கள் செயல்பாடுகள் உலக அரங்கில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.
இதற்கிடையில் சென்ற வாரத்தில் இந்தியா இலங்கை மின் இணைப்புத் திட்டம் ஒப்பந்தமாகி உள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்குமான மின்சார கட்டமைப்பு ஒப்பந்தம் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும் போது இந்தியாவில் இருந்து ஆயிரம் மெக்காவாட் மின்சாரத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அதே நேரத்தில் இலங்கையில் உ ற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை இந்தியாவிற்கு விற்கவும் முடியும். இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் டெல்லியில் இருநாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்ற பேச்சு வார்த்தை நடந்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இருநாட்டு அதிகாரிகளின் குழுகள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவிற்கு மத்திய அரசுமின் துறை செயலாளர் பங்கஜ் அகர்வாலும் இலங்கை எரிசக்தி அமைச்சக செயலாளர் உதயங்க ஹேம பாலாவும் தலைமை தாங்கினர். இது பற்றி இலங்கைக்காக இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் “இலங்கையின் எரிசக்திப் பாதுகாப்புக்கு இந்த ஆயிரம் மெக்காவாட் மின் இணைப்புத் திட்டம் மிகவும் முக்கியமானது. மின் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய இயலும். மேலும் உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணியை அது எட்டவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கை நல்லுறவில் இது மேலும் ஒரு அடுத்த கட்டப் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. வளர்ச்சிக்குரிய இந்த இருநாட்டு ஒப்பந்தங்கள். #IndoSrilankaagreement #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’
கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment