Thursday, October 8, 2026
Nov 22, 2025 #முதல்வர்ஸ்டாலின்பார்வைக்கு!
சட்டசபையில் மாநிலங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு தாமதிக்காமல் ஜனாதிபதியிடம் அனுப்பி ஒப்புதல் பெற்று அதை நிறைவேற்றும் வகையில் விரைவில் மாநில கவர்னர்கள் அனுமதி தர வேண்டும் என்றும் அப்படி அனுமதி தராமல் தமிழக கவர்னர் தாமதிப்பதாகவும் திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
ஆனால் உச்ச நீதிமன்றமோ இது விஷயத்தில் ஜனாதிபதியோ கவர்னர்களையோ நாங்கள் வலியுறுத்த முடியாது வேண்டுமானால் வழக்கு மன்றத்தில் நீங்கள் அதை பதிவு செய்யலாமே ஒழிய ஜனாதிபதியின் குடிமையியல் உரிமைகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டது.
இப்போது முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்கிறார் எனில் இந்தத் தாவாவின் மீது சட்ட திருத்தம் கொண்டு வந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டமன்ற மசோதாக்களை நிறைவேற்றும் படியான அனுமதியை கவர்னர் அந்தக் கெடுவிற்குள் கொடுக்க வேண்டும் அதற்காக நாங்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைப்போம் என்று கூறுகிறார்.
நீங்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்ததுதான் உங்கள் வரலாறு முழுக்க தெரியுமே. மாநில சுயாட்சி கொண்டு வருவோம் 1974 முதல் என்றீர்கள். மத்திய ஆட்சியில் நீண்ட காலமாக திமுக பங்கேற்ற 18 வருடங்கள் ஆயிற்று. என்ன செய்தீர்கள். இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்றீர்கள் கூட்டணி சார்பில் மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்றும் கூட அதை உங்களால் ஒழிக்க முடியவில்லை. அப்போது அதிகார சுக ஏதாந்த நித்திரையில் இருந்தீர்கள். ஆட்சியில் அதே நீட்டை தந்தீர்கள்.ஜல்லி கட்டை தடை என்றீர்கள்.அதுதான் உங்கள் #திராவிடமாடல். பின்,நீட்டை ஒழிப்போம் என்றீர்கள்….
இந்தியை எங்களிடம் திணிக்க முடியாது என்றீர்கள். அதை ஒரு காலத்திலும் நடக்க விட மாட்டோம் என்றீர்கள்.ஆனால் நீங்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக வைத்திருக்கிறீர்கள். உங்கள் குழந்தைகளெல்லாம் இந்தியை படித்துக் கொண்டிருக்கிறார்கள் ஊருக்கு மட்டும் உபதேசம் உங்களுக்கு இல்லையா இதுதான் ஓயாது உழைக்கும் லட்சணமா? முன்னாள் ஆளுநர் புரோகித்தை ராஜ் பவனில் சந்தித்த பின் நீங்கள் அறிவித்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை
கைவிட்ட தீரர்கள் நீங்கள்
மாநில சுயாட்சியெல்லாம் பேசிவிட்டு இப்பொழுது மத்திய மாநில அதிகார உறவுகளைப் பேண வேண்டும் என்று அதற்கு மற்றொரு ஒரு தனிக்குழுவை அமைத்துள்ளீர்கள்.
ஒன்றை ஆவேசமாகத் துவங்குவது. ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பது. பிறகு அப்படியே பின் வாங்கிக் கொள்வது. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசுவது. எது முடியும் எது முடியாது என்று யோசிக்கக்கூட திராணியற்ற ஆட்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு போராடுவோம் என்று பொதுமக்களிடம் நியாயம் பேசுவது. இதுவரை ஏதாவது உருப்படியாக நடந்து இருக்கிறதா? 90% வாக்குறுதிகள் நிறைவேற்றவே இல்லை! சொன்னதையும் செய்வோம்! சொல்லாததையும் செய்வோம் !! என்று மேடையிலே முழங்கிக் கொண்டு எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள்.
எல்லாம் இதோ புலி வருது புலி வருது என்கிற கதைதான். நடைமுறையில் ஏதொன்றும் வந்தபாடு இல்லை. சமூக நீதி சமூக நீதி என்றீர்கள் உங்கள் ஆட்சிக்காலத்தில் இல்லாத சமூகநீதிகளை எல்லாம் ஜெயலலிதா தன் காலத்திலே நிறைவேற்றி விட்டார். இட ஒதுக்கீடு சார்ந்த அந்த ஷெட்யூல் பிரிவுகளை அரசியல் சாசனத்தில் அவர்தான் இணைத்தார்.
எதைத்தான் நீங்கள் உருப்படியாகச் செய்தீர்கள். காவேரி பிரச்சனையோ முல்லை பெரியார் பிரச்சனையோ 19 நதிநீர் தாவாக்களையோ அல்லது எதற்குத்தான் உங்கள் ஆட்சியில் அதற்கான தீர்ப்பு கிடைத்தது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று சபதம் எல்லாம் போட்டு கடைசியில் டன் கணக்கில் மண்ணள்ளிப்போட்டு அந்த ஊழலையே மூடி மறைத்தீர்கள். கச்சத்தீவை திரும்பப் பெறுவோம் என்றீர்கள்!
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் முழுக்க சந்தர்ப்பவாதிகள். ஒருவருக்கு கூட எந்தத் தொலைநோக்கு பார்வையும் இல்லை? அறம் சார்ந்த அரசியல் பார்வையோ தொண்டுள்ளமோ ஜனநாயகத் தன்மையோ கிடையாது. ஒட்டுமொத்தமாக இவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு வியாபாரம் செய்யும் உங்கள் கம்பெனி தன் குடும்பம் தன் வாரிசு என்று ஆகிவிட்ட பிறகு நீங்கள் மேற்கொண்ட வாக்குறுதிகளை எல்லாம் கொடுக்காமலே ஏகபோகமாக ஆட்சியை நடத்தலாம். தேர்தல்கள் நெருங்கும் போது மட்டும் மாநில உரிமை என்று பேசிக்கொண்டே காலத்தைக் கடத்தவும் பழகி விட்டீர்கள்! 55 ஆண்டு கால மேலாக வரலாற்றை உங்களுக்கு உங்கள் குடும்பங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டீர்கள். ஊழல், பணம் கொடுத்து ஓட்டை தேர்தலில் விலைக்கு வாங்குவது அதன் மூலம் குடும்ப ஆடசி அமைப்பது.அதுதான் உங்க அடிப்படை
#tamilnadupolitics
#திமுக
#DMKDestroyedTN
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’
கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment