Thursday, October 8, 2026

Nov 17, 2025 மரியாதைக்குரிய வைகோ அவர்களே!

 மரியாதைக்குரிய வைகோ அவர்களே!

நீங்கள் 1996 வரையில் நேர்மையாகவும் நெருப்பாகவும் இருந்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்கள் 1980களில் நாடாளுமன்றம் செல்வதற்கும் பிரபாகரனைச் சந்திப்பதற்கும் உங்களுடைய உரைகளைஅறிக்கைகளாகப் பத்திரிகைகளில் சேர்ப்பதற்கும் உறுதுணையாக இருந்தவன் நான். அதேபோல் நீங்கள் திமுகவிலிருந்து வெளியே வந்த போது கலைஞரைப் பகைத்துக் கொண்டு பொன் முத்துராமலிங்கம் தென் மாவட்டங்கள் தோறும் உங்களை தூக்கிச் சுமந்து ஒரு மாற்று அரசியல் தலைவராக வைகோ விளங்குகிறார் என்று சொல்லிப்பாடுபட்டவரும் அவர்தான். மதுரை மாவட்டங்கள் முழுக்க கூட்டங்கள் போட்டடார். அதேபோல் வீரபாண்டி ஆறுமுகம், காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி டி ஏ கே இலக்குமணன், குமரி ஆல்பன போன்றவர்கள் பலர் எல்லாம் முழு ஆதரவு கொடுத்து உங்கள் பின்னால் திமுகவில் இருந்தனர்.. நீங்கள் செல்வாக்குப் பெற்ற பின் அக்டோபர் 93 இல் சில நாட்களுக்கு பிறகு உங்களுக்கு பின்னால் பலன் கிடைக்கும் என்று வந்தவர்கள்தான் மு கண்ணப்பன் செஞ்சி ராமச்சந்திரன் எல். கணேசன் போன்றவர்கள்! நீங்கள் அவர்களுக்கு அளவுக்கு மீறி இடம் கொடுத்து உங்கள் இடத்தை வழங்கி அரசியல் பார்வையைப் புத்திசாலித்தனமாகக் காட்டிக் கொண்டீர்கள். அவர்களுக்கு கட்சியில் பல புதிய பதவிகளை தேர்தலில் கூட்டணியில் தந்தீர்கள். கட்சிக்குப் புதியவர்கள் வேண்டும் என்று தேடித் தேடி பலரையும் ஆளாக்கி எங்களையெல்லாம் ஓரங்கட்டி வைத்தீர்கள். உங்களுக்காகக் கடுமையாக உழைத்தவர்கள் நாங்கள். உங்கள் மனசாட்சிக்கு நன்றாகத் தெரியும். அதைப்பேசி இனிப் பயனில்லை. கண்டவர்கள் எல்லாம் வளர்த்து விட்ட உங்கள் தன்னகங்காரத்திற்கு கிடைக்கும் பரிசுகள் தான் இன்று நீங்கள் அனுபவிக்கும் சங்கடங்கள். நான் கேட்கிறேன்?உங்களைத் திமுகவிலிருந்து தூக்கி எறியும் போது இவர்களெல்லாம் உங்களுடன் இருந்தார்களா? பின்னால் வந்தார்களா? போகட்டும்! எனக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தும் வடசென்னை நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர் வாய்ப்பை வாங்கித் தர மறுத்தீர்கள்!கேட்டால் நமது கட்சிக்கான கூட்டணியில் இரண்டு நாயுடுகளுக்கு இடம் ஒதுக்க மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு அதே சந்தர்ப்பத்தில் இரண்டு வன்னியர்களுக்கும் இரண்டு கவுண்டர்களுக்கு அந்தக் கூட்டணியில் சீட்டு கிடைத்த போது அதைக் குறித்து நான் நியாயமாகக் கேள்விகள் கேட்டபோது மௌனம் காத்தீர்கள். போகட்டும்! இன்றைக்கு எங்களைப் போன்றவர்கள் உங்களுடன் இருந்திருந்தால் இப்படி அற்பத்தனமான குற்றச்சாட்டுகள் உங்கள் மேல் வந்திருக்குமா? இவர்களெல்லாம் எங்கிருந்து வந்தார்கள்? நீங்கள் கூட்டி அரவணைத்து வைத்திருந்தவர்கள் தானே தார தம்மியும் தெரியாமல் இப்படிப் பேசுகிறார்கள்? தொடக்கத்தில் அரசியலில் சுயமாக வளர்ந்த நாங்கள் எல்லாம் உங்களுடன் இருந்தோம். இன்று உங்களைப் பற்றி பேசுபவர்கள் யார் என்று பார்த்தால் எல்லாம் நீங்கள் வளர்த்து விட்டவர்கள் தான்! எண்ணி பாருங்கள் உங்கள் அரசியல் பாடம் பலருக்குப் பால பாடம்! அதேபோல் உங்களிடம் இருந்து நாங்கள் பட்ட பாடும் வேதனைகளும் கூட பலருக்கும் பாடம். இவற்றையெல்லாம் இப்போது வந்து பேசுவது தேவையில்லை தான். ஆனால் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் 1998-க்கு பிறகு நாங்கள் எவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகி வேதனைப்பட்டு இருப்போம் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் தகுதிக்கு இப்படியான தேவையற்ற குற்றச்சாட்டுகளைச் சந்திக்க நேர்வது வருத்தமாக இருந்தாலும் இவையெல்லாம் நீங்களே தேடிக் கொண்டதுதான் என்பதன்றி இதில் வேற என்ன சொல்ல இருக்கிறது? #vaiko #ksrpost






No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...