Thursday, October 8, 2026

Nov 15, 2025 என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்ட ஒரு தலைவரின் அணுகு முறையாகவும் இருந்தது.

 என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்ட ஒரு தலைவரின் அணுகு முறையாகவும் இருந்தது. மலையைப் புரட்டுவேன் மணலைக் கயிறாகத் திரிப்பேன் என்கிற புரட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசாமல் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயமாகச்செய்வேன் அதற்காகத்தான் இந்தத் தலைமைப் பதவிக்கு நான் வந்துள்ளேன் என்று மக்கள் மொழியில் சொல்லி மிகப் பண்பாகவும் உண்மையாகவும் மக்களிடையே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.

மதிப்புறு தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் அந்தந்த மாவட்ட பிரச்சனைகளை கேட்டு அறிந்ததும் அதற்கான ஆலோசனைகளைச் சொல்லி மக்களை சந்தித்த வீடியோகள் இணைக்கப்பட்டுள்ளது. அதுபோக பொது மேடைகளில் கூட்டங்களில் நயினார் நாகேந்திரன் அவர்கள் உரையாற்றியதும் இன்றைய ஆளும் கட்சியினுடைய போக்குகளை விமர்சித்ததுமான இரண்டாவது ஒளிப்படக் காட்சியும் அதன் வீடியோவும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைவராக வளர்ந்து வரும் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியைச் சார்ந்தவராக இருந்தாலும் கூட மக்கள் பேசும் மொழியில் குறிப்பாக கிராமப்புற எளிமையான மொழிகளில் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் இணக்கமாக இந்த பயணத்தில் தொடர்ந்து வந்தது மிக அருமை.தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இந்தப் பயணத்தை மேற்கொண்ட போது தனது பொறுமையாலும் அறிவாற்றாலாலும் உண்மையை பேசுதலின் பொருட்டு அவர் மிகுந்த வசீகரமாக இருந்தார். அவருடன் நான் இந்த நாட்கள் முழுக்க பயணித்த போது இந்த பயணம் முழுமையான வெற்றியை அடையும் என்று மனப் பூர்வமாகத் தோன்றியது. அவருடன் பயணித்த இந்த குறைந்த நாட்களை வைத்து அந்த வெற்றியை நோக்கி பயணமாக இதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ராபர்ட் ப்ராஸ்ட் எனும் கவிஞர் சொல்வது போல பயணம் தீராததுதான். இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் தான். ஆனால் அது எவ்வளவு நெடுந்தூரம் செல்லக்கூடியதாக இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கையான உத்தரவாதங்களை கொடுப்பவராக அவர்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவராக நமது தமிழ்நாட்டு பாரதிய ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் மிகுந்த நிதானத்துடன் விளங்குகிறார். என் அனுபவத்திலிருந்து அதுவும் இந்த அரசியலில் 54 ஆண்டு காலம் பலரையும் பார்த்த வகையில் இவர் நிச்சயமாக மக்களின் மத்தியில் ஒரு நிறைவான நம்பிக்கைக்குரிய இடத்தைப் பெறுவார்.! தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக மாற்றுகளை உருவாக்கக்கூடிய தலைமை பண்புடன் இந்த அரசியலில் வலம் வருவார் என்று எனக்குத் தோன்றியது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. அவர் மக்களிடைய பெறும் வரவேற்பையும் வைத்துத் தான் கூறுகிறேன். காரில் பயணிக்கும் போது காரை விட்டு இறங்கி மக்களிடம் கை கொடுக்கும் போதும் அவர்களிடம் பெயர் சொல்லி பொறுமையாகக் குறைகளை கேட்டு அறிந்த போதும் ஒரு பக்குவமான முகத்தோற்றத்துடன் அதில் ஒரு உண்மையான அக்கறையும் இருந்ததை நான் வெகுவாக ரசித்தேன். ஏற்கனவே அரசியல் பொறுப்புகளில் இருந்தவராதலால் அமைச்சராகவும் இருந்து வந்தவர் என்பதனால் அவர் மக்களின் நாடி என்னவென்பதை அறிந்தவராகவே இருக்கிறார். ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் பொழுதும் முன்கூட்டியே அந்தப் பகுதியில் என்ன குறை நெடுநாளாக தீர்க்கப்படாமல் இருக்கிறது என்பதை அறிந்தவராகவும் அதே சமயம் அந்த பகுதியில் பயணிக்கும் போது முன்னர் தானும் தன்னையும் அறிந்த அடிமட்டத்தொண்டர்களையும் பெயரைச் சொல்லி அழைத்து நலமாக இருக்கிறீர்களா என்று அவர் விசாரித்த ஞாபக சக்தியும் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். கடந்த காலங்களில் நான் காமராஜர், கலைஞர்,வைகோ வுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டது கலைஞருடன் பயணங்களில் கலந்து கொண்டது. இன்னும் சொன்னால் காமராஜரோடு பழகிய காலத்தில் இருந்து அவருடனான பயணங்களிலும் கூட நான் இளைஞர் காங்கிரஸில் இருந்தபோது செயல்பட்டு இருக்கிறேன். அந்தப் பயணங்களின் நோக்கம் எவ்வாறு மக்களின் குறைகளை தெரிந்து கொள்வதற்காக இருந்ததோ அதேபோலத்தான் நமது அன்பிற்குரிய தமிழக பாரதிய ஜனதா தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் அணுகுமுறையும் இருந்ததை எண்ணி மனமகிழ்ந்தேன். அவரும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள தொழிலாளர்கள் விவசாயிகள் சிறு தொழில் செய்யும் வணிகர்கள் பலரையும் சந்தித்தும் இதுவரை நிறைவேறாமல் கிடக்கும் கோரிக்கைகளையும் பொறுமையாகக் கேட்டு அறிந்து கொண்டார். பலதரப்பு மக்களையும் இந்த பயணத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் சந்திப்பதில் உற்சாகமாக இருந்தார். யாரையும் கீழ்த்தரமாக விமர்சிக்காமல் எல்லோரையும் அரவணைத்துக் கொண்டும் குறைகளை நிறைவேற்றாமல் இருக்கக்கூடிய இன்றைய அரசின் மெத்தனங்களையும் அவர் அறிந்து கொண்டார். ஒரு அருமையான என்நீண்ட கால நண்பராகிய நயினார் நாகேந்திரன் அவர்களுக்காகவும் மோடி,அமித்ஷா அவர்கள் அரவணைப்பாலும் அவர்கள் செய்து கொண்டிருக்கும் உண்மையான மக்கள் நோக்கங்கள் குறிப்பாக இந்தியா முழுமைக்கும்2/3

No comments:

Post a Comment

Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.