நேற்று #உச்சநீதிமன்றத்தில் இந்திய ஜனாதிபதி குறித்த ரெஃபரன்ஸ் #Presidentialreference தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விவரங்களை இன்றைய 21-11-2025 டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை விரிவாக பதிவு செய்துள்ளது. இந்து ஆங்கில பத்திரிக்கையிலும் அது பற்றிய தலைப்புச் செய்தியாக குறிப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் நம் தமிழ்நாட்டில் உள்ள திமுக வழக்கறிஞர்களுக்கு எப்போதும் திமுக அடிமைச் சேவகம். உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பது சட்டரீதியான ஆலோசனை மட்டுமே என திமுக சுயமாக பம்மாத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது
தமிழ்த்தொலைகாட்சிகளின் மொத்த பேச்சுக்களையும் ஒரே வாக்கியத்தில் அடக்கிவிடலாம் - “திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என தமிழகத்தை ஏமாற்றி வருகிறது மேற்கண்ட இந்திய அரசியல் இறையாண்மைச் சட்டங்களை எப்பொழுதுமே விரிவாக வாசித்து புரிந்து கொள்ளாத இவர்கள் எதை எதையோ பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். நமது ஜனாதிபதி அவர்கள் மீதும் கவர்னர்கள் மீதும் உச்ச நீதிமன்றமோ உயர்நீதிமன்றங்களோ எந்த ஒரு கட்டளையும் இட முடியாது. மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் எடுக்கும் முடிவை விமர்சிக்கவும் முடியாது என்பதுதான் இங்கு நெடுங்காலமாக நடந்து வரும் மரபு உரிமையாக இருக்கிறது. எப்படி இங்கிலாந்து ராணியையோ மன்னர்களையோ அங்குள்ள நீதிமன்றங்களோ அல்லது பிறரோ விசாரணை வளயத்திற்குள் கொண்டு வர முடியாதோ அதுபோலத்தான் இந்தியாவில் ஜனாதிபதியின் குடிமையியல் உரிமைகளை மேற்சொன்ன இரண்டு நீதிமன்றங்களும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முடியாது. இதையெல்லாம் புரியாத திமுக வழக்கறிஞர்கள் இந்தச் சட்டத்தைப் பற்றி ஏதாவது சொல்லி அதை நம்பிக் கொண்டிருக்கிற முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் சென்று இப்படியெல்லாம் ரெஃபரன்ஸ் கொண்டுவர முடியாது என்று எதையெதையோ பிதற்றி நமக்குச் சாதகமாக அந்தத் தீர்ப்பு இல்லை எனவே நாம் வழக்கு போடுவோம் என்றெல்லாம் வாக்குறுதி தருகிறார்கள். அப்படியான வழக்கறிஞர்களுக்குத்தான் ஸ்டாலின் அரசாங்கம் ராஜ்யசபா எம்பி பதவி எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தன்னைச் சுற்றி இப்படி ஜால்ராக்களை வைத்துக் கொண்டிருக்கும் முதல்வருக்கு என்ன தெரியும்? முதல்வர் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால் கலைஞர் கைதின் போது எனது வழக்கறிஞர் பணி எப்படி இருந்தது என்பதை மறு நினைவுக்கு கொண்டு வருவார். அத்தகைய வேகத்தோடு சட்டத்துறையில் இயங்கிய என்னை அன்றைய முரசொலி மாறனே கைகுலுக்கி மற்றும் திமுக பொதுக்குழுவில் பாராட்டுகளைத் தெரிவித்தார் என்பதையும் இவ்விடத்தில் நினைவூட்டுகிறேன். #SupremeCourt #presidentcialreference #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost
No comments:
Post a Comment