இன்றைய பிஹார், 1977 ஆம் ஆண்டுகளின் மேற்கு வங்காளத்தை ஒத்து இருக்கிறது.
நக்சல்பாரி எழுச்சியின் முதல் அலை குருதியாலும், நெருப்பாலும் அடக்கி ஒடுக்கப்பட்ட காலம் அது. ஆனால் நக்சல் எழுச்சிக்கு வித்திட்ட அடிப்படை காரணங்கள் அப்படியே இருந்தன. ஜோதி பாசு தலைமையிலான சிபிஐ எம் கட்சி நக்சல் எழுச்சிக்கு காரணமான உழுபவர்களுக்கே நிலம் என்பதை அடிப்படை முழக்கமாக முன்வைத்தது. பாதி உறுப்பினர்களை நக்சல் பிளவிலும் அடுத்து வந்த சண்டைகளிலும் இழந்து இருந்தாலும் cpim இந்த அரசியலைக் கொண்டு தன்னை மறுசீரமைத்துக் கொண்டது. இழந்திருந்த அறிவாளி வர்க்கத்தின் ஆதரவை திரும்பப் பெற்றது. காங்கிரசின் ஆயுதம் தாங்கிய குண்டர் படைகள், மாநிலம் முழுக்க குவிக்கப் பட்டிருந்த அரசு படைகள், எல்லா வற்றையும் கடந்து சிபிஐ எம் வென்றது. பின்பு ஆப்பரேஷன் பார்க்கா தொடங்கப் பட்டது. குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப் பட்டது, கிராம வறுமையும், நிலப்பிரபுத்துவ கொடுமைகளும் பெரிய அளவுக்கு ஒழிக்கப் பட்டது வரலாறு. வங்கத்தை விட வலிமையான நக்சல் இயக்கம் பீகாரில் இருந்தது. இப்போது பலவீனப் பட்டு இருந்தாலும் அதே சமூக நிலை நீடிக்கிறது. அடிப்படை பிரச்சினை நில உரிமையும், விவசாயிகள் மீது நிகழ்த்தப் படும் சுரண்டலும் தான். ஆனால் காங்கிரசு மற்றும் ஆர் ஜே டி இதைத் தொடவே பயந்தன. எனவே சவசவத்துப் போன பழைய முழக்கங்களை முன் வைத்தன. மதம், சாதி, பணம், தேர்தல் தந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்தும் அதிதீவிர வலது சாரிகளும், பிற்போக்காளர்களுமான NDA வை இப்படி அரை மனதான முயற்சிகளால் எதிர் கொள்ள முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment