Wednesday, October 7, 2026

Nov 28, 2025 இந்திரா காந்தி அவர்களால் அவசரகாலச் சட்டம் பிரயோகப்படுத்தப்பட்டு;

 இந்திரா காந்தி அவர்களால் அவசரகாலச் சட்டம் பிரயோகப்படுத்தப்பட்டு;அரசியல் சாசனத்தின் மாபெரும் மகிமையை அதன் இறையாண்மையை இந்திரா காந்தி எவ்வளவு சீரழித்தார் என்பதற்கு இந்த கடந்த கால மிசா காலங்களே சாட்சி. அதன் பாதிப்புகள் விளைவுகள் இந்திய வரலாற்றில் மறக்க முடியாதவையாக இன்று வரை தொடர்கின்றன.

42வது அரசியல் சாசனச் சட்டத் திருத்தத்தில் தன்னுடைய அதிகாரத்திற்கும் ஏதோச்சதிகாரத்திற்கும் சாதகமாக தன் மனம் போன போக்கில் நடந்ததும் அல்லாமல் தன்னை எதிர்ப்பதாகச் சொன்ன அனைவரையும் சிறையில் அடைத்து ஜனநாயகத்தையே இந்திரா காந்தி அம்மையார் கேலிக்கூத்தாக்கினார். அதையெல்லாம் மறந்துவிட்டு இன்றைக்கு அவரது பேரன் ராகுல் காந்தி அரசியல் சாசன சட்டத்தை பாதுகாப்போம் என்று இந்த சட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இந்திரா அம்மையாருக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து அன்றைக்கு அந்த சாசனத்தைப்பொதுவில் வைத்து எரித்த திமுகவும் இன்றைக்கு ராகுலுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அரசியல் சட்டத்தைக் காப்போம் என்று கூறுகிறார்கள். இதையெல்லாம் எப்படிப் பார்ப்பது என்னவென்று சொல்வது. கூட்டணி தர்மம் ஆவது கொள்கை பிடிப்பாவது எல்லாம் சந்தர்ப்பவாதம்தான். வேறு என்ன சொல்ல? docs.google.com/document/d/1Be #Constitution #42amendments #emergence #indiragandhi #DMKDestroyedTN #rahulgandhifailure #அரசியல்சாசனம் #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்



No comments:

Post a Comment

Nov 27, 2025 Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country,

  Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country, home mi...