Wednesday, October 7, 2026

Nov 29, 2025 #மோடியும்_ஈழத்தமிழர்களும்

 #மோடியும்_ஈழத்தமிழர்களும்

———————————————- சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவு: 'டிட்வா' புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு என் இரங்கல்கள். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் விரை வில் மீண்டு வர என்னுடைய பிரார்த்தனைகள். இந்த நெருக்கடியான நேரத்தில், 'ஆப்பரேஷன் சாகர் பந்து'வின் கீழ், கப்பலில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான மனிதாபிமான உதவிகளை இந்தியா அவசரமாக அனுப்பி உள்ளது. நிலைமை மேம்படவும் மேலும் உதவிகள் வழங்கவும் தயாராக இருக்கிறோம். என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடும் மழை காரணமாக ஏறத்தாழ இலங்கையின் 16 மாவட்டங்கள் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளன. பதுல்லா மட்டக்களப்பு நுவரேலியா போன்ற இடங்களில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் மண் சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி இறந்து விட்டார்கள் என்று செய்திகள் வருகின்றன.ஏற்கனவே பொருளாதார மந்தத்தில் இருக்கும் இலங்கை மக்களுக்கு இந்தப் புயல் மழை மோசமான விளைவுகளை உண்டாக்கி இருக்கிறது. இந்தியக் கப்பற்படை முழு வீச்சில் அங்கே பேரிடர் பணியில் இறங்கி இருப்பது அம்மக்களுக்கு கொஞ்சமேனும் ஆறுதலாக இருக்கும். மேற்கு கிழக்கு ஆசிய நாடுகளில் இயற்கை விளைவுகள் உண்டாகும் பொழுது மிகப்பெரிய உதவிகரமான நாடாக இந்தியா இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது பிரதமர் மோடி அவர்கள் இது மாதிரியான காலங்களில் தீர்க்கமான முடிவை எடுத்து அண்டை நாடுகளின் நன்மதிப்பை பெறுவதில் முக்கியமானவராக இருக்கிறார். கடந்த பத்து வருடங்களில் பாலஸ்தீன காசா பகுதிக்கான உதவி பங்களாதேஷ் இலங்கை மியான்மர் என பல பகுதிகளில் இந்தியாவில் உதவிக் கரங்கள் நீண்டு இருக்கின்றன என்பதை மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. குறிப்பாக வணிக நலன்கள் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த ஒப்பந்தங்களையும் தாண்டி மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் இந்தியாவின் கவனங்கள் மற்றும் உதவிகள் இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் உலகளாவிய தலைமைப் பண்பு சார்ந்த அக்கறையுடன் இருக்கிறார். #srilankatamils_modi #இலங்கைதமிழர்கள்_மோடி #eelamtamils_modi #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



No comments:

Post a Comment

Nov 27, 2025 Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country,

  Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country, home mi...