தமிழக அரசியல் களம் மாறுகிறதா?
விஜய் கட்சி தவெகவுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் துல்லியமாகக் காய்கள் நகர்த்தப்படுகின்றன. திமுகவின் சாதுர்யமான அரசியல் ஆட்டம் இது. அதாவது 2026 ல் போட்டி திமுக - vs - தவெக மட்டும்தான் என்ற புள்ளியை நோக்கி நகர்த்தும் முயற்சி இது. செங்கோட்டையன் சபாநாயகரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தார் - அது சட்டரீதியான நடைமுறை. சேகர்பாபு எதற்கு இரண்டு முறை சந்தித்தார்? பழைய நண்பர் - அதிமுகவில் ஆதிநாள் நண்பர்கள் - எனவே சந்தித்தார். இன்று திமுக வாரிசுத் தலைவருக்குப் பிறந்த நாள் - எனவே தவெகவில் இணைவதை ஒருநாள் தள்ளிப்போடுங்கள் - இன்று உங்கள் செய்தி முக்கியத்துவம் பெறாமல் போய்விடும் - என்று சொல்லச் சந்தித்தார். இவை எல்லாம் இறக்கை கட்டிப் பறக்கும் வெவ்வேறு ஊகங்களே! இவற்றை நான் நம்பத் தயாராக இல்லை. தன் கட்சியில் சேராமல், தங்களை விமர்சிக்கும் கட்சியில் சேரப் போகிறார் - அவரைப் போய் சந்தித்து - அதுவும் 2 முறை சந்தித்து மணிக்கணக்கில் அளவளாவ வேண்டிய தேவை என்ன? "தவெக வில் இணைவதை நாளைக்கு வைத்துக் கொள்ளுங்கள்" - என்பதை ஃபோனில் சொல்லியிருக்கலாமே? கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை என்பதாக இருந்தது. அதைத் தகர்க்கும் பொறுப்பு செந்தில் பாலாஜியிடம் தரப்பட்டது - அதை அவர் பண வலிமையால் நிகழ்த்திக் காட்டினார் - உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத் தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல் வரை பணவலிமை கை கொடுத்தது. ஆனால் இது நீண்ட நாள் கை கொடுக்காது - மேலும் எத்தனை நாளைக்கு இப்படி பணவலிமையை மட்டுமே நம்பி இருக்க முடியும்? எனவே கொங்கு சமூகத்தவரின் வோட்டு வங்கி சிதைக்கப்பட வேண்டும் - அது பெருமளவை அதிமுகவுக்குதான் என்ற நிலை அமைப்பு ரீதியாக மாறவேண்டும். பணவலிமையால் மாற்றுவது வேறு - DEMOGRAPHIC SHIFT என்பது வேறு. ஒரு பெரும் சமூகமாக திரண்டு அதிமுக பக்கம் நிற்பதை - உடைத்து இதோ பாருங்கள் உங்களிலேயே ஒரு ஆள் - என்று காட்ட வேண்டும். எனவே அதிமுகவின் SOCIAL BASE என்பதை அதை ஆதரிக்கும் பெரும் சமூகம் எதுவோ - அதை வைத்தே உடைக்க வேண்டும். அந்த உடைப்பின் பலன் நமக்கு வராமல் போகலாம் - அந்தப் பலன் தவெகவுக்கே போகட்டும் - ஆனால் அதிமுகவின் ஆதரவு வோட்டுக் கட்டுமானத்தை உடைக்க வேண்டும். அதாவது திமுக எதிர்ப்பு வாக்குகள் - தவெக, அதிமுக என்று சிதற வேண்டும். தங்கள் வாக்கு அப்படியே இருக்கும் - கிறிஸ்தவ மிஷனரிகள் இருக்கின்றன - ஜமாத்துக்கள் இருக்கின்றன - ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் 0 - பூஜ்ஜியத்தில் இருந்து தங்களுக்கு விழுந்த வோட்டுக்களை எண்ணும் போது - தாங்கள் மட்டும் ஒவ்வொரு தொகுதியிலும் 15 லிருந்து தங்கள் வோட்டுக்களை எண்ணத் தொடங்கலாம் - மிஷனரி, ஜமாத், ஜாக்டோ ஜியோ ஆதரவில். அப்படி மற்றவர்கள் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும் அந்த நிலையையும் பிளவு படுத்தி - திமுக எதிர்ப்பு வோட்டுக்களை சிதற வைத்தால் தங்கள் வெற்றி மேலும் இலகுவாகும்! ADMK - BJP கூட்டணி (NDA) எதிராக திமுக கூட்டணி என்று இருக்கும் 2 முனைப் போட்டியை விட - அதில் 3 ஆவது ஆள் ஒருவன் களமிறங்கி அவன் அதை 3 முனையாக மாற்றினால் அது தனக்கு ஆதாயம்... அந்த மூன்றாவது ஆளை - "இவன்தான் பெரிய வஸ்தாது! இவனுக்கும் எனக்கும்தான் போட்டி!"- என்று காட்டி மக்களை நம்ப வைக்க வேண்டும்! இது அத்தனையும் திமுக செய்யும் துல்லியமான அரசியல் தந்திரம். அதைச் செய்ய திமுகவுக்கு உரிமை உண்டு - ஆனால் அந்தப் பொறியில் சிக்காமல் தங்களை லாகவமாக முன்னிறுத்திக் கொள்ள பாஜக (NDA) நிறையவே உழைக்க வேண்டி இருக்கும்! "ஜெயிக்கப் போவது திமுகதான் -இரண்டாவது இடத்துக்குதான் தவெகவா? அதிமுகவா? என்று போட்டி"- இப்படி ஒரு NARRATIVE செட் செய்யப்படும். இந்த NARRATIVE ஐ செட் செய்ய திமுக ஆதரவு ஊடகங்கள், யூடியூபர்கள் நன்றாக மெனக்கிடுவார். இந்த மாதிரி PUSHED ASIDE - மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படுதல் - இரண்டாம் இடத்துக்குதான் போட்டி... போன்ற NARRATIVE களை முறியடிக்க... அண்ணாமலை தீவிரமாகக் களமிறக்கப்பட வேண்டும். அப்போதுதான் களம் NDA - TMK - DMK என்ற முக்கோணப் போட்டியாக மாறும். இதே நிலை 2026 வரை நீடித்தால் - "வெல்லப் போவது DMK - இரண்டாவது வலுவான சக்தி TVK தான் - ALSO RAN ADMK / BJP"- என்று ஆகிவிடும். அந்தப் புள்ளியை நோக்கித்தான் செங்கோட்டையனை நகர்த்திவிட்டுள்ளது திமுக என்று நான் திடமாக நம்புகிறேன்! அதாவது மக்கள் முன்பு திமுக இரண்டு சாய்ஸ்களை வைக்க விரும்புகிறது. 1) மோசமான நாங்கள் 2) எங்களைவிட மோசமான விஜய் கூட்டம்- யார் வேண்டும் உங்களுக்கு? களம் இப்படி எக்குத் தப்பாக மாறுமானால் அது நாட்டுக்கு நல்லது அல்ல….Wednesday, October 7, 2026
Subscribe to:
Post Comments (Atom)
Nov 27, 2025 Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country,
Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country, home mi...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment