தி.ஜாவின் கதைப்பெண்கள்
அலங்காரத்தம்மாள் - அம்மா வந்தாள்- 1966: Spoiler ahead ஊரில் எல்லோருக்கும் தெரிந்த பின்னரே வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும் என்பார்கள். வீட்டிலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது, அப்புவுக்குத் தான் தெரியவில்லை. அவன் பார்வையில் பாரம்பரிய பிராமணப் பெண்மையின் அமைதியான, பக்தி நிறைந்த வடிவம் அவள். உள்ளே ஆழமான குற்ற உணர்வு, தனிமை, அன்பு மற்றும் எதிர்ப்பு ஆகியவை பின்னிப் பிணைந்து இருப்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சென்னை வாழ்வு, வேதாந்தப் பாடங்கள், கோயில் வழிபாடு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் ஊறப்போகும் பெண்களுக்கு வழக்கமாக எல்லோரும் வைக்கும் லஷ்மி, சரஸ்வதி என்று வைக்கவில்லை. " அலங்காரம்" பெயர் மட்டும் வித்தியாசமில்லை. அவள் வெளிப்படையாகப் பேசுபவள் அல்ல. பெரும்பாலும் அமைதியாகக் கவனிப்பவள், சில சமயம் கடுமையாகத் திருப்பி அடிப்பவள். தண்டபாணியுடன் வேதஅறிவியல் சர்ச்சையில் அவள் நுழையும்போது, “உன்னைவிடக் குறைச்சலாப் புரிஞ்சுண்டுமாட்டான் போயேன். அவன் அத்யயனம் பண்ணியிருக்கான்… உங்களுக்குத்தான் புதுப்படிப்பு எது கேட்டாலும் சந்தேகம்” என்று நையாண்டி செய்கிறாள். அப்புவைப் பதினாறு வருடம் வேதப்பாடசாலைக்கு அனுப்பியது அவளுடைய மிகப்பெரிய தீர்மானம். அதை அவள் “பிராயச்சித்தம்” என்றே சொல்கிறாள். இங்கே அவளுடைய. தாய்மை “அன்பு” மட்டும் அல்ல; அது பாவத்தைக் கழுவும் சடங்காக மாறுகிறது. அவள் அப்புவை “ரிஷியாக்கி”த் தன்னைத் தூய்மைப்படுத்த விரும்புகிறாள். இது தாய்மையை ஒருவித மதச் சடங்காகவும் மாற்றுகிறது. அவள் பேசாத தருணங்களே அவளுடைய உண்மையான மொழி. புகைப்படத்தைப் பார்த்து உட்கார்ந்திருப்பது, கண்ணைத் துடைத்துக்கொண்டு போவது..... இவை அனைத்தும் அவளுக்குள் இருக்கும் புயலைக் காட்டுகின்றன. அவள் மற்றவர்களை “ஏற இறங்க”ப் பார்ப்பது, குறிப்பாக இந்துவைப் பார்க்கும்போது, அவளுடைய உள்மன விழிப்பு வெளிப்படுகிறது. “நீ தனிதாண்டா… உன்னைத் தனியா கவனிச்சு கவனிச்சுத்தானேடா நான் பிராயச்சித்தம் பண்ணிக்கணும்… உன் கால்லெ விழுந்து எல்லாத்தையும் எரிச்சுடலாம்னு தீர்மானம் பண்ணின்டேன்.” இது போன்ற இரண்டு மூன்று இடங்களில் அவள் பாவம் செய்ததாக உணர்கிறாள். அம்மா வந்தாள் நாவலில் குற்ற உணர்வு வெறும் ஒரு உணர்ச்சியாக முடிவதில்லை. அது அலங்காரத்தம்மாளின் முழு உளவியலையும், அவளுடைய தாய்மையையும், அவளுடைய வாழ்வின் திசையையும் தீர்மானிக்கும் மையச் சக்தியாகக் காட்டப்பட்டுள்ளது. கடைசி மூன்று பிள்ளைகளைக் " காலைச்சுத்தின பாம்பு மாதிரி...." என்று சொல்லும் வரி முக்கியமானது. அவள் தன் செயலுக்கான பொறுப்பை ஏற்க விரும்பவில்லை, மாறாக குற்றஉணர்வைப் பெருக்கும் சாட்சிகளாக அவர்களை உணர்கிறாள். தண்டபாணியையோ மற்றவர்களையோ, அவ்வளவு ஏன்? பெரியபெண்ணின் சம்பந்தக்காரர்கள் குறித்தும் கவலைப்படாதவள் அப்பு இருக்கையில் சங்கடப்படுகிறாள். அப்பு வீட்டிலிருக்கும் போது சரசரவென்று வழக்கப்படி வந்த சிவசுவிடம் அவள் பேசுமிடம் முக்கியமானது. மறைமுகமாக அவள் சிவசுக்கு சொல்வது " அப்பு முன் உன்னால் எந்த உரிமையும் என்னிடம் எடுக்கமுடியாது". அலங்காரத்தம்மாள் ஏன் மணவினை தாண்டிய உறவை நாடுகிறாள்? தண்டபாணியுடனான கடைசிக்கலவிக்காட்சியைப் பார்க்கலாம். ஒரு ஆணுக்குப் பெண் எப்போது பிரமாண்டமாகத் தெரிவாள்? அவனால் இயலாத போது. அடுத்ததாக தண்டபாணி அலங்காரத்தம்மாளின் உடலை உரிமையாகக் கோருபவர். சிவசு அலங்காரத்தம்மாள் என்ன சொன்னாலும் எதிர்பேசாது கேட்பவன். ஆளுபவனை விட ஆளப்படுபவனை அவளுக்குப் பிடித்ததில் ஆச்சரியமில்லை. அப்புவின் மனத்தை மாற்ற முடியாது எல்லோரையும் விட்டு காசிக்குப் போவதாகச் சொல்கிறாள். கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டபின் சிவசுவை சமாதானப்படுத்த மன்னியிடம் " காப்பிப்பொடி வாங்கி வருவதாகச் சொல்லிச் செல்பவள் ஒருமணிநேரம் கழித்தும் வருவதில்லை. சிவசுவை அவளால் நிரந்தரமாகத் தொலைக்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அம்மணி கோபாலியைக் கடக்க பட்டாபியிடம் சேர்வதை விமர்சித்த பெண்ணியவாதி விமர்சகர்கள் அலங்காரத்தம்மாள் சொன்னால் அப்படியே செய்வாள் என்று நம்புவது இயல்பு. நமக்கு சாதகப்படாத விஷயங்களை மட்டும் தானே கேள்வி கேட்க வேண்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
Nov 27, 2025 Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country,
Asserting that NDA's big win in Bihar is the victory of every Indian's resolve to throw out infiltrators from the country, home mi...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment