லோக்சபா எம்.பி ஆனார்.கால்நடைத்தீவன ஊழலில் தண்டனைப்பெற்று சிறையில் இருந்த லாலு, எழுத்தறிவு இல்லாத தனது மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்தார். அந்தக்காலத்தில் நடந்த ஊழல்களுக்கு அவரின் பிள்ளைகளே தாய்க்கு துணை நின்றனர் .
லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது மிசா யாதவ் மற்றும் சகோதரிகள் நடத்திய “Land for Job” ஊழல் பெயரில் இன்று வரைக்கும் நீதிமன்றங்களில் வழக்குகள் நடக்கின்றன. அதேபோல் கலைஞர் குடும்பத்தில் கனிமொழி 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் தண்டனை பெற்றார். அவரது தந்தை, சகோதரர்கள், மாமன்கள் உள்ளிட்ட கருணாநிதி குடும்பமே பல அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் சிக்கியது. மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை, 2025 மே மாதத்தில், கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கியதாக லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு வெளியிட்டார்.அவர்மீது சாட்டப்பட்ட குற்றம் — கட்சிக்கும் குடும்பத்துக்கும் எதிராக செயல்படுதல். அதாவது, தங்களின் அதிகாரத்திற்கு எதிராகக் குரல் எழுப்புபவர் குடும்பத்தினரே என்றாலும், அவர்களை வெளியேற்றத் தயங்கமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதுதான் வாரிசு அரசியல், ஜனநாயக நாட்டில் தன் ஆதரவாளர்களுக்கு வழங்கும் மிகப்பெரிய எச்சரிக்கையும் என்பது நகைமுரண். இதுபோலத்தான் கலைஞரின் தனது மூத்த மகன் அழகிரியை கட்சியிலும் குடும்பத்திலும் புறக்கணித்தார். இந்த இரு குடும்பங்களிலும் இளைய மகன்களின் அதிகாரப் பாதை இவ்வாறு சுலபமாகவிடப்பட்டது. மூன்று மனைவியரில் பிறந்த ஆறு–ஏழு குழந்தைகளின் விருப்பங்களையும் அரசியல் பேராசைகளையும் கட்டுப்படுத்தி - பொது மக்கள் உணவை உறக்கத்தை துறந்து, மனைவிகளின் தாய்களின் தாலியை விற்று நிதி கொடுத்து உருவாக்கிய திமுக-DMK எனும் கட்சியை எந்த ஒரு உழைப்பின்றி தன் கையில் உறுதியாகப் பிடித்துக் கொண்டு - தான் விரும்பிய மகனுக்கு அதிகாரத்தை அள்ளிக்கொடுத்தார் கருணாநிதி. மகனுக்காக , கட்சிக்காகத் தன் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்திய எத்தனையோ இளையத் தலைவர்களையும் திராவிட சிந்தனையாளர்களையும் காரணமின்றி வெளியே தள்ளினார். இந்தத் திறமை லாலுவுக்கு இல்லை.. . லாலுவின் குடும்பத்தில் தொடங்கிய சொத்து–அதிகார தகராறு பீகாரின் அரசியல் சூழலையே பெரிதும் குலைத்துவிட்டது என்று சொல்வதுதான் மிகச் சரி. தேஜஸ்வியை வாரிசாக ஏற்க மற்ற பிள்ளைகளால் முடியவில்லை. அவர்கள் பரஸ்பரம் பைபிள் கதைப்பாத்திரங்களான சகோதரர்கள் காயேன்–ஹாபேல் போல சண்டையிட்டு, ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். சிறையில் இருந்தக் காலத்திலேயே கிட்னி செயலிழந்ததால் அவதிப்பட்ட லாலு பிரசாத் யாதவின் உடல்நலம் மோசமடைந்து, அவர் சிங்கபூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த நேரத்தில் கிட்னி தானம் செய்ய முன்வந்தது மகள் ரோஹிணி யாதவ் மட்டுமே . லாலு முதலில் அதை ஏற்கத் தயங்கினாலும், மகளின் வலியுறுத்தலால் கிட்னி மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. ஆனால் இன்று அதே மகள் ரோஹிணி தான் குடும்பத்தையும் கட்சியையும் விட்டு விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார். அதற்குக் காரணமே தேஜஸ்வி தான் என்றும் அவர் கூறுகிறார்.தேஜஸ்வியின் நெருங்கிய ஆதரவாளர்களான சஞ்ஜய், ரம்சி ஆகியோர் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதுடன், காலணியால் தாக்க முயன்றதாகவும் ரோஹிணி ஆச்சார்யா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ரோஹிணியின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதரித்து, லாலுவின் மற்ற மூன்று மகள்களும் குடும்பத்தைத் துறந்து டெல்லிக்கு சென்றுவிட்டதாகவே தகவல்கள் வெளியாகின்றன. ஜனநாயக நாட்டில் மக்களுக்காகப் பணியாற்றவும், அவர்களின் குரலை உயர்த்தவும்கூட முடியாத நிலைக்கு வாரிசு அரசியல் விஷமாக மாறிவிட்டது . இந்த வாரிசு அரசியலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரேயொரு அரசியல் சக்தி பாஜகதான் என்று மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர்போல் அதன் தெளிவான முடிவே நாம் பீகாரில் பார்த்த தேர்தல் முடிவு. இதை எல்லா வாரிசு அரசியல்வாதிகளும் உணர்ந்தால் இந்திய ஜனநாயகம் நன்றாக இயங்கும் என்பதில் ஐயமில்லை . அல்லாவிடில் கடினமாகப் போராட வேண்டியிருக்கும். ஒரு அறை கொண்ட வீட்டில் 1970 களில் வசித்த லாலு இன்று மாட மாளிகையில் வசிக்கிறார் என்றால் இவரின் அரசியல் வியாபாரம்…. கை தேர்ந்த ஊழல். சோனியா,லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவு, பால்தாக்கரே, சரத்பவார், கலைஞர்,பரூக் என…. வாரிசு அரசியலில் இனி மோடியால் அழிக்க வேண்டிய பாக்கி கலைஞரின் கோபாலபுரம் குடும்பமே…. It’s not hard to see why Lalu Prasad Yadav’s political influence has declined over the years. Leadership isn’t just about holding power, it’s about showing respect, listening, and staying connected to the people who look up to you.2/3
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment