Wednesday, October 7, 2026

Nov 25, 2025 உதவிகள் அதேபோல் பிரபாகரனோடு அவரைச் சந்திக்க வைத்தது அவர் இலங்கைக்குச் சென்றபோது அவர் மீது போடப்பட்ட வழக்குகளில் எல்லாம் தலையிட்டு அவருக்கு நான் உதவிகள்.

 உதவிகள் அதேபோல் பிரபாகரனோடு அவரைச் சந்திக்க வைத்தது அவர் இலங்கைக்குச் சென்றபோது அவர் மீது போடப்பட்ட வழக்குகளில் எல்லாம் தலையிட்டு அவருக்கு நான் உதவிகள். செய்திருக்கிறேன். எந்த பிரதியுபகாரமும் இல்லாமல் இவருக்காக பல உதவி பணிகளில் ஈடுபட்ட என் போன்றவர்களை நிராகரித்து பல மன கஷ்டங்களோடு பல வாய்ப்புகளை எல்லாம் இழக்க வைத்து அவர் இஷ்டத்திற்கு செய்த வேலைகளை எல்லாம் மறந்துவிட்டு ஏதொ நான் அவர் மேல் பழி போடுகிறேன் என்று என்னைப் பார்த்து செல்பவர்களுக்கு என்ன விதமான மனசாட்சி இருக்கும் என்று தெரியவில்லை.

நான் நடந்ததைத் தானே சொன்னேன் அவரை ஒன்றும் நான் அசிங்கப்படுத்தவில்லையே! உண்மையைத்தானே சொல்லுகிறேன் அதில் என்ன சங்கடம். நான் சொல்லும் உண்மைகள் அவருக்கு தெரியாதா? இதற்கெல்லாம் யார் காரணம்? இவ்வளவு சீட்டுகள் என்று கையெழுத்துப் போடுகிறார் பிறகு வெட்டி விட்டுச் செல்கிறார். கலைஞருடன் கூட்டணி பேச வருவேன் என்று சொன்னவர் அதையெல்லாம் அம்போ என்று விட்டுவிட்டு ஒதுங்கிப் போனார். திமுகவைத் தோற்க வைக்க வேண்டும் என்று தானே மக்கள் நலக் கூட்டணி அமைத்தார். அப்படி நடந்த பின் அதில் அவருக்கு கிடைத்த ஆதாயம் என்ன? இது போன்ற மர்ம முடிச்சுகளை இன்று வரை அவிழ்க்க முடியவில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் கமுக்கமாக இருந்து கொள்வது தான் அவரது வேடிக்கை! இப்போது அதுவே வாடிக்கையாகியும் விட்டது! உழைத்தவன் தெருவில் நிற்கிறான்! இப்படிச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளுபவர்கள்தான் வசதியாக வாய்ப்புகளைப் பெற்றுப் பதவிகளோடும் வளம் பெற்றுத் தந்திரங்களோடும் வாழ்ந்து கொள்கிறார்கள். இது இவர்களின் அரசியல்…. இவர்கள் இப்படி வாழட்டும்…. வாழியவே! 2/2 #வைகோ #மக்கள்நலக்கூட்டணி #திமுக #மதிமுக #dmk #mdmk #Kalaignar #Vaiko #tamilnadupolitics #TamilNaduElections #தமிழகஅரசியல் #stalin #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost

No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...