பிஹார் மக்களை பற்றி கேவலமாக கொத்தடிமைகள் விமர்சிப்பது, அவர்களின் உண்மை முகத்தை காட்டுகிறது.. பீடா வாயன், வடக்கன் இப்படி சொல்லும் ஒட்டுண்ணிகளின்.. உண்மையான முகம் இன்னும் வன்மத்தை போகப்போக காட்டும்..
இந்த தலைமுறையை விட இருபதாண்டுகளுக்கு முன்.. பிஹாரில் சாக்கடையும், மழைநீருமாய் நடக்கவே அருவருப்பான ஒரு விஷயத்திற்கு.. இதென்ன காட்டாட்சியைவிட கேவலமாக இருக்கிறது என்று ஒரு ஜட்ஜ் சொன்னது RJD கட்சிக்கு சொத்தாகி விட்டது.. அதுமட்டுமல்ல.. 1994..கோபால்கஞ்சில் கிருஷ்ணய்யா என்ற ஒரு கலெக்டரையே அடித்து கொன்ற ஆட்சி அது.. முஸஃபர்பூரில் கோலு என்கிற சிறுவனை கடத்தி காசு கொடுத்தும் கொன்று போட்ட ஆட்சி.. 2001 முதல்..2004 வரையில் 1527 குழந்தைகளை கடத்தி இருப்பதாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர்கள் சொல்கிறது. பதிவு செய்யப்படாத கடத்தல்கள் இன்னுமே அதிகம். நிதிஷ் ஆட்சியில் இதுவரை 429 கடத்தல் என்பதுமே அதிகம். அதாவது சமூகமே வன்முறையான ஒன்று.. முதன் முறையாக ஓட்டு போட்டவர்களுக்கு இந்த கதைகள் பகீரென்று இருக்கும்.. 8 மணிக்கு மேல் பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் கூட வெளியில் வரமுடியாத ஒரு அச்சமான சூழல் இருந்திருப்பது உண்மை. கடத்தப்பட்ட சிறுவர்கள் ஆஸிட்டில் கரைக்கப்பட்ட சம்பவங்கள் இந்த ஊபீஸ்க்கு புரிய வாய்ப்பில்லை.. நீங்கள் வண்டியை நிறுத்திவிட்டு, ஒரு சாயா குடித்துவிட்டு வருவதற்குள்.. எவனாவது அதை கடத்திக்கொண்டு போய் லாலு வீட்டு காம்பௌன்டுக்குள் நிறுத்திவிட்டால்.. 1 அல்லது 1 1/2 லட்சம் தந்தபின் பெரிய மனசு பண்ணி விடுவிப்பார்கள். பிஸ்வாஸ் என்கிற ஐஏ எஸ் அதிகாரியின் மனைவியை இரண்டுவருடமாக மிரட்டி பயமுறுத்தி ரேப் செய்து வன்முறை உச்சத்திற்கே கொண்டு சென்ற காட்டாட்சிதான் இது. கொஞ்ச நாள் முன்னர் நிதிஷ் பல்டி அடித்து, தேஜஸ்வியோடு செர்ந்த கொஞ்ச நாளில், தேஜஸ்வி அடித்த கொள்ளை தாங்க முடியாமல் உல்டா பல்டியடித்தார் நிதீஷ். ஒரு பஸ் ஸ்டான்டில் நுழைய காசு.. ரிக்ஷா வாலாவிடம் 5 கிமீ தூரத்துக்கு ஒரு முறை 20 ரூபாய் பிடுங்கும் தண்டல் ராஜாக்கள். 15 கிமீ பயணிக்க 1 1/2 மணி நேரம் ஆகும் தெருக்கள் என பூலோக நரகத்தை காட்டினார்கள் விலங்கு தீவன கொள்ளைக்கார கட்சி ஆசாமிகள். இப்படி குழிக்குள் இருந்த லா அன்ட் ஆர்டர் இப்போதுதான் தரை லெவலுக்கே வந்திருக்கிறது. இன்னும் பல்லுபோன, நரைத்துப்போன தலையோடும் வன்மத்தோடும் சிலர் அலையலாம்.. ஆனால் புதிய தலைமுறை, படிப்பு, படிப்பு என்று இறங்கிவிட்டது. பட்னாவில் எங்கு திரும்பினாலும் கோச்சிங் சென்டர்கள்தான். ஐஏஎஸ், ஐபிஎஸ், பாங்க் பிஓ, ரயில்வே என்று அரசுத்துறையில் இவர்கள் அதிகமாக தென்படுகிறார்கள். ஏன் நிதிஷ் மீது அதிருப்தி இல்லை என்றால்.. இதுவரை, 2551 பாலங்களை கட்டி இருக்கிறது இந்த அரசு. 931 பாலங்கள் கட்டப்படுகிறது.. பட்னா பக்தையார்பூர்.. சஸ்ராம் இங்கெல்லாம் மாபெரும் பாலங்கள் கட்டியிருக்கிறது. நிறைய குண்டர்களை அடித்து துரத்தியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு ஓகே. படிக்காத தலைமுறை, வேலைக்காக இந்தியா முழுக்க பயணிக்கிறார்கள். இப்போது வாழ்வின் மீதும் வாழ்வாதரம் மீதும் ஓரளவிற்கு நம்பிக்கை இவர்களுக்கு வந்திருக்கிறது. இவர்களை ஊபி தலைவர்கள் மிக கேவலமாக பேசி இருக்கிறார்கள். ஓட்டு போட்டாச்சுல்ல.. சரி 7 மணிக்கு இங்க வந்து வேலை பாருங்க என்று.. எத்தனை வக்கிரம்..? அடேய் அதற்கு கூட இங்கிருக்கும் வேலையாட்கள் லாயக்கில்லை என்பதுதான் உண்மை. அதிக கூலி தந்தாலும் கேவலமான வேலை செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறேன். என் பெயின்டர் தொண்டாமுத்தூர்தான். கேவலமான வேலை. துரத்திவிட்டு ஒரிஸா ஆசாமியை வேலை செய்ய வைத்தேன். இது ஒரு புறம்.. ஒத்தை சீட்டுக்கு கூட லாயக்கில்லாத காங்கிரஸ் 61 சீட் கேட்டு வாங்கிய தோல்விதான், பாஜக கூட்டணி வெற்றியை உறுதி படுத்திய பப்பு தான் என் ஹீரோவே.. அதோடு ஆர்மியை கேவலமாய் விமர்சித்தது.. பீஹாரிகளை கடுப்பில் ஆழ்த்தியது. பெண்கள் மொத்தமாக NDA பக்கம் சாய்ந்ததில்.. பப்பு, தப்பு, அப்பு, மப்பு.. இப்படி எல்லோருக்கும் ஆப்பு.. இந்த தோல்விக்குஓட்டு சோரி, குப்தர்கள், இவிஎம் மெஷின், ஈசி, கொசு, மோதி, அன்டார்டிகாவின் பிரதமர் என்று உருட்டுவதை.. இங்குள்ள கொத்தடிமைகள் அதைவிட வேகமாய் உருட்டும்போது.. படு பாவமாய் இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment