#இறுதிகாலத்தில்பீகாரின்லல்லுப்பிரசாத்யாதவ்
——————————————— கடந்த அவசரகால நடவடிக்கையின் போது நான் ஸ்தாபன மாணவர் காங்கிரஸில் இணைந்து செயலாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ராம் விலாஸ் பஸ்வான் எனக்கு நன்கு தெரிந்தவராக இருந்தார். கூடவே பீகாரின் லல்லுப்பிரசாத் யாதவ் மிக இளமையாக இருந்த காலம் தலைமுடி அடர்ந்த கருப்பாக இருக்கும். இன்றைக்கு உரிய ஸ்டைலில் அப்பொழுதே முடிவெட்டி இருப்பார். அதேபோல் நிதீஷ் குமாரும் லல்லுவும் பஸ்வான் மூவரும் ஒருமுறை சென்னைக்கு வந்து இங்கு இரண்டு நாள் தங்கி இருந்தார்கள். அப்போது அவர்களுடன் இருந்தேன். அக்காலத்தில் லல்லு சிங்கிள் பெட்ரூம் உள்ள ஒரு வீட்டில் தான் குடியிருந்தார். ராஃபிரி தேவியுடன் ஒன்பது குழந்தைகளைப் பெற்றார். வரட்டி அடுப்பில் தான் ராஃபிரி தேவி சமைப்பார். அது அந்தக் காலம். இன்றைக்கு பாட்னாவில் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டியுள்ளார். பொதுவாக அவர் எளிமையாக இருந்த காலத்தில் அவருக்கு அதிகமான மக்கள் செல்வாக்கு இருந்தது. போகப் போக தனது அகம்பாவத்தால் அந்த செல்வாக்கை இழந்தார். ஒரு கட்டத்தில் அவர் யாரையும் மதிப்பதில்லை. அதனால்தான் பிஹாரில் இப்படியான தோல்வி லல்லுவிற்கு ஏற்பட்டது. அதேபோல நிதீஷ் குமார் என்றும் போலவே இயல்பாக இருப்பார். ஆனால் இன்று அவருக்கு ஞாபக சக்திக் குறைவு உள்ளதாகப் பேசப்படுகிறது.லல்லு வசதி வந்தவுடன் காங்கிரஸ் பாணியிலான அரசை நடத்தத் தொடங்கினார். அதுதான் வீழ்ச்சிக்குக் காரணம். அவரும் வாரிசு அரசியலை கொண்டுவர முயன்றார். வீட்டிற்குள் குடும்பத்திற்குள்ளே பிள்ளைகளுக்கு இடையே சண்டை. மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகார உரிமைகள் போன்றவற்றால் ஏற்பட்ட பின்னடைவு. நீண்டகால லல்லு குடும்பத்தின் அரசியல் சோர்வு மக்களுடைய ஏற்பட்ட சலிப்பின் காரணம். குடும்ப சொத்து மதிப்பு போன்றவையே இந்தத் தேர்தல் தோல்விக்கான காரணம். வாரிசு அரசியல் — உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகக் கொடிய சாபம். பல மாநிலங்களில், இந்த முதிர்ச்சியற்ற வாரிசு அரசியல்தான் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பெரியக் குழித் தோண்டிக்கொண்டிருக்கிறது. மோத்திலால் நேருவின் மகன் ஜவஹர்லால் நேருவை காங்கிரஸின் தலைவராக அறிவித்த அந்தக் காலத்திலிருந்தே எழுந்த எதிர்ப்பு குரல்கள் — இன்று சசி தரூர் போன்றவர்கள் பயமின்றி உரக்கச் சொல்வதுவரை — வாரிசு அரசியலின் அவலம் நாளுக்கு நாள் தாங்க முடியாத அளவுக்கு மோசமடைந்து வருகிறது. காங்கிரஸில் நடந்தது ஒருபோதும் நியாயப்படுத்த முடியாத ஒன்று.காங்கிரஸை உருவாக்கியது மோத்திலால் அல்ல.ஆனால் நேரு குடும்பம், அவர்களின் தலைமைக்கு எதிராக எழுந்த மக்கள் எதிர்ப்புகளைக் கொடூரமாக அடக்கி, பலரின் உயிர்ப்பலியால் உருவான ஒரு பெரிய தேசிய அமைப்பை தங்கள் குடும்பச் சொத்தாகவே மாற்றிக்கொண்டது. இத்தகைய ஜனநாயக விரோத வாரிசு அரசியல் பல மாநிலங்களிலும் உருவாயிற்று. அதில் லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவு, பால்தாக்கரே, சரத்பவார், கலைஞர்,பரூக் போன்றோரும் பலர் அடங்குவர் — தங்கள் குழந்தைகளுக்காக அரசியல் மேடை அமைத்தவர்கள். ஆனால் இத்தகைய அரசியலுக்கு இந்தியாவில் எதிர்காலமுண்டா? இல்லை என்பதே மகத்தான ஜனநாயக செயல்முறையான பிகார் தேர்தலின் தீர்ப்பு. குடும்பச் சொத்து பங்கீட்டில் ஏற்படும் எல்லா சிக்கல்களும் இங்கும் நடக்கின்றன. “அடுத்த வாரிசு யார்?” என்ற சண்டை நாட்டின் கடைக்கோடி மனிதனின் அரசியல் வரை நீள்கிறது. நேரு குடும்பத்தில் உறுப்பினர்கள் குறைவாக இருந்தது அவர்களுக்கு ஒரு வித அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம் ஆனால் பீகாரில் புரட்சித் தலைவராய் எழுந்த லாலு பிரசாத் யாதவு, இன்று தனது அரசியல் வாழ்க்கையையும், தானே உருவாக்கி வளர்த்த கட்சியையும், தன் கண்முன்னே சிதைந்து போகும் நிலையைக் காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவருக்கு குழந்தைகள் ஒன்பது. அதில் மூத்த மகளுக்கு அவர் வைத்த பெயர் “மிசா” (MISA – Maintenance of Internal Security Act). அது நேரு குடும்பத்துக்கு எதிரான ஒரு அரசியல் குறியீடாகவும் அவரின் மிசா கால சிறை தண்டனையை நினைவுகொள்ளவும் என பலர் விளக்கியிருந்தனர். லாலுவும் RJD–யும் வளர வளர , அவரின் ஏழு மகள்களும் இரண்டு மகன்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் இறங்கினர். மிசாவை எம்.பி யாக அமர்த்தி மகிழ்ந்தார்... ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தால், லாலு பிரசாதும், மு கருணாநிதியைப் போலவே தனது அடுத்த வாரிசு யார் என்பதை முன்பே முடிவெடுத்திருந்தார்போல தெரிகிறது. வாரிசு அரசியல்வாதிகளுக்கொரு பொதுவான குறை உண்டு — நா கட்டுப்பாடு இல்லை; மக்கள் பிரச்சினைகளை அறிந்த அனுபவம் இல்லை;அடித்தளப் பணிகளின் பின்னணி இல்லை;உழைப்பு இன்றி கிடைக்கும் பதவி அவர்களை சிந்தனையற்றவர்களாக்கிவிடுகிறது. மிசா யாதவு முதலில் ராஜ்யசபா, பின்னர்
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment