Monday, February 29, 2016

Paddy agriculture

வயல்காரனின் மூன்று மாத உழைப்பு, தண்ணீர் சேர்க்காமல் ஒரு ஏக்கர் நெல் நிலத்திற்கான செலவுகள்
.
1. விதை நெல்லு 30 ரூவா x 40 கிலோ = 1200
2. எரு 500 x 3 வண்டி நடை  = 1500
3. நாத்தங்ஙால் ஏர் 500 = 500
4. அடி உரம் காப்ளக்ஸ் 500 + யூரியா 150 = 650
5. வரப்பு வெட்டு ரெண்டு பேர் = 1000
6. நாற்று புடுங்கி, விளம்ப = 2000
7. நடவு 24 பேர் x 200 = 4800
8. உரம் காம்ளக்ஸ் 1100, யூரியா700 = 1800
9. களை 10 x 200 = 2000
10. பூச்சி மருந்து = 1200
12. அறுப்பு 1.5 x 2200 = 3300
13. வைக்கலு சேர்க்க 2x200 = 400
14. வைக்க ஏத்த 2000 = 2000
.
ஆக ஏக்கருக்கு 22,350 செலவு ஆகுது.
எத்தனை மூட்டை ஏக்கருக்கு வரும்? தோராயமா 30 மூட்டை வரும். 750 அரசு விலை கொடுத்தா விவசாயி நஷ்டமில்லாம விளைய வச்சி, வைக்கோல் மிச்சமுன்னு போயிடுவான். அரசு 585 ரூவாக்கி நெல்லை வாங்குனா என்னதாய்யா செய்றது?#agriculture#farmers

Rukmani Arundale

Remembering a revivalist and a visionary - Rukmini Devi Arundale

She was an Indian classical dancer who led the renaissance of the ‘Bharatnatyam’ dance form and founded the Kalakshetra Foundation in Chennai. 

She was also a theosophist who was greatly inspired by Annie Besant, the Theosophical Society’s British cofounder and president.
நாக்கு எச்சிலை தொட்டுக் கொண்டு டிக்கெட்டை கிழித்துக் கொடுக்கும் பஸ் கண்டக்டரைப் பார்க்கும் போதெல்லாம் நாம் அருவருப்புடன் தலையிலடித்துக் கொள்வோம்.
 இன்று இந்திய   நாட்டின் நிதி அமைச்சரே உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் பாராளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கலின்போது ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுவதற்கு நாக்கு எச்சிலைத்தான் தொட்டுக் கொள்ள வேண்டியுள்ளது  என்பதைப்   பார்த்ததும் அந்த ஏழை பஸ் கண்டக்டர் இப்போது மிகவும் நல்லவராக தெரிகிறார். 

தூய்மை இந்தியா திட்டத்துக்கு 9000 கோடி ஒதுக்கியவர் 10 ரூபாய்க்கு ஒரு "டச்  ஸ்பான்ஜ்"  வாங்கி பக்கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாதா? 

இது ஒரு எச்சில் பட்ஜெட் !

Budget 2016

நிதிநிலை அம்சங்கள்  முழு விவரம் ...!!!

வருமானவரி விகிதங்களில் மாற்றம் இல்லை- விவசாயம், கிராமப்புற மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

பொது பட்ஜெட் 2016-2017: நிதி அமைச்சர் ஜெட்லி உரையின் முக்கிய அம்சங்கள்
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது
அரசின் நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுப்பாட்டில் வந்துள்ளது .

அரசின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது .

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது
இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக சர்வதேச நிதியமைப்புகள் பாராட்டு
சவாலான நிதிச்சூழலில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது .

செலவு அதிகரித்துள்ள சூழலில், சமநிலையிலான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது .

அந்நிய செலாவணிக் கையிருப்பு 350 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது
மூன்றில் ஒருபங்கு மக்களுக்கு கிடைக்கக் கூடிய மருத்துவக் காப்பீடு அறிமுகம்
கிராமப்புற மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு அதிகம் செலவிட அரசு முன்னுரிமை
கட்டமைப்பு, வங்கித்துறைகளின் முன்னேற்றத்தில் முழு கவனம் செலுத்தப்படுகிறது .

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது .

இதுவரை இல்லாத குறைந்த பிரீமியத்தில் அதிக இழப்பீடு பெறும் வகையில் பயிர்க்காப்பீடு அறிமுகம்
2022ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க இலக்கு
சர்வதேச பொருளாதார மந்த நிலை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது .

விவசாயம், சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, திறன் வளர்ப்பு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன .

நீண்ட கால நீர்ப்பாசனத் திட்ட நிதி நபார்டு வங்கி மூலம் ஏற்படுத்தப்படும்
விவசாயிகளின் நலனுக்கு 35,984 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நபார்டு வங்கி மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்படுத்தப்படும் .

கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்
அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை வேளாண்மைக்கு கொண்டுவரப்படும் .

89 நீர்ப்பாசனத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும் .

அந்நிய சந்தைகள் பலவீனமாக இருப்பதால், உள்நாட்டு சந்தைகள் வலுப்படுத்தப்படும்
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டம் அறிமுகம் .

வேளாண் சந்தைகள் இணைய தளம் மூலம் இணைக்கப்படும் .

திவால் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவர ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்படும்
கிராமப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தில் 2.23 லட்சம் கி.மீ சாலைகள் இணைக்கப்படும் .

புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கு 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு .

தரிசுநில மேம்பாடு திட்டத்தின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டேர் பரப்பு நீர்ப்பாசன வசதி பெறும் .

100 நாள் வேலைத்திட்டத்திற்கு 38,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

கிராமப் பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கு 2.87 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு .

கிராமப் பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கு 228 சதவிகிதம் அதிக நிதி ஒதுக்கீடு
2018 மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் .

நடப்பு மாதம் வரை 5,542 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 300 நகரங்களில் வசதிகள் ஏற்படுத்தப்படும்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நில ஆவணங்கள் மின்னணு மயமாக்கப்படும்
நில ஆவணங்கள் மின்மயமாக்கலுக்கு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு .

கிராமப்புறங்களில் கணினிவழிக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் .

தூய்மை இந்தியா திட்டத்திற்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக 87,765 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

முதியோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
கிராமப்புறங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் எரிவாயு இணைப்பு வழங்கத் திட்டம் .

விவசாயக் கடன் இலக்கு 9 லட்சம் கோடி ரூபாய் கிராமப்புறங்களில் எரிவாயு இணைப்பு பெண்கள் பெயரில் வழங்கப்படும் .

75 லட்சம் நடுத்தரக் குடும்பங்கள் எரிவாயு இணைப்பு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர் .

வரும் நிதியாண்டில் நாடு முழுவதும் 3000 பொது மருந்து கடைகள் திறக்கப்படும் 

நாட்டின் அனைத்து மாவட்டங்களில் சிறுநீரக சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் .

உயர்கல்விக்கு நிதியுதவி வழங்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும் .

உயர்கல்வி நிதியமைப்புக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு .

62 புதிய நவோதயா வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்படும் .

சிறு தொழில்முனைவோர் துறைக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் .

எழுந்திரு இந்தியா திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

எழுந்திரு இந்தியா திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்கு கடனுதவி
நாடு முழுவதும் 1500 பன்முகத் திறன் வளர்ப்புப் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் 

வருங்கால வைப்பு நிதியில் புதிய உறுப்பினர்களுக்கு அரசு பங்களிக்கும்
பிஎஃப் புதிய உறுப்பினர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு 8.33 சதவிகித பங்களிப்பை அரசு வழங்கும் .

அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன்வளர்ப்பு பயிற்சி அளிக்க இலக்கு
நின்று போன 85 சதவிகித சாலைத் திட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன .

சாலை, நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
சிறு கடைகள் விருப்ப அடிப்படையில் வாரம் முழுவதும் செயல்பட அனுமதி
ஒட்டுமொத்தமாக சாலைத்திட்டங்களுக்கு 97 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
தேசிய வேலைவாய்ப்பு பதிவேட்டில் 3.5 கோடி பேர் பதிவு .

50 ஆயிரம் கி.மீ மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்
1 லட்ச ரூபாய் குடும்ப காப்பீட்டில், முதியோருக்கு 30 ஆயிரம் ரூபாய் கூடுதல் பலன் 

மாநில அரசுகளுடன் இணைந்து 160 விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும் .

எஸ்எஸ்எல்சி சான்றிதழ்களை மின்னணு முறையில் பாதுகாக்க ஏற்பாடு .

அணுமின் சக்தி உற்பத்திக்கு 3000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு .

நடப்பு நிதியாண்டில் 10,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை அமைக்க இலக்கு
இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சந்தைப் படுத்த 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
பொதுத்துறை நிறுவன சொத்துகளை பாதுகாக்க புதிய கொள்கை உருவாக்கப்படும்
அணுமின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க 20 ஆண்டுகால ஒருங்கிணைந்த திட்டம் ஏற்படுத்தப்படும் 

பங்கு விலக்கல் துறையின் பெயர் முதலீடு மற்றும் பொதுச் சொத்துத்துறை என மாற்றப்படும் .

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் புதியவர்களுக்கு நிதியுதவி அளிக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

கட்டமைப்புத்துறைக்கு 2,21,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீடாக 25,000 கோடி ஒதுக்கீடு .

பொதுத்துறை வங்கிகளின் சேவைக்கு மத்திய அரசு பக்கபலமாக இருக்கும்
சிறு தொழில் கடன் வழங்கும் முத்ரா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ரூ. 1,80,000 கோடியாக உயர்வு .

விவசாயிகளுக்கான உரமானியம் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் .

மானியத் திட்டங்களின் நிதி மக்களின் கணக்கை நேரடியாகச் சென்றடைய ஏற்பாடு
ஆதார் எண் அடிப்படையில் பல்வேறு திட்ட மானியங்கள் மக்களைச் சென்றடைய ஏற்பாடு .

பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
வங்கித்துறையின் செயல்பாட்டில் அரசு தலையிடாது .

சமூகப்பாதுகாப்புத் திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கப்படும் .

கம்பெனிகள் சட்டம் தொழில் தொடங்க ஏதுவாக எளிமையாக்கப்படும் .

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலிக்க குழு அமைப்பு .

டயாலிசிஸ் இயந்திரங்களுக்கான உற்பத்தி வரி நீக்கப்படும் .

வருமான வரிக் கழிவு 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிப்பு
வாடகை வருமானம் பெறாத சொந்த வீட்டுக்கான வரிச்சலுகை அதிகரிப்பு
வரி வசூலிப்பை எளிமையாக்க அரசு நடவடிக்கை .

வருமான வரிச் சலுகையால் 2 கோடி பேர் பலன் பெறுவர் .

5 கோடி ரூபாய்க்கு குறைவாக வணிகம் செய்யும் வணிக நிறுவனங்களுக்கான வரி 29 சதவிகிதமாகக் குறைக்கப்படும் .

வருமானவரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை .

35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரிச்சலுகை .

புதிதாகத் தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் .

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் சுங்கம், கலால் வரியில் மாற்றம் கொண்டுவரப்படும் .

60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு முதல்முறையாக, ரூ.50 லட்சத்திற்குள் வீடு வாங்குவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரிச்சலுகை
ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி உயர்த்தப்படுகிறது .

பணக்காரர்களுக்கான கூடுதல் வரி 12லிருந்து 15 சதவிகிதமாக உயர்வு
புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10லிருந்து 15 சதவிகிதமாக உயர்வு
காற்றில் மாசைக் குறைக்கும் வகையில் சிறிய கார்கள் மீது 2 சதவிகித வரி விதிக்கப்படும் .

நிலக்கரி மீதான பசுமை எரிசக்தி வரி டன்னுக்கு ரூ.200 லிருந்து ரூ.400 ஆக உயர்வு .

வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .

ஏற்றுமதித்துறைக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும் .

தொழில் தொடங்க விதிகளை எளிதாக்கும் வகையில் புதிய கம்பெனி சட்டம் கொண்டுவரப்படும் .

பெட்ரோல் கார்கள் மீது கட்டமைப்பு வரியாக ஒரு சதவிகித வரி விதிக்கப்படும்

Friday, February 26, 2016

TR இராமச்சந்திரன்

Cinema Expresதகவல்கள்:

* தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவைக் கதாநாயகன் TR இராமச்சந்திரன்.

* வைஜயந்திமாலா, சாவித்திரி, பத்மினி, அஞ்சலிதேவி ஆகிய பிரபல கதாநாயகிகளுடன் கதாநாயகனாக நடித்தவர், MGR, சிவாஜி, ஜெமினி, SSR ஆகிய கதாநாயக நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் என்ற பெருமையுடையவர் TR இராமச்சந்திரன் என்கிற திருக்காம்புலியூர் இரங்கராவ் இராமச்சந்திரன்.

* TR இராமச்சந்திரன் நடித்த முதல் படம் வாயாடி+போலி பாஞ்சாலி, யெஸ் யெஸ் (1940) என்ற படமாகும். வாயாடி என்ற படத்துடன் போலி பாஞ்சாலி, யெஸ் யெஸ் என்ற இரு துண்டுப் படங்கள் திரையிடப்பட்டன. வாயாடி படத்தில் காளி N இரத்னம் பிரதான வேடத்திலும், TR இராமச்சந்திரன் துணை வேடத்திலும் நடித்துள்ளார்கள். பாரதிராஜாவின் குருவான புட்டண்ணா இயக்கத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன் நடித்த சுடரும் சூறாவளியும் (1971) என்ற படமே இவர் கடைசியாக நடித்த படமாகும். எம் தேடலின்படி இவர் 30 ஆண்டுகளில் 67 படங்களில் நடித்துள்ளதாக அறிய முடிகிறது.

* இவர் நடித்த 67 படங்களில் 18 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களிலேயே 18 படங்களில் பிரபல நாயகிகளுடன் நாயகனாக நடித்தவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

* TRR நாயகனாக நடித்த குறிப்பிடத்தக்க படங்களும், உடன் நடித்த நாயகிகளும்:
சபாபதி (1941)-CT இராஜகாந்தம், மானசம்ரக்ஷணம் (1945)- SD சுப்புலஷ்மி, சகடயோகம் (1946)-VN ஜானகி, வாழ்க்கை (1949)-வைஜயந்திமாலா, பொன்வயல் (1954) மற்றும் அடுத்த வீட்டுப் பெண் (1960)-அஞ்சலிதேவி, எல்லாம் இன்பமயம் (1955)- இராகினி, கதாநாயகி (1955)-பத்மினி, கோமதியின் காதலன் (1955)-சாவித்திரி.

* TR இராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில் நடித்த வைஜயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி (1963) படத்தில் "யாரடி வந்தார் என்னடி சொன்னார்" [https://www.youtube.com/watch?v=Q0LWhfJlyi8] என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தம் திரைப்பயணத்தைத் துவங்கினார். வித்யாபதி (1946) படத்தில்தான் முதன் முதலாக MN நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே VN ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் AV மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி (1941) (செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் AT கிருஷ்ணசாமி).

* கதாநாயகன் என்றால் அழகாக, ஆடத்தெரிந்தவராக, வாள்வீசும் வீராதி வீரராக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உடைத்து, சபாபதி (1941) படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்தார் TRR. இப்படத்திற்காக இவருக்கு 140 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப் படமாகி இவருக்குப் பெரும் புகழ் தந்தது. இவர் சொந்தக் குரலில் 5 பாடல்களை இப்படத்தில் பாடியுள்ளார். மொத்தம் 32,000 ரூபாய் தொகையில் தயாரிக்கப்பட்டது சபாபதி படம்.

* வாழ்க்கை (1949) படம் நாயகனுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் நல்ல வாழ்க்கையைத் தந்த படம் என்கிறார் AVM செட்டியார். "உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்... டடடா டடடா டாடாடா" என்ற பாடல் [https://www.youtube.com/watch?v=kJtTl9sNDKc] படத்தில் வரும்போதெல்லம் தியேட்டரில் ஒரே சீழ்க்கை ஒலிதான். TRRரே நாயகனாக நடிக்க, இப்படம் தெலுங்கில் ஜீவிதம் என்ற பெயரில் தயாரானது.

MGR, TRR, TKR 
* MG இராமச்சந்திரனுடனும், TK இராமச்சந்திரனுடனும் TR இராமச்சந்திரன் சேர்ந்து நடித்துள்ளார். MG இராமச்சந்திரனுடன் பாக்தாத் திருடன், அன்பே வா ஆகிய படங்களிலும், TK இராமச்சந்திரனுடன் நாம் இருவர், சிங்காரி, மாப்பிள்ளை போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

* பாக்தாத் திருடன் (1960) படத்தில் வில்லனிடமிருந்து தப்பிக்க, சிலைகளோடு ஒரு சிலையாக அசைவற்று TRR நிற்பது சிடுமூஞ்சிகளையும் சிரிக்கவைக்கும். வாழ்க்கை படத்தில் TRRருக்கு ஜோடியாக நடித்த வைஜயந்திமாலா, பாக்தாத் திருடன் படத்தில் MGRருக்கு ஜோடி. TRR. இப்படத்தில் MGRரின் தோழனாக நடித்திருந்தார்.

* இவர் சைவ உணவுப் பிரியர். அன்பே வா (1966) படத்தில் கோழி மாமிசம் உண்பதாக ஒரு காட்சியில் இவர் நடிக்க வேண்டியிருந்தது. சைவ உணவு சாப்பிடுபவரிடம் கோழி மாமிசத்தைக் கொடுக்க முடியுமா... இயக்குநர் ஒரு யோசனையை மேற்கொண்டார். கோழி மாமிசம் மாதிரியே ஒரு கேக் செய்து, அதை TRR சாப்பிடுவதாகக் காட்சி படமாக்கப்பட்டது.

சிவாஜியுடன் TRR.
* சிவாஜி கணேசனுடன் மனிதனும் மிருகமும், கள்வனின் காதலி, மணமகன் தேவை, அவள் யார், படிக்காத மேதை, தில்லானா மோகனாம்பாள், திருமால் பெருமை ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

* அவள் யார் படத்தில் சிவாஜியின் அக்காள் மகன் "அப்பாவி பூபதி"யாக TRR நடித்துள்ளார். கள்வனின் காதலி படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார் இராமச்சந்திரன்.

* கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் TRR நாயகனாகவும் சிவாஜி கணேசன் இரண்டாம் நாயகனாகவும், அடுத்த வீட்டுப் பெண் படத்தில் TRR நாயகனாகவும் KA தங்கவேலு இரண்டாம் நாயகனாகவும், ராஜி என் கண்மணி படத்தில் TRR நாயகனாகவும் ஸ்ரீராம் இரண்டாம் நாயகனாகவும், இப்படி முன்னணி நடிகர்களுடனேயே முன்னணியில் நடித்தவர் TRR.

* எட்டி காண்டர் என்ற அமெரிக்க நடிகரைப் போன்ற தோற்றமும் பெரிய கண்களும் கொண்ட இவர் "தமிழ் சினிமாவின் எட்டி காண்டர்" என்றழைக்கப்பட்டார். கர்வமில்லாமல் அனைவரிடமும் கனிவுடன் பழகக் கூடியவர் இவர்.

* சிரிப்பு நடிகரான இவர் இரு படங்களில் சோகமாகவும் கோபமாகவும் நடித்துள்ளார். சோகமாக ராஜி என் கண்மணி (1954) படத்திலும், கோபமாக சாது மிரண்டால் (1966) படத்திலும் நடித்துள்ளார். ராஜி என் கண்மணி படத்தில் பார்வையற்ற காதலிக்குப் பார்வை கிடைப்பதற்காக இடர்களுடன் சமராடும் பாத்திரத்திலும், சாது மிரண்டால் படத்தில் கொலை செய்யுமளவிற்கு மிரண்ட சாதுவாகவும் நடித்தார் இராமச்சந்திரன்.

* ஸ்ரீவள்ளி (1945) படத்தில் வள்ளியின் சகோதரன் கிள்ளியாக TRRரும், கிள்ளியின் காதலி மெல்லியாக G சௌதாமினியும் நடித்துள்ளனர். 1945ல் இப்படம் 2 இலட்சம் செலவில் தயாரிக்கப்பட்டு, பத்து மடங்கு இலாபம் தந்தது.

* இவர் திருவள்ளுவர் படத்தில் சோணாசலம் என்ற பாத்திரத்திலும், கண்ணகி படத்தில் சாஸ்திரி வேடத்திலும் நடித்துள்ளார். NT இராமாராவ் நடித்த மருமகள் படத்தில், பெண்களை ஏமாற்றும் "சினிமா டைரக்டர் சூரி" என்ற வில்லன் வேடத்தில் நடித்து, தம் வில்லன் வேடக்` குறையையும் நிறைவாக்கிக் கொண்டார் TRR.

* இளம் வயதில் இவர் படிப்பில் நாட்டமில்லாதவராக இருந்தாலும், பின்பு சிறந்த வாசகராக இருந்து, இரு நாவல்களைப் படமாக்கியுள்ளார். அவ்வகையில் தம்மைக் கவர்ந்த நாவல்களான கல்கியின் பொய்மான் கரடு கதையைப் பொன்வயல் (1954) என்ற படமாகவும், எழுத்தாளர் தேவனின் தொடர்கதையை கோமதியின் காதலன் (1955) என்ற படமாகவும் தயாரித்தார் இவர். படத் தயாரிப்பில் படாத தொல்லைகள் பட்டதாகச் சொல்கிறார் இவர்.

* பல படங்களில் இவர் சொந்தக் குரலில் பாடியுள்ளார். (உன்கண் உன்னை ஏமாற்றினால்-வாழ்க்கை https://www.youtube.com/watch?v=1fILOoWzs7Q, கண்களும் கவிபாடுதே-அடுத்த வீட்டுப் பெண் https://www.youtube.com/watch?v=s0GEAUaj8mg) மற்றும், AM இராஜா, சீர்காழி கோவிந்தராஜன், பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களும் இவருக்குப் பின்னணி பாடியுள்ளார்கள்.

* இராமச்சந்திரன் நடித்த சபாபதி (1941), பூம்பாவை (1944), விகடயோகி (1946), நாம் இருவர் (1947), வாழ்க்கை (1949), சம்சாரம் (1951), சிங்காரி (1951), கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954), அடுத்த வீட்டுப் பெண் (1960) ஆகிய படங்கள் 100 நாட்களுக்குத் திரையிடப்பட்டு வெற்றிப் படங்களாக விளங்கின. 52 வாரங்களுக்கு (ஓராண்டு) திரையிடப்பட்ட வெற்றிப் படமாக ஸ்ரீவள்ளி (1945) விளங்குகிறது. சென்னை சினிமா இரசிகர்கள் சங்கம் வழங்கிய 1949ம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான விருதை வாழ்க்கை படம் பெற்றது.

* 1965ல் தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கியுள்ளது.

* படங்களில் வாய்ப்பற்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள அவர் மகள் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். அப்பொழுது அமெரிக்காவிலேயே 30 நவம்பர் 1990ல் இவர் இயற்கை எய்தினார்.

தகவல் திரட்டு-சிவ.குகன்

படங்கள்: ஞானம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில், ரங்காராவ்-இரங்கம்மாள் தம்பதியருக்கு 9, ஜனவரி 1920ம் ஆண்டு பிறந்தார் TR இராமச்சந்திரன். இளம் வயதிலேயே இவரின் தாயார் இறந்து விட்டார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். இருப்பினும், தந்தை மகனை நன்கு கவனித்துக் கொண்டார். மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இராமச்சந்திரனை, அவர் தந்தை குளித்தலையிலுள்ள பள்ளியில் சேர்த்தார். 15 வயதாகியும் 5ம் வகுப்பைத் தாண்டவில்லை TRR.

படிப்பில் நாட்டமில்லாத இவர் நாடகங்களில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். மதுரையில் ஜகந்நாத ஐயர் நடத்தி வந்த “பாலமோகன ரஞ்சித சங்கீத சபா” கம்பெனியில் சேர்ந்து நடித்தார். அப்பொழுது இந்த கம்பெனியில் இசையமைப்பாளர் SV வெங்கட்ராமன், MR இராதா, TS பாலையா, TR மகாலிங்கம் ஆகியோர் சேர்ந்திருந்தார்கள். பின்பு SV வெங்கட்ராமன் தனியாக நாடக கம்பெனி தொடங்கி குறிஞ்சிப்பாடியில் நடத்தியபோது, அந்த கம்பெனியில் சேர்ந்தார் இராமச்சந்திரன்.
காதலித்து 1948ல் கலப்புமணம் செய்து கொண்ட இவருக்கு வசந்தி, ஜெயந்தி என்ற இரு மகள்களும் பேரப்பிள்ளைகளும் உண்டு. புகைப்படக்கலையில் இவர் ஆர்வமுள்ளவராக இருந்தார

Kanchana



Kanchana (actress)
Vasundhara Devi, known by her stage name Kanchana (born 16 August 1939) is a noted Indian actress of the 1960s and 1970s. She acted in all four major south Indian languages: Telugu, Tamil, Kannada, and Malayalam, as well as in a fewHindi films.[
Due to  family  struggle she went to work as an air hostess to support her family, when she was discovered by the film director C. V. Sridhar on a plane where he was a passenger. He gave her the lead role in his film Kaadhalikka Neramillai in 1963 and changed her name to Kanchana, since there was already another actress named Vasundhara Devi, mother of star Vyjayanthimala.[ Kanchana acted in over 150 films – Tamil, Telugu, Kannada and Hindi, with a successful acting career.
She retired from films in the early 1980s  In 2005, she was presented with the MGR award and in 2007 the ANR Swarna Kankanam award.[6][7]
She was appropriately known as the Queen of the Seventies in South Indian film industry. Her performances in the movies Pavitra Bandham, Manchivaadu were well appreciated and recognised. She played the role of Uttara in the film Veerabhimanyu. The following year she acted in the Annapurna pictures film Aatma Gowravamwith veteran director K. Viswanath.
She acted with Krishnam Raju in some glamorous roles in Neeti Nijayitee (1972), Parivartana (1975), Nenante Nene and Dharma Daata. Not only in social roles, she acted some mythological roles in pictures likeShri Krishnavataram (1967). After retirement as heroine, she acted in some good films including Ananda Bhairavi andShrimad Virat Veerabrahmendra Swami Charitra in 1984.
In Tamil, she acted with R. Muthuraman in about 19 films including Kaadhalikka Neramillai, Kodimalar, Thulabharam (Tamil version), Thangai, Bama Vijayam andAvalukendru Oru Manam. She also acted with Sivaji Ganesan in Sivandha Mann, Vilayattu Pillai and Avan Oru Sarithiram. She did two films with MGR, Naan Yen Pirandhen and Parakkum Paavai. Apart from that, she was paired with many Tamil heroes like A. V. M. Rajan, S. S. Rajendran, Gemini Ganesan , Jaishankar,Ravichandran and Sivakumar.
After her retirement as a heroine, she acted in some good films including Ananda Bhairavi, Shrimad Virat Veerabrahmendra Swami Charitra, Johnny, Sigappu Rojakkal,Mouna Ragam and more as a supporting role.
Awards
• She was presented with the MGR award in 2005.

• ANR Swarna Kankanam award in 2007

thanks wikipedia

Thursday, February 25, 2016

Gail

Gail குழாய் வெடித்ததில் 30 மீட்டர் உயரத்திற்கு தீ பற்றி எரிந்திருக்கிறது. அருகில் இருந்த வீடுகள், கால்நடைகள், பறவைகள், தென்னை மரங்கள் என அரைக் கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாயினமீத்தேன் குழாய் வெடித்ததில் 30 மீட்டர் உயரத்திற்கு தீ பற்றி எரிந்திருக்கிறது. அருகில் இருந்த வீடுகள், கால்நடைகள், பறவைகள், தென்னை மரங்கள் என அரைக் கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாயினAt least 15 persons were killed and several injured after the trunk pipeline of Gas Authority of India Ltd (Gail) exploded following a gas leak early on Friday morning near Nagaram in East Godavari district, about 600 km from Hyderabad.

While the explosion killed some persons in nearby houses, the resulting fire engulfed several other houses adjacent to the pipeline trapping residents and many were burnt alive.#gail

Tuesday, February 23, 2016

விவசாயிகளின் வேதனைக் குரல்!

இன்றைய (23-02-2016) தினமணி நாளிதழில் "விவசாயிகளின் வேதனைக் குரல்!” என்ற தலைப்பில் கொங்கு மண்டலத்தில் விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிப்பது குறித்து வெளிவந்துள்ள எனது கட்டுரை.

விவசாயிகளின் வேதனைக் குரல்!

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

கேரளாவிலிருந்து கொங்கு மண்டலம் வழியாக; கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக கெயில் பைப்லைன் பெங்களூரு வரை செல்ல திட்டமிடப்பட்டது.  இந்த கேஸ் லைன் 137 தமிழகக் கிராமங்கள் வழியாக செல்லும், இதனால் மொத்தம் 5,000 ஏக்கர் விவசாய நிலங்களை நேரடியாகப் பாதிக்கும். 50,000 ஏக்கர் விளைநிலங்களில் மறைமுக பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளின் கவலையாக உள்ளது.

தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள் வழியாக கெயில் எரிவாயு எடுத்துச் செல்ல 2012ல் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடினார்கள்.  இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2014ல் தடையும் விதிக்கப்பட்டு இப்போது விவசாயிகளுக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டது. இது ஒரு வேதனையான விடயம். விவசாயம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலும் பாதிக்கப்பட்டு மக்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையும் எதிர்காலத்தில் ஏற்படலாம். 

இத்தீர்ப்பின்படி கெயில் குழாய்களை பதிக்கும் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது.  அதுவும் சந்தை விலையில் 40% நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு கொடுத்தால் போதும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது மேலும் விவசாயிகளை பாதிக்கும். இது இவ்வட்டார மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மாநில அரசுக்கு இதில் உரிமை கிடையாது என்றும், கெயில் குழாய் பதிக்கப்படும் விளைநிலங்களில் குழாயில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு விவசாயிகள் தான் பொறுப்பு என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டது வேதனையான விஷயம்.

கேரளாவில் சாலைகளின் ஓரத்தில் பதிக்கப்படும் குழாய்கள் இங்கே மட்டும் விளை நிலங்களில் பதிக்க முற்படுவது ஏன்?

உதாரணமாக ஒரு விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம் இருப்பதாக வைத்து கொள்ளுவோம், அந்த நிலத்தின் நடுவில் இந்த குழாய்கள் சென்றால், அந்த குழாய்களின் மீது அந்த விவசாயி நீர் வாய்க்கால்களை கொண்டு செல்ல கூடாது. 

எரிவாயுக்குழாய் பதிக்கும் வேலைகளின் போதும், கனமான குழாய்களைத் தூக்கிக் கொண்டு கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் விளைநிலங்கள் வழியே செல்லும்போதும், பராமரிப்புப் பணிகளின் போதும் விளை நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

எரிவாயுக்குழாய்  இடப்படும் இடங்களில் இருந்து 20 மீட்டர் வரை இருபுறமும் மரங்களோ வேறு கட்டிடங்களோ இருக்கக் கூடாது, குழாய்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் விவசாயிகளுக்குக் கடுமையான தண்டனை போன்ற பல கடுமையான விதிமுறைகள் விவசாயிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

அப்பாவி விவசாயிகளுக்கு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைவாசம் கிடைக்கும். 

கேரளாவில் இருந்து பெங்களூர் செல்வதற்கு சம்பந்தமே இல்லாமல் சுற்று வழியான தமிழகம் வழியாக 310 கி.மீ எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்திற்கு கெயில் நிறுவனத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. குழாய்களை விளைநிலங்கள் வழியாகப் பதிக்காமல் நெடுஞ்சாலை வழியாகப் பதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு சரியான தீர்வு கிடைக்காததால் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடாக தாக்கல் செய்யப்பட்டது.  இதில்தான் விவசாயிகளுக்கு விரோதமான தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது.  இதற்குமேல் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு செய்யவேண்டியதுதான் முக்கிய கடமை மட்டுமல்லாமல் அடுத்தகட்ட நகர்வும் கூட.

எண்ணூர்-மதுரை 615 கி.மீ. எரிவாயு குழாய் திட்டமும் நடைமுறைப்படுத்த பணிகள் துவங்கியுள்ளன. திருவள்ளூர்-காஞ்சிபுர மாவட்ட விவசாய நிலங்களில்தான் குழாய்களை பதிக்க ஆரம்ப பணிகள் நடைபெறுகின்றன. இதனால் ஏரி மாவட்டமான ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயமே அழிந்துவிடும். படிப்படியாக இத்திட்டம் விளைநிலங்கள் வழியாக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மதுரை வரை பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பைப்லைன் திட்டமும் வர இருக்கிறது.

மேலும் சேலத்திலிருந்து கடலூர் வரை 6 மில்லியன் கன மீட்டர் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கும் 500 கோடி மதிப்பிலான திட்டமும் செயல்படுத்தப்படும் திட்டங்களும் உள்ளன.

தென் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் மிதக்கும் திரவநிலை எரிவாயு மையமும் ரூ.2500 முதலீட்டில் அமைக்க திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

இம்மாதிரியான கேஸ் பைப்லைன் பிரச்சினை ஆந்திராவில் ஏற்பட்டது.  கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மாமிடிகுடுரு என்ற கிராமத்தில் விஜயவாடா அருகில் உள்ள லான்கோ கொண்டபள்ளி அனல் மின் நிலையத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும்போது 4 மீட்டர் ஆழத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த இந்த பைப்லைன்கள் துரு ஏறி தீப்பற்றி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சிலர் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். இன்னும் அந்த நோயிலிருந்து மாள முடியவில்லை.

2012 ஜூன் 28 அன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டு 30 அடி உயரத்திற்கு தீ ஜூவாலைகளாக எரிந்து அப்பகுதியையே நாசப்படுத்தியது. இப்படியெல்லாம் விபரீதங்கள் விளையக்கூடிய நிலைமையும் கேஸ் பைப் லைன்களில் ஏற்படுவதுண்டு. இந்த விபத்துக்கு முன்பே அந்த கிராம மக்கள் இது குறித்து நிர்வாகத்திற்கு தெரிவித்தபோது நிர்வாகம் எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளாததால் இந்த விபத்து ஆந்திராவில் நடைபெற்றது. இந்த விபத்தினால் மக்களே ஆர்ப்பரித்து கெயில் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.  இப்படியாக விபத்தை மக்களே போராடியதைப் போன்று கொங்கு மண்டலமும் போராட்ட களமாகிவிடும் என்பதை நீதிமன்றங்களும் ஆட்சியாளர்களும் உணரவேண்டும். பாதிப்பினால்தானே போராட்டம். அந்த பாதிப்பை உணராவிட்டால் என்ன மக்கள் நல அரசு? என்ன இயற்கையின் நீதி?

தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கக் கூடிய முன்னேற்பாடு நடவடிக்கைகளும் இந்த திட்டத்தில் சரியாக வகுக்கப்படவில்லை.

கொங்கு மண்டலத்தில் 5842 விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ள பி.எம்.பி. சட்டம் 2011ஐ திருத்த வேண்டும். இதில் மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.  இம்மாதிரி பைப்லைன் இணைப்புகள் சாலையின் ஓரத்தில்தான் மற்ற மாநிலங்களில் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் ஊடே செல்லவேண்டிய அவசியம் என்ன?

மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்;  குஜராத்தில் அகமதாபாத் - பகோதரா மற்றும் காந்திநகர் - சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்; உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் - வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.

தமிழக உரிமைப் பிரச்சினைகளை மட்டும் தொடர்ந்து கவனித்தால் உச்சநீதிமன்ற வழக்குகளில் நியாயங்கள் கிடைப்பதிலும் தாமதம். அப்படியே தீர்ப்பு வந்தாலும் எந்த பயனும் தமிழகத்திற்கு இதுவரை கிட்டியதில்லை.

காவிரியில் தீர்ப்பு வந்தது.  முல்லைப் பெரியாறில் தீர்ப்பு வந்தது. தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை நடக்கவிடாமல் உச்சநீதிமன்றம் தடுத்தது. மீனவர் பிரச்சினையும், கச்சத் தீவும் தீர்ப்புகள் வந்தபாடில்லை. சேது கால்வாய் திட்டமும் தடுக்கப்பட்டது. கூடங்குளம் அணுமின் திட்டத்திலும் போராட்டக்காரர்களுக்கு எவ்வித தீர்வும் உச்சநீதிமன்றத்தில் கிடைக்கவில்லை. குமரி மாவட்ட நெய்யாறு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவை. கேரளாவில் பிரச்சினையாக இருக்கின்ற எண்டோசல்ஃபானுக்கும் தீர்வு எட்டப்படவில்லை. போபால் விஷவாயு வழக்கிலும் இழுபறி. இப்படியாக நீதித் துறையிலும் மக்களின் நலன் என்ற நிலை சட்டத்துக்கு அப்பாலும் சிந்தித்து தீர்ப்புகள் வரவேண்டும்.

தமிழகத்தில் கூடங்குளம் பிரச்சினை, தேனியில் நியூட்ரினோ, தஞ்சை டெல்டாவில் மீத்தேன், சாயம் மற்றும் தோல் கழிவுகள் தேக்கம், பெங்களூர், கேரளா குப்பைகளை தமிழக எல்லைகளில் வந்து கொட்டுவது போன்று பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் போராடியும், தமிழகம் ஒரு குப்பைக் கூடை என்று மத்திய அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் நினைக்கின்றன.  சேலம் இரும்பாலையிலும் பிரச்சினை, நெய்வேலி பிரச்சினை, ஊட்டி போட்டோ ஃபிலிம் ஆலை சிக்கல், நீர் ஆதாரங்கள் பிரச்சினைகள், அண்டை மாநிலங்களோடு கண்ணகி கோட்ட பிரச்சினை, பழவேற்காடு பிரச்சினை, ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை, நாசமாக்கப்பட்ட காட்டு வளங்களும், கடல் வளங்களும், அன்னிய குளிர்பானங்கள்,  என ஒரு நீண்ட பட்டியலான தமிழகத்தின் உரிமை ஆதார பிரச்சினைகள் நிறைவேற்றாமலும், சிக்கலிலும், நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கிடப்பிலும் உள்ளன.

உரிமைகளை பறிப்போம். மக்களிடம் அதிகாரங்களை காட்டுவோம் என்பது நீதியல்ல.  அநீதி. நீதிமன்றங்கள் அரசுகளால் ஏற்படும் அநீதிகளுக்கு பரிகாரம் காணும் ஜனநாயக வழிபாட்டுத் தலங்கள். அங்கும் நீதி மறுக்கப்பட்டால் என்ன செய்ய?

கெயில் கொடுமையால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டல விவசாயிகள் இனி எங்கு சென்று தங்கள் வேதனைக் குரலை முறையிடுவார்களோ? அப்பாவி விவசாயிகளும் இரண்டாம்தர குடிமக்களாகிவிட்டார்களே.

விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருதி யிருக்கின் றாயடா? என்ற எட்டயபுரக் கவியின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றது.

மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்.,கங்கையே சூதகமானால் எங்கே போவது ?



Monday, February 22, 2016

Farmers suicides

# நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான் நமக்கு அந்த கஷ்டம் புரியுமா?

# மீடியா ஏன் இதப் பத்தி பேசல... 

#சமீபத்துல டில்லியில நடந்த விவசாயி தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க.

#ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி சாகுறாங்களாம்.

#சராசரியா வருசத்துக்கு 15,459 விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க

# போன 20 வருசத்தில 3,10,382 #விவசாயிங்க தற்கொலை செய்திருக்காங்க

1995-10,720
1996- 13,729
1997-13,622
1998- 16,015
1999- 16,082
2000- 16,603
2001- 16,415
2002- 17,971
2003- 17,164
2004- 18,241
2005- 17,131
2006- 17,060
2007- 16,632
2008- 16,796
2009- 17,368
2010- 15,964
2011- 14,027
2012- 13,754
2013- 11,744
2014- 12,141
2015(Jan-April)- 1,203

#இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறை என்ன பண்ணுவாங்க?

 

#விவசாய இனமே அழிஞ்சு போனா நம்ம நாட்டில என்ன மிஞ்சும்?

நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....# farmers sucide
தோற்பதை யார் கொண்டாடுவார்? ஆனால் இவர் கொண்டாடுவார். தோற்போரை, தோற்றவரை, எளியாரை நாடிப் போய் ஆதரவளிப்பார். ஊக்கமூட்டுவார்.  ஊரில் சிறுபான்மையென யாரும் இருந்து விடக் கூடாது. விட மாட்டார். வலியப் போய் தூக்கிவிடுவார். இது குறித்துப் பலமுறை நான் சிந்தித்தது உண்டு. இத்தகைய போக்குக் காரணம் அவரிடம் குடியிருந்த அந்த துணிபு, துணிச்சல் எனப் புலப்படப் பிடித்தது எனக்குக் கால்நூற்றாண்டு காலம். அவர் அழுது நான் பார்த்தது ஒரே ஒருமுறைதான். எங்கள் மனத்தால் எளிய உறவுக்காரப் பெண்மணி ஒருவர் காணாமற் போய்விட்டார் எனும் தகவல் இரவு பதினொரு மணிக்குக் கிடைக்கிறது; அப்படியே தரையிலமர்ந்து விசும்பி அழுகிறார். இவர் அழுவதைப் பார்த்து ஊரே கலங்கிப் போனது. மற்றபடி, எத்தனையோ முன்னெடுப்புகள் தவறாக, தோல்வியில் முடிந்ததுண்டு. அந்த முடிவிலிருந்து பின்னோக்கிப் போய் அவரின் செய்ற்பாடுகள், அதனின்று முன்வந்து நடப்புக்காலத்திய அவர்தம் மனநிலை என்பதையெல்லாம் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்ததுண்டு. எந்த சலனமோ குற்றவுணர்வோ இருந்ததில்லை. ஒரு முடிவு எட்டப்பட்டபின், அந்த முடிவுக்கு வித்து நான் என்கிற நிலையில் அதன்விளைவுகளுக்கு முதுகுகொடுத்துத் தாங்கி நிற்பார். அத்தகைய மனவலிமைக்கேற்ற ஒரு குரல். கணீரென ஒலிக்கும் ஒலிப்பில் அந்தியூரே அதிர்ந்ததுண்டு. 

அவருடன் அந்த அறையில் எழுபது நாட்கள். இரவு முழுக்க அமெரிக்க நேரத்துக்கொப்ப அலுவலக வேலை. அவ்வப்போது அவருடனான உரையாடல். பகல் முழுக்க அவர் உறங்கும் போதெல்லாம் நானும் உறங்குதல் இப்படி. தன்னுடைய இளம்பிராயம், பள்ளிநாட்கள், தோழர்கள் என எல்லாவற்றைப் பற்றியும் நினைவு கூர்ந்து கொள்வார். அந்த இரண்டு நாட்கள் அண்ணனும் விடுப்பெடுத்துக் கொண்டு வீட்டிலிருந்தார். அமெரிக்காவிலிருந்து வந்தவனே விடுப்பெடுக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறான். இவனுக்கெதுக்கு விடுப்பென அவருடைய நண்பர்கள் கலாய்த்ததன் பொருட்டு அவரே அழைத்து வேலைக்குப் போகச் சொன்னார். காலை ஒன்பது மணி வாக்கில் ஒவ்வொருவராக அழைத்து இன்சொற்கள், அறிவுரைகள் நல்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த எனக்கு விநோதமாக இருந்தது. இரகசியம் கருதி சில செய்திகளை சொற்களால் சொல்லாமல் செய்கையால் செய்து காண்பித்தார். அவற்றைப் புரிந்து கொள்வதில் வீட்டிலிருந்த அம்மா, சித்தி, அண்ணன்களுக்குப் பெரிய சிக்கலிருந்தது. ஆனால் எனக்கோ ஒவ்வொரு செய்கையிலும் ஒவ்வொரு கதையே வெளிப்பட்டது.

காலை பத்து மணி வாக்கில் தன் ஞானக்கண்களால் நமக்குக் காணக்கிடைக்காத ஓர் உலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அதையெல்லாம் அறிந்து கொள்ளும் ஆவலில், எனக்கும் சொல்லுங்கவென்றேன். பேச்சுக் கொடுக்க வேண்டாம்; நான் தூங்க வேண்டுமென்றார். ஆனாலும் கண்களை மூடியவாறு தொடர்ந்து அவரொரு உலகில் உலாப் போய்க்கொண்டிருப்பதை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது சிரிப்பார். ‘அட்ப் போடா’, ‘பார்த்துக்கலாம்’, ‘அப்பிடியெல்லாம் விட்ற முடியாது’ போன்றவைகள் மட்டும் எப்போதாவது அறையில் ஆலங்கட்டி போல வந்து விழுந்து கொண்டிருந்தன. தொடர்ச்சியற்றுப் பெய்த அத்தகைய சொல்மழையில் கடைசியாக வந்து விழுந்த துளி, ”ஒரு பொம்பளைய, அப்பிடிக் கைவிட்ற முடியுமா?”. அதற்குப் பிறகு நன்கு உறங்கிப் போனாரென்றே நினைக்கிறேன். ஏனென்றால் அதற்குப் பிறகு நான் கண்ணயர்ந்து விட்டேன்.

அம்மா வந்து எழுப்பினார்கள், “மணியொன்னாகுது. சாப்பிட்டுவந்து படுக்கலாம். வா!”. ஒரு கணம் வெறுமனே படுத்திருந்தேன். தலையை வலப்பக்கம் திரும்பிப் பார்த்தேன். தன் தண்டுவடங்களைத் தரையில் பதித்துப்படரும் கொடிகளின் செய்ற்பாடு மல்காத்திருத்தல். அதையே மல்லாக்கப்படுத்திருத்தல் என்கிறோம். அதைப் போன்ற மல்காத்தல்தான் நான் கண்ட காட்சியாக இருந்தது. தன்னைச் சார்ந்தவர்களையும், தன்னை நாடி வந்தவர்களையும் காத்துப் படர்ந்திருக்கும் கொடி போலவே படுத்திருந்தார். விழிகள் மூடியிருக்க ஆழ்ந்த அமைதி. இடையூறு செய்வானேன்கிற சிந்தனையோடு மெதுவாக, அக்கொடியின் இலைகள் அசைவதைக்காட்டிலும் மிக மெதுவாக எழுந்து வந்து வீட்டு முற்றத்தில் நின்று உறக்கச் சோம்பலைத் துரத்தியடிக்கும் பொருட்டு நெட்டி முறித்துக் கொண்டேன். “மணீ... மணீ...”, கணீரென வந்து விழுந்தன.

உள்ளறைக்குள் ஓடிப் போனேன். என் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தன விழிகளிரண்டும். அகல விரிந்த கண்கள். நிலைகுலையாத தீர்க்கமான பார்வை. ‘அப்பா’ என்றேன். அவருக்கேவுரிய ஊக்கம், மனவுறுதி முதலானவற்றை என்னுள் புகுத்தின அவரது புன்முறுவல். வலுவாகக் குழப்பமற்று வெளிப்பட்டது பேச்சு. குரலின் ஓசையில் கொஞ்சம் கூட அதன் கட்டு, ஒலியோசை, வீரியம் குறைந்திருக்கவில்லை. அதே குரல். “மணீ... வா சாமி! நான் இனி இருக்கிறதுக்கில்ல. கிளம்புறன்!”. ”அப்படி சொல்லாதீங்ப்பா, தைரியமா இருக்கணும்!”. “எனக்கென்ன? பாத்துக்கலாம்!” என்ற அவரது வழமையான சொற்களால் என் மனம் உறுகி வைரமாகிப் போனது அக்கணம். கையைப் பிடித்தேன். அவரும் என் கையைப் பிடித்துக் கொண்டார். அருகிலிருந்த சுடுபானக் கொள்கலத்திலிருந்து சற்று வார்த்து புகட்டப் போனேன். ஒரே ஒரு வாய் வாங்கிக் கொண்டார். சைகையால் மேற்கொண்டு வேண்டாமெனச் சொல்லி விட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டார். போர்வையை நன்கு கழுத்து வரை இழுத்து விட்டேன். இசைந்து ஏற்றுக் கொண்டதை அவரது தலையசைவு குறிப்பால் உணர்த்தியது. 

அன்று ஒலித்த அந்தக் குரல், தன்னில் கரைந்து போகிற குரல் அல்லவென்பது அந்தக் காற்றுக்குத் தெரிந்திருக்கவில்லை அக்கணம். ஆமாம்; இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிற அக்குரல் விட்டுப் போயிருப்பது ஒன்றே ஒன்றைத்தான்! எதையும் எதிர்கொள்கிற துணிபு!!!

-பழமைபேசி

__._,_.___










.
 
__,_._,___

கிராமிய சிந்தனை

கரிசல் காட்டில் சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆசிரியராக இருந்துகொண்டு அற்புதமான எளிய படைப்புகளை படைக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியை Sengamala Nachiyar அவர்களுக்கு சல்யூட்.  இதை லண்டனில் இருந்து தற்போது சென்னைக்கு வந்துள்ள அன்பு நண்பர் அர்ஜுனா சிவானந்தம் படித்து மகிழ்ந்தார்.  இவர் இன்றைக்கு ஆட்சியில் உள்ள பிரதமர் டேவிட் கேமரூன் கன்சர்வேட்டிவ் கட்சியின் நிர்வாகி.  ஈழத் தமிழர் மத்தியிலும் லண்டனில் உள்ள அரசியல் களத்தில் உள்ளோரோடும் நன்கு அறிமுகமானவர். இவருக்கும் இந்த வரிகள் ஈர்த்தன.

அன்பிற்குரிய சகோதரி அவர்களே, கிராமத்தில் இருந்து உங்கள் பணிகளை தொடருங்கள். வாழ்த்துக்கள்.

கிராமத்து மனைவியின் காதல்
********************************************
வீடுவாசல் கூட்டி வைப்பேன்
விருந்துணவு சமைத்து வைப்பேன்
உன்வரவை எதிர் பார்த்து
வாசலிலே நின்றிருப்பேன்..
அருகம்புல் வேர்நிழலில்
மூன்றுகல் அடுப்பு வைத்து
முக்காப்படி அரிசி போட்டுச் சமைக்கச் சொன்னாலும் செய்திடுவேன்.!
சாமத்திலே எழுந்திடுவேன்
சமையல் எல்லாம் முடித்திடுவேன்
டீத்தண்ணி போட்டுவச்சி
முகம் கழுவி எழுப்பிடுவேன்.!
மஞ்சப்பூசித் துளிப்பூவும் சூடி
நெற்றியில் பொட்டிட்டு
தாம்பூலம் தட்டில் வைத்துத்
தந்திடுவேன் நான் உனக்கு .!
காடுகரை வேணாம் மாமா உன்
காசுபணம் வேணாம்
காலம் உள்ளவரை உன்
மனசு மட்டும் போதும் மாமா..!!
யார் என்ன சொன்னாலும்
வேறாய் நாம் பிரியாமல்
கூடுவிட்டுக் காடு போனாலும்
கூடவே வாழ்ந்திடுவோம் மாமா ..!!

********************************************
விளை நிலங்கள்
விளையாத களங்களாக
பசுஞ்சோலைகள்
பண்ணை வீடுகளாக
தோப்பு துரவுகள்
வீட்டடி மனைகளாக
மாற்றியோர் வாழ்வில்
ஏற்றமே கண்டார்
இவர் வாழ்விலோ
வரப்புகள் உயர்ந்தாலும்
வாழ்க்கை உயரவில்லையே..!

Sunday, February 21, 2016

தமிழ் ஈழத்தில் வறட்சியும், வறுமையும்

உலக வங்கியின் அறிக்கையின்படி இலங்கையில் மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சி  போன்ற பகுதிகள் வறட்சியிலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக முல்லைத் தீவு மிகவும் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு பல்வேறு நிதி ஆதாரங்களை தமிழர்களுக்கு வழங்கியும், இப்பகுதிக்கு செல்லவில்லை என்றுதான் செய்திகள் தெரிவிக்கின்றன.  வாங்குகின்ற சக்தியையும் இங்குள்ள மக்கள் இழந்து வருகின்றனர். அதேபோலத்தான் மட்டக்களப்பு பகுதிகளும் வறட்சியில் உள்ளன. சிங்களர் பகுதிகளில் வறட்சியும், வறுமையும் அண்டாமல் சிங்கள ஆட்சி கவனித்துக் கொள்கிறது.  இந்த பகுதிகளில் உள்ள 30 சதவீத 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், ஊட்டச்சத்து இல்லாமல் எடை குறைவாக காணப்படுகின்றன.  வளரும் குழந்தைகளுக்கும் சரியான உணவுகளும் வழங்கப்படாமல் வேதனையான நிலைமையில் தமிழர்கள் வாழ்கின்றனர்.

தமிழர்கள் ஆதரவில் ஆட்சிக்கு வந்தாலும், இந்த வறுமைப் பிடியிலிருந்து மைத்ரியும், ரனிலும் இந்த கொடுமையை பாரா முகமாக இருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.  வறுமையின் அளவு 12.7 சதவீதத்தை எட்டிவிட்டது. இதை மனித நேயத்தோடு உலக சமுதாயம் நோக்க வேண்டும்.  ஏற்கனவே சிங்கள ராணுத்தினர் பிடியில் சிக்கி வாடும் மக்களை வறுமையும் வாட்டுகிறது என்றால் ஈழத்திலுள்ள மனித சமுதாயத்தை நினைக்கும்போது வேதனையடைய செய்கிறது.

Journalist

இந்த வாரம் (24.2.16) ஜூனியர் விகடன் இதழில் திரு. திருமாவேலன் தொடரில்  'மெயில்' கணபதி, காமராஜுலு, முருக தனுஷ்கோடி, ஏ.என்.எஸ்., அலை ஓசை நாராயணன், அறந்தை நாராயணன், சுபாஷ் சுந்தரம், வைத்தியநாதன், இந்தியன் எக்ஸ்பிரஸ் வேம்புசாமி, விகடன் ராவ், அம்பி ஜெகநாதன் போன்ற முக்கிய #பத்திரிகையாளர்களை குறிப்பிட்டிருந்தார்.  இவர்கள் அனைவரோடு பேசிப் பழகக் கூடிய வாய்ப்பு மாணவர் பருவகாலத்தில் கிடைத்தது. அரசினர் தோட்டத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி வளாகத்தில் இவர்களை அடிக்கடி சந்திப்பதும் உண்டு.

தினமணி ஆசிரியர், ஏடுகளின் பிதாமகன் ஏ.என். சிவராமன் அவர்கள், 1980 என்று நினைவு, நான் அனுப்பிய கட்டுரையை பார்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணில் (76575 மயிலாப்பூரில் திரு. நெடுமாறனும், நானும் பயன்படுத்திய எண்)  அழைத்து கட்டுரை நன்றாக உள்ளது. கோர்ட்டுக்கு போய்விட்டு மாலையில் வந்து என்னை தினமணி ஆபிசில் பார்க்க முடியுமா என்றார்.  அப்போது என்னிடம் எந்த ஊர், என்ன என்று விசாரித்த உடன், கோவில்பட்டி என்னுடைய மனைவியின் ஊர் என்று சொல்லி என்னுடைய உறவினர் சிலரை விசாரித்தார். அவரை அன்றைக்கு சந்தித்தது ஒரு முக்கியமான வாழ்க்கையின் சம்பவமாக இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. மறுநாள் நான் எழுதிய தேர்தலும், சீர்திருத்தங்களும் என்ற கட்டுரை நடுப்பக்கத்தில் தினமணியில் வெளியானது. இயல்பாக சாந்தமாக இருந்தாலும் ஏ.என்.எஸ். ஆங்கிலேயரை எதிர்த்து இளமை காலத்தில் அம்பாசமுத்திரத்திலிருந்து நெல்லைக்கு வரும் புகைவண்டியில் வெடிகுண்டுகளையெல்லாம் பெட்டியில் வைத்து அனுப்பியதெல்லாம் வரலாற்று செய்திகள்.

இவர்களில் சிலரோடு அருகே உள்ள உடுப்பி கிருஷ்ணா பவன், தர்பார் ஓட்டல்,  அல்லது அண்ணா சாலையில் உள்ள காதி பவனில் மேல் மாடியில் இயங்கிய உணவகத்துக்கு சென்று டீ, காபி அருந்துவது உண்டு.  இந்த பத்திரிகை ஜாம்பவான்கள் மனதில் பட்டதை நியாயமாக எழுதக்கூடியவர்கள் ஆவார்கள். அது அக்காலம்.  தீபம் நா. பார்த்தசாரதி, சின்ன அண்ணாமலை, முருக தனுஷ்கோடி போன்றவர்களை நேரில் சென்றுதான் சந்திப்பது வழக்கம். இவர்களில் பலர் நெடுமாறனுடைய மயிலாப்பூர் இல்லத்திற்கு வருவதுண்டு.  இதில் சுபாஷ் சுந்தரத்தின் துக்கத்தைத்தான் இன்றைக்கும் தாங்க முடியவில்லை. தீபம் நா. பார்த்தசாரதி அவர்களின் பூர்வீகம் எங்களின் கரிசல் மண்ணான ஸ்ரீவில்லிபுத்தூர்தான். 

Ulysses from "Troilus and Cressida"

"Take but degree away, untune that string,
And hark, what discord follows! each thing meets
In mere oppugnancy."

-- Ulysses from "Troilus and Cressida" (Act 1, Scene 3)

நாராயணசாமி நாயுடு-க்கு மணி மண்டபம் - தாமதமான அறிவிப்பு

தொடர்ந்து விவசாயிகள் பிரச்சினைகள், கோவில்பட்டியில் மறைந்த விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலை அமைப்பது, இதுவரை துப்பாக்கிச் சூட்டில் பலியான 70 அப்பாவி விவசாயிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று எனது வலைதளத்திலும், முகநூலிலும், ட்விட்டரிலும் எழுதி வந்தேன். தினமணி போன்ற நாளேடுகளிலும் இது குறித்து பத்திகளும் நீண்ட வருடங்களாக பதிவு செய்து வருகின்றேன்.  இந்த செய்திகள் உளவுத் துறை மூலமாக அரசின் கவனத்துக்கு வந்ததாக என்னுடன் தொடர்பில் உள்ள அரசு அதிகாரிகள் என்னிடம் சில நிமிடங்களுக்கு முன் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் 40 பேருக்கு மேல் இறந்துள்ளனர். 1992 கால கட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடசலபுரம் கிராமத்தைச் சார்ந்த எத்திராஜ் நாயக்கர், அகிலாண்டபுரத்தை சேர்ந்த ஜோசப் இருதய ரெட்டியார், கோவில்பட்டி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் லட்சுமி ஆலை அருகே சாகடிக்கப்பட்டனர். முதலில் இவர்கள் நோய்வாய்ப் பட்டு இறந்தார்கள் என்று அரசு இவர்களின் தியாக மரணத்தை கொச்சைப்படுத்தியது.  அப்போது வைகோ தி.மு.க.வில் நாடாளுமன்ற உறுப்பினர். இதில் அவர் ஆற்றிய பணியும் முக்கியமானது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் இருதய ரெட்டியாரின் உடலைத் தோண்டி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று நான் ரிட் மனுவை தாக்கல் செய்தேன்.  அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கே.எஸ். பக்தவத்சலம், இருதய ஜோசப் ரெட்டியாருடைய உடலை தோண்டி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.  அது மட்டுமல்லாமல் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணியம் தலைமையில் கோவில்பட்டி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையிலும் ஆஜரானேன். இப்படியான இந்த இருவருடைய துப்பாக்கிச் சூடு மரணத்தை நேற்றைய சட்டப்பேரவையில் ஜெயலலிதா வெளியிட்ட 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இது முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது.  31/12/1980 என்னுடைய கிராமம் குருஞ்சாக்குளத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது 6 பேர் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தனர். அச்சமயம் எம்.ஜி.ஆர்.  மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். இதில் சாத்தூரப்ப நாயக்கர், வெங்கடசாமி நாயக்கர், வரதராஜன், வெங்கடசாமி, ரவிச்சந்திரன், முரளி என்போர் அன்றைய அ.தி.மு.க. அரசால் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். இது குறித்து சாதிக் பாட்ஷா, முரசொலி மாறன், வைகோ, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் முறையிட்டனர்.

நாராயணசாமி நாயுடு சிலையை குறித்து 1984ல் பொதுத் தேர்தலின்போது கோவில்பட்டியில் அவர் மறைந்த நகரில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இனாம் மணியாச்சி விளக்கில் அமைக்க திட்டமிட்டு பணிகளும் நடந்து வருகின்றன. இதையெல்லாம் தொடர்ந்து என் வலைதளங்களை கவனித்தவர்களுக்குத் தெரியும். நாராயணசாமி நாயுடுவுக்கு எப்போதோ நினைவு மண்டபம் கட்டியிருக்க வேண்டும். இது காலதாமதம்.

1. விவசாயத்திற்கென்று மத்திய அரசிலும், மாநில அரசிலும் தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

2.  நெல் கரும்பு போன்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவை விட 50 சதவீதம் விலை கிடைத்தால்தான் கட்டுபடியாகும்.

3. பல மாநிலங்களில் சட்ட முன் வடிவாக வந்துள்ள இயற்கை விவசாயத்தை தமிழக அரசும் சட்ட வடிவமாக்க வேண்டும். இதற்கு உரிய மானியங்களும் வழங்கப்பட வேண்டும்.

4. எண்ணற்ற பொறியியல் கல்லூரிகள் அமைவது போல குறிப்பிடத்தக்க அளவில் விவசாயம், கால்நடை, மீன்வள கல்லூரிகளும் கூடுதலாக்கவேண்டும்.

5. வளர்ச்சி, முன்னேற்றம், புதிய பொருளாதார திட்டத்தினால் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். தாராளமயமாக்கல் என்ற கொள்கைக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் விவசாயத்தை பாழ்படுத்துகின்ற நில ஆர்ஜித முறைகளை முற்றிலும் கைவிட வேண்டும்.

6. நீர் ஆதாரங்களை பெருக்கி, நீர் நிலைகளை தூர் வாற வேண்டும். ஆந்திரா, கேரளாவில் ஒரு பிடி மணல் கூட எடுக்க முடியாதபடி சட்டங்கள் இருப்பது போல, அம்மாதிரி சட்டங்கள் தமிழகத்திலும் வரவேண்டும்.

7. அண்டை மாநிலங்களில் உள்ள காவிரி, முல்லை பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், நெய்யாறு, பாலாறு போன்ற நதிநீர் சிக்கல்களுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்.

8. நீர் பாசனத்தை பராமரிக்கும் வகையில் தமிழக அரசு நீர்வளத்துறை என்ற அமைச்சகத்தை தனியாக அமைக்கவேண்டும்.

9. அண்டை மாநிலங்களில் உள்ள நீர் தாவாக்கள் உள்ள அணைகளுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வழங்க வேண்டும். இதனால் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அண்டை மாநிலத்தின் நெருக்கடி இல்லாமல் தங்கள் பணியை சுதந்திரமாக செய்ய முடியும்.

10. தாட்கோ, சாலை போக்குவரத்து ஆணையம் போல விவசாயிகளுக்கு கடன் வழங்க தனி நிதி ஆணையத்தை மாநில அரசு உருவாக்க வேண்டும்.

11. நெல் கொள்முதலில் உள்ள குளறுபடிகளை நீக்கி அதற்கான ஊக்கத் தொகையை அளித்து ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ.500 தரவேண்டும்.

12. தமிழக நதிகளை இணைக்க வேண்டும்.

13. விவசாயத்திற்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும்.

14. கெயில், மீத்தேன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் விவசாயத்தை அழித்துவிடும். இவற்றை கைவிட வேண்டும்.

15. பாரம்பரிய விதைகளை கட்டிகாத்து பாதுகாக்க வேண்டும்.

16. பொருளாதார நிபுணர் ஜே.சி. குமரப்பாவின் தற்சார்பு பசுமை கிராமங்களை உருவாக்க வேண்டும். கிராமிய பொருளாதாரத்தை நவீன பொருளாதாரத்தோடு இணைத்து நிதி அறிக்கையில் நிதிகளை விவசாயத்திற்கும், கிராம மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும்.

17. தேங்காய், இரப்பர், முந்திரி பருப்பு போன்ற பயிர்களுக்கு பக்குவப்படுத்தும் ஆலைகளை அந்தந்த வட்டாரங்களில் நிறுவ வேண்டும்.

18. அத்திக்கடவு - அவினாசி திட்டம் வெறும் அறிவிப்பாக இல்லாமல் உடனே நடைமுறைக்கு வரவேண்டும்.

19. வனங்களில் இருந்து வரும் விலங்குகளால் விவசாயப் பயிர்கள் பாதிப்படையாமல் கவனிக்கவேண்டும்.

20. விவசாயத்தோடு கால்நடைகள், கோழி வளர்ப்பு போன்றவற்றை பெருக்கக் கூடிய வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.

இப்படியான விவசாயிகள் பல கோரிக்கைகளை கவனத்தோடு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைளை, அவசரமாக, அவசியமாக எடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.

விவசாயிகள் போராட்டம் அமைப்பு ரீதியாக 1966ல் நாராயணசாமி நாயுடு, வேலப்பனும் கோவை வட்டாரத்தில் முன்னெடுத்தனர். தொடர்ந்து அவர் மறையும் வரை விவசாயிகள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் பாடுபட்ட ஆளுமை ஆவார். இது குறித்து வலைதளத்தில் இதற்கு முன்னால் எழுதிய பதிவுகளையும் இங்கே மீண்டும் குறிப்பிட்டுள்ளேன்.

http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/02/blog-post.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/02/blog-post_59.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/01/farmers-suicide.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/10/blog-post_68.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/10/blog-post_43.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/08/farmer-suicide.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/08/agriculture.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/08/31-08-2015-farmers-suicide-list-in.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/07/blog-post_11.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/06/agriculturistsuicide.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/05/statueforagriculturalmovementleader.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/05/5-land-acquisition-bill-5.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/04/statue-for-agricultural-movement-leader.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/03/agriculturist-agitation-in-tamil-nadu.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/02/agri-folk-leader-c-narayanasamy-naidu.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2015/02/formers-suicide.html





Saturday, February 20, 2016

Ettiyapuram Ettappan.

#எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது.
எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் #எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் எட்டப்பன் என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர், பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.

எட்டப்பன் நல்லவனா..??கெட்டவனா..??

'பாரதியார் எட்டப்பனை விரும்ப காரணம்....???
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார்.தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியில் இருந்துள்ளது........

எட்டப்பன் தமிழ் வளர்ச்சிக்கும் , ஆன்மிக வளர்ச்சிக்கும் பாடு பட்டு வந்துள்ளனர் . கழுகுமலை முருகன் கோவில் போன்ற பல கோவில்களை கட்டியும் , இசுலாமியர்கள் , கிருத்துவர்களை ஆதரித்தும் வந்துள்ளனர்.

பொதுவாக பங்காளி ( ஒரே இனத்தை சேர்ந்தவர்களுடன் ) சண்டை , சச்சரவு வருவது இயல்பே . அதே போல எட்டயபுரமும் , பாஞ்சாலங்குரிசியும் அருகருகே பாளையம் என்பதால் இவர்களுக்குள் எல்லை தகராற

எட்டயபுரம் அரண்மனையில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர், கடிகைமுத்துப் புலவர். தமிழ்ப் புலமை மிக்க மன்னர் எட்டப்பருக்கு மிகவும் நெருக்கமானவர். அரண்மனையிலிருந்து அவரை அழைத்துவர நித்தமும் அரசர் பல்லக்கு அனுப்புவார். எல்லா வசதிகளையும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்த புலவர், முதுமையில் நோய்வாய்ப்பட்டார். "நாலு வைத்தியரும் நம்புதற்கு இல்லை' என்று கூறிவிட்டனர்.

இச்செய்தி கேட்ட மன்னர், புலவரைப் பார்க்க வந்தார். அவரைப் பார்த்து மனம் வருந்தினார். புலவரின் ஒரே மகளும் அழுது புலம்பினாள். அந்த நேரமும் நெருங்கியது. உறவினர்கள், புலவரின் மகளை நோக்கி, ""அம்மா! பஞ்சைப் பச்சைப் பாலில் நனைத்து அப்பாவின் வாயில் பிழி'' என்று கூறினார்.

அப்போது பஞ்சு அங்கு இல்லாததால், பழைய வெள்ளைத் துணியை அதற்குப் பயன்படுத்தினாள் மகள். புலவர், வாயில் பால் விழுந்ததும் முகம் மாறினார். ""அப்பா! பாலும் கசக்கிறதோ?'' என அவள் கேட்க, அவர், ""பாலும் கசக்கவில்லை; பாலைப் பிழிந்த துணியும் கசக்க (துவைக்க) வில்லை'' எனத் தான் இறக்கும் தருவாயிலும் தமிழில் விளையாடினார்.

""அப்பா அப்பா'' என மகள் அழ, ""அழாதே அம்மா! இந்த ஓர் அப்பன் போனால் என்ன? உன்னைக் காப்பாற்ற எட்டு அப்பன் (எட்டப்பன்) இருக்கிறான்; ஏன் கவலைப்படுகிறாய்?'' என்று கூறிக் கண் மூடினார்.

மன்னர் மகளது கரம் பற்றி, "நானிருக்கிறேன் உன் தந்தையாக'' என்று ஆறுதல் கூறினார். புலவர்கள் வாழ்வில் தமிழ் எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறது பாருங்களேன்!

நயவஞ்சகன் புதுக்கோட்டை தொண்டைமான்

கல்தோன்றி மண்தோன்றா காலத்து வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் நமது இனம் . அதே போல இந்தியாவில் ஆங்கிலேயர்களை கண்டு அஞ்சி அவனுக்கு வரி செலுத்த அனைத்து பாளயகாரர்களும் சரணடைந்த போதிலும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மு ஆங்கிலேயர்களுக்கு வரிசெலுத்த மறுத்ததோடு ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்தார் என்பது வரலாறு . 

ஆங்கிலேய ஆவணங்கள் ஆகட்டும் , கால்டுவெல் சரித்தர நூலாகட்டும் , ஆங்கிலேயர்கள் முதல் மா .பொ.சி வரை வியந்த பாளையக்காரர் கட்டபொம்மு என்பது அனைவரும் அறிந்த ஒன்று . 

வீரபாண்டிய கட்டபொம்முவை காட்டி கொடுத்தது எட்டயபுரம் ஜெகவீர பாண்டிய எட்டப்ப நாயக்கர் , காட்டி கொடுத்தான் எட்டப்பன் என்றும் ஒரு வரலாற்று பிழை நம் நாட்டில் நிகழ்ந்துள்ளது . உண்மையில் எட்டபன்னுகும் , கட்டபொம்மனுக்கும் என்ன தகராறு , யார் காட்டி கொடுத்தவன் என்பதை பற்றியும் பாப்போம் ,. 

வீரபாண்டியன் - எட்டப்பன் :

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பெல்லாரி, விஜயநகரம் போன்ற பகுதிகளில் இருந்து இசுலாமியர்களின் படையெடுப்பில் இருக்கும் இடங்களில் இருந்து ஒரு நாட்டின் ஆயிரகணக்கான ஒரே சாதியினை சேர்ந்த மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயருகிறார்கள் . அவர்கள் தான் தற்போதைய கம்பளத்தார் வீர மக்கள் . 1000 வருடங்களுக்கு முன்பும் இவர்கள் தெலங்கான , ஆந்திர பகுதியை ஆட்சி செய்தவர்களே , இப்படி வரலாறு நெடுகிலும் ஆட்சி செய்த காரணத்தால் தமிழகதிற்கு வந்தும் ஆட்சி செய்யவேண்டும் என்று எண்ணினார்கள். 

இவர்கள் தமிழ் நாட்டிற்க்கு வந்த காலம் ( கி.பி .1000 - 1020 ) இக்காலத்தில் இங்கு சேர , சோழ , பாண்டியர்களின் ஆட்சி நடந்து வந்துள்ளது . ராஜகம்பளம் மக்கள் குழுவாக வாழக்குடியவர்கள். இவர்கள் தங்களுக்கென பகுதிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு அங்கு இவர்களே குறுநில மன்னர்களாக வாழ்ந்து வந்துள்ளனர் . இவ்வாறு இவர்கள் வாழும் நிலையில் ஒரு ஒரு குழுவிற்கும் ஒரு பெயர் வேய்துகொண்டு கடுமையான சட்டதிட்டங்களுடன் வீரமுடன் வாழ்ந்து வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் சில்லவார் என சொல்லப்படும் வீரமறவர்களின் தலைமையில் எட்டயபுரமும் , தொகலவார் எனப்படும் வீரபரம்பரைக்கு பாஞ்சாலங்குரிசியும் , போடிநாயக்கனூர், திண்டுக்கல் , கரூர் , நாமக்கல் , மணப்பாறை , தேனி , விருதுநகர் போன்ற பகுதிகளில் தங்கள் குழுக்களை அமைத்துக்கொண்டு ஆட்சி செய்து வந்துள்ளனர் . 

பொதுவாக பங்காளி ( ஒரே இனத்தை சேர்ந்தவர்களுடன் ) சண்டை , சச்சரவு வருவது இயல்பே . அதே போல எட்டயபுரமும் , பாஞ்சாலங்குரிசியும் அருகருகே பாளையம் என்பதால் இவர்களுக்குள் எல்லை தகராறு வருவதும் இயல்பே . ஆனால் எட்டயபுரத்து மன்னரும் , வீரபாண்டியரும் சண்டை இட்டதாக வரலாறுகள் இல்லை ஏனெனில் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் . இவர்களுக்குள் மனஸ்தாபம் இருந்து வந்ததே அல்லாமல் பகையோ , சண்டையோ வந்ததாகவும் தெரியவில்லை . இவர்களின் பிரிவை பயன்படுத்திகொண்ட ஆங்கிலேயன் இவர்களை பிரித்து பகைமையை உருவாக்கி அதன்மூலம் இவர்களை அழித்துவிடலாம் என்று எண்ணினான் . அவன் நினைத்தது போலவே இருவரிடமும் கலகம் செய்து பகையாளி ஆக்கினான். ஆங்கிலேயர்களுக்கு எட்டபனும் உதவினார் என்பதும் உண்மை ஏனெனில் இருவருக்கும் பகை இருந்து வந்துள்ளது , இப்படி நடப்பது ஒன்றும் வியப்பு இல்லை . எட்டப்பன் கட்டபொம்மனிடம் நேரடியாகவே தன் எதிர்ப்பை காட்டி உள்ளார் . இதுவே தமிழக புரனானுருகளில் காணப்படும் மன்னரின் ஆண்மை வீரம் . 

ஆனால் ஆங்கிலேயர்கள் கட்டபொம்முவை அழிக்க எண்ணி வந்த நிலையில் கட்டபொம்மு ஊர் ஊராக திரிந்து கடைசியில் புதுக்கோட்டை மன்னன் தொண்டைமானிடம் நட்புணர்வோடு ஆதரவு கேட்டு அவன் அரண்மனைக்கு செல்கிறார் , ஆனால் துரோகி தொண்டைமான் கட்டபோம்முவிற்கு விருந்தளித்து உணவு உண்ணும் வேளையில் காட்டிகொடுதான் . வீரமிக்க ராஜ கம்பளத்து நாயக்கர் மக்கள் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள் , மானமும் வீரமும் இரு கண்களாக வாழக்குடியவர்கள் . பகை என்று வந்தால் நேரடியாக போரிடகூடியவர்கள் . 

உண்ண உணவளித்து , இருக்க இடமும் கொடுத்து , நெஞ்சீரம் இல்லாமல் துரோகம் செய்ய ராஜ கம்பளம் மக்கள் என்றும் சென்றது இல்லை , கம்பளத்தார் வாழும் மண்ணில் ஈரம் இல்லை என்றாலும் , மனதில் ஈரம் கொண்டு வாழ்பவர்கள் . 

எட்டயபுர சமஸ்தானம் என்பது மிகபழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க நாடு , தனி நாடாக ஏறக்குறைய 500 கிராமங்களுக்கு மேல் தன் ஆட்சிக்கு உட்படுத்து தன்னாட்சி நாடாக 800 வருடகாலம் இருந்து வந்துள்ளது . எட்டயபுரம் அரசர்கள் தமிழ் பற்று கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர் , தனது தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டு வந்தனர் . மகாகவி சுப்ரமணிக்கு , பாரதி பட்டம் கொடுத்ததே எட்டயபுர ராஜா தான் , பாரதி பல பாடல்களில் எட்டப்பரை எட்டயபுர அரசர்களை புகழ்ந்து வந்துள்ளார் . சங்கீத மும்மூர்த்தியான முத்துசாமி தீட்சிதர் , சீறாப்புராணம் இயற்றிய உமறுபுலவர் போன்ற பல புலவர்களை ஆதரித்து வந்துள்ளனர் . 

தமிழ் வளர்ச்சிக்கும் , ஆன்மிக வளர்ச்சிக்கும் பாடு பட்டு வந்துள்ளனர் . கழுகுமலை முருகன் கோவில் போன்ற பல கோவில்களை கட்டியும் , இசுலாமியர்கள் , கிருத்துவர்களை ஆதரித்தும் வந்துள்ளனர் . படை வீரர்கள பலரை கொண்டு வீரமிக்கவர்கலாக வாழ்ந்து வந்துள்ளனர் , குமாரகம்பன ( நாயக்கர் ஆட்சிக்கு தந்தை ) , நாகம்மா நாயக்கர் , திருமலை நாயக்கர் போன்ற மன்னர்களுக்கும் பெரும்படை கொடுத்து உதவி வந்துள்ளனர் . ராமநாதபுர சேதுபதியையும் அடக்கி வந்துள்ளனர் .

ஆனால் இப்படிப்பட்ட பெருமைகளை கொண்ட எட்டப்பர் வம்சத்தை கதைக்காக மிகைபடுதிக் காட்டி உள்ளனர் . உண்மையில் துரோகம் செய்தது வரலாற்றில் மன்னிக்க முடியாத செயலை செய்தது கள்ளன் புதுக்கோட்டை தொண்டைமான் தான் , மருது பாண்டியர்களை காட்டி கொடுத்ததும் , திப்பு சுல்தானுக்கு எதிராகவும் வாழ்த்த கள்ளன் தான் புறநாறு சொல்லும் போர் துரோக மன்னன் . ஆனால் கலியாபூர் காட்டில் கட்டபொம்மு தங்கி இருந்த நிலையில் அங்குள்ள கள்ளர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தும் இன்றும் சிவகங்கை , புதுகோட்டை பகுதிகளில் வாழும் கள்ளர் இனத்தில் சிலருக்கு குல தெய்வமாகவும் இருபது முக்கிய வரலாற்று நிகழ்வு . தனது இனத்தை சேர்ந்த மன்னன் காட்டி கொடுத்ததை அறிந்த கள்ளர் மக்கள் நாணினர் என்றும் , கட்டபோம்முவையே தெய்வமாக கொண்டார்கள் என்றும் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது . 

உணவளித்து காட்டிகொடுத்த புதுக்கோட்டை தொண்டைமானின் துரோகம் உலக வரலாறுகளில் மன்னிக்க முடியாத ஒன்றானது .. தற்போது பாடப்புத்தகங்களில் கட்டபொம்மனை பற்றிய பாடத்தில் கூட ( சமசீர் கல்வியில் ) தொண்டைமானின் துரோகம் என்று தான் இருகின்றது , எட்டப்பரை பற்றி........?#Ettiyapuramettappan

Norway

#Onthisday in 1472 Norway officially handed over the Orkney and Shetland Isles to Scotland in place of a dowry for Margaret of Denmark.

Betrothed to Margaret, King James III was promised a handsome dowry for his bride. But when it became clear that Margaret’s father (Christian I, King of Denmark and Norway) was lacking the finances, the once-Scandinavian islands soon became territories of the Scottish crown.

South Sudan

தெற்கு சூடானில் இரு தரப்பு மோதலில் 18 பேர் சாவு

ஜூபா

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் இருந்து, பிரிந்து கடந்த 2011-ல் தனிநாடாக உருவானது தெற்கு சூடான். அதனை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு முதல் அங்கு அரசுப்படைக்கும், கிளர்ச்சிப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் சுமார் 20 ஆயிரம் பேர் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று உள்ளனர். தெற்கு சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போரை தடுக்கவும் மக்களை பாதுகாக்கவும் ஐ.நா. அமைதிப்படை அங்கு முகாமிட்டு உள்ளது. 

மலக்கல் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு மையத்தில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்
ஐ.நா. பாதுகாப்பு மையத்துக்கு அருகே சில்லுக் மற்றும் தின்கா என்ற இரு சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே திடீர் வன்முறை வெடித்தது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மோதல் நேற்று வரை நீடித்தது. இரு பிரிவினரும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 

இதையடுத்து ஐ.நா. பாதுப்பு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை விரட்டி அடித்தனர். இருந்த போதிலும் இந்த வன்முறை சம்பவத்தில் எல்லையில்லா டாக்டர்கள் அமைப்பை சேர்ந்த மருத்துவர்கள் 2 பேர் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.

Katchatheevu

#கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் பங்கேற்க 3,477 பக்தர்கள் ராமேசுவரத்தில் இருந்து 92 விசைப் படகுகளில் இன்று காலை புறப்பட்டுச் செல்கின்றனர்.

Wednesday, February 17, 2016

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி.
.....................................................
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி உடல்நலக்குறைவால் எகிப்தின் கெய்ரோவில் காலமானார். அவருக்கு வயது 93.
ஐக்கிய நாடுகள் சபையின் 6-வது பொதுச் செயலாளராக 1992 ஜனவரி 1-lல் பதவியேற்ற காலி, ஐநாவின் உயரிய பதவி வகித்த முதல் அரேபியர் ஆவார். அதுமுதல் 1996 டிசம்பர் 31 வரை 5 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார்.

Ettiyapuram

ந ண்  பகல் உணவு திட்டம்   பழைய நெல்லை மாவட்டம் ,தற்போது தூத்துக்குடி மாவட்டம் #எட்டையாபுரம் .மகாராஜா எட்டப்பன் அவர்கள் 1915 வாக்கில் இப்பகுதியை சுற்றி உள்ள குழந்தைகள் படிப்பதற்கு தன் சொந்த செலவில் துவக்க பள்ளியை ஆரம்பித்து உள்ளார் .அப்போதே நல்ல கல்வியை போதிக்க அரசின் எவ்வித உதவியில்லாமல் திறம்பட நடத்தி வந்தார் .இருப்பினும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கவே , அதற்கான காரணத்தை ஆசிரியர்களிடம் கேட்டுள்ளார் .அடித்தட்டு மக்கள் ஜீவனத்திற்க்கே கஷ்ட்ட படுகிறார்கள்.அக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பு வதை காட்டிலும் வேலைக்கு ஈடுபடுத்துவதில்தான் அக்கறையாக உள்ளனர் .என்றனர் .இதை தனக்கு ஏற்பட்ட  அவமானமாக கருதினார் .பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தன சொந்த செலவில் மதியம் கம்மங்கஞ்சி வழங்கினார் .அதற்க்கு நல்ல பலன் கிடைத்தது .மாணவர்கள் எண்ணிக்கை அதிகமானது .இதை பின்பற்றிதான் தமிழகத்தில் காமராஜர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் மதிய உணவு திட்டம் முதன்முதலில் அரசின் உதவியின்றி செயல்படுத்திய எட்டயபுரம் ராஜா துவக்கப்பள்ளியில் 18.07.1956 ம் ஆண்டு அன்றைய பள்ளி கல்வித்துறை இயக்குனர் நெ .து .சுந்தரவடிவேலு அவர்களால் காமராஜரின் மதிய உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது

Tuesday, February 16, 2016

அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமும், அதன் பயனும்

1956 முதல் 1967 வரை அவினாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. கே. மாரப்பன் அன்றைய முதல்வர் காமராஜரிடம் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

1965 - 66 கால கட்டங்களில் பாண்டியாறு-பொன்னம்புழா திட்டமும், குந்தா திட்டமும் என்றும் பேசப்பட்டது.  இதில் அடிப்படை விவசாய சங்கத் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு, விஞ்ஞானி ஜி.டி. நாயுடு, மயில்சாமி கவுண்டர், விவசாய சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி கவுண்டர், அம்பலவான செட்டியார் போன்றவர்கள் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். அன்றைய அதிகாரியாக இருந்த டி.வி. அந்தோணி குடிநீர் திட்டமாகவும் இதை கேளுங்கள் என்று சொன்னபோது, ஆயக்காட்டு திட்டமாக இருந்தது குடிநீர் திட்டமாகவும் மாறியது.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் பில்லூர் அணை நிரம்பி வழியும்போது குந்தா-பவானி ஆகிய இரு ஆறுகளும் இணையும் பகுதிகளான குதிரைமுக்கி என்ற இடத்திலிருந்து 13 கிராமங்களில் உள்ள குளங்கள் நிரம்பும்.  இத்திட்டத்தினால் காளிங்கராயன் பாசனத் திட்டம், அரக்கன்கோட்டை பாசனத் திட்டம், தத்தப்பள்ளி பாசனத் திட்டம் என்ற விவசாயிகளுக்கு பயன்தரும் திட்டங்களும் நிறைவேறும்.

பவானி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் உபரியாக தண்ணீர் போவதை தடுத்து அந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். இதனால் 85 பெரிய குளங்கள், 225 குட்டைகளில் தண்ணீர் நிரம்பும்.  இது கிட்டத்தட்ட 10 டி.எம்.சி.களுக்கு மேலாக நீரை சேமிக்கலாம்.  கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிலங்கள் பாசன வசதி பெறும்.  பாண்டியாறு-புன்னம்புழா-மோயாறு திட்டத்தோடு அத்திக்கடவு-அவினாசி திட்டமும் நிறைவேறும்.

காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி போன்ற பகுதிகளெல்லாம் பயன்பெறும்.  நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது, இத்திட்டத்திற்கு ரூ. 130 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இன்றைக்கு இதன் செலவு மதிப்பு ரூ. 1800 கோடியாகும்.

இவ்வாறு அத்திக்கடவு-அவினாசி திட்டமும் மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய பாசன அணைத் திட்டங்களும் இதனோடு ஒருங்கிணைந்ததுதான் பிரச்சினையின் விடயமாகும்.

பயன்கள் -

1. திட்டத்தின் நோக்கம் பாசன திட்டமாக இல்லாமல் குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்ப வேண்டும் என்பதுதான்.

2. பவானி ஆற்றில் ஆண்டுக்கு 53 T.M.C தண்ணீர் உபரி நீராக கடலில் சென்று கலக்கிறது. இந்த தண்ணீரை அவினாசி உட்பட 2000க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மொத்தம் 85 பெரிய குளங்களும் 225-க்கு மேற்பட்ட குட்டைகளும் நிரப்ப முடியும். இதற்கு தேவையான நீரின் அளவு 1.2 T.M.C மட்டுமே.

3. இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களை சார்ந்த 1.30 லட்சம் ஏக்கருக்கு  மேற்பட்ட விவசாய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

4. ஆண்டுக்கு ஒருமுறை நிரப்பப்படும் தண்ணீரால் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராது. 25 லட்சதிருக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தேவையான குடிநீர் தன்நிறைவு பெரும்.

5. தற்போதுள்ள மின் பற்றாகுறைக் காலத்தில் இது ஒரு மின் சேமிப்பு திட்டமாக உள்ளது. சுமார் 35 லட்சதிருக்கு மேற்பட்ட விவசாய பகுதிகளில் நீர் எடுப்பதற்கு பயன்படும் மின் மோட்டார்களின் பயன்பாடு குறையும்.

6. விவசாய விளை நிலங்கள் விலை நிலங்களாக(வீட்டு மனைகளாக) மற்றப்பாடுவது முற்றிலும் தடுக்கப்படும். பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்படும், ஆழ்துளை கிணறுகள் தொண்டபடுவது தடுக்கபடும், இதனால் ஏற்படும் பூகம்பம் போன்ற பேரிடர் தடுக்கப்படும்.

Monday, February 15, 2016

தோழர் ரெங்கசாமியும், ஜப்தியும்

கோவில்பட்டியில் சாத்தூர் டீ ஸ்டால் பற்றி ஒருமுறை எழுதியிருந்தேன். கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதியில் நீண்டகால உறுப்பினராய் திகழ்ந்த தோழர்.அழகிரிசாமி பற்றி எல்லோருக்கும் தெரியும். அந்த டீ ஸ்டால் பெஞ்சில் அழகர்சாமி அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இன்னொரு தோழர்.ரெங்கசாமி. இவர் ஒரு விவசாயி. அந்தக்காலத்தில் இண்டர்மீடியட் படித்த விவசாயி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஊர் காளாம்பட்டிப்பக்கம். ஆள் நல்ல கம்பீரமான தோற்றம். கையில் எப்போதும் ஜனசக்தி வைத்திருப்பார். அந்தக்காலத்திலேயே (1964) கம்யூனிஸ்ட் கட்சியின் நியூ ஏஜ் (ஆங்கில இதழ் )சந்தாக்கட்டி வாங்கியவர். 
1966 கால கட்டத்தில்  கடுமையான வறட்சி ஏற்பட்ட நேரம். சும்மாவே கரிசல்காட்டில் தண்ணி இருக்காது. விவசாயம் பண்ணமுடியாத நிலை. சாப்பாட்டிற்கே வழியில்லாதநிலையில், வரி கட்ட எங்கே போக ?
ஆனாலும் அன்றைய சர்க்கார், பஞ்சாயத்து போர்டு மூலம் வரிகட்டாத விவசாயிகளின்  வீடுகளில் ஜப்தி நடவடிக்கைகளை தொடங்கியது.
அப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுள் ஒருவர் நம்ம ரெங்கசாமி.
        இவரது வீட்டில் இருந்த இரண்டு காளைமாடுகளையும் அன்றைய காங்கிரஸ் சர்க்கார் ஜப்தி மூலம் எடுத்து சென்று விட்டது. அதுமட்டும் அல்ல..இவரது வீட்டின் முகப்பில் இருந்த கதவையும் பஞ்சாயத்து போர்டில் இருந்து ஆட்கள் வந்து  எடுத்து சென்று விட்டார்கள். 
இந்த சம்பவமே கரிசல் பிதாமகன் எழுத்தாளர்.கி.ராஜநாராயணன் அவர்கள் " கதவு " கதை உருவாக வழி வகை செய்தது. இன்றைக்கும், இந்தக் கதையைப் படிப்பவர்கள் யாரையும் மனசு உடைந்து போகவைக்கும் கதை.
இந்த சம்பவத்தால், அந்தப் பகுதி விவசாயிகள் கொதித்துப்போனார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். நூறு நாட்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. உண்ணாவிரதத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் வில்லிசேரி ராமசுப்பு,காளம்பட்டி சீனிவாசன்,கோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி,கடம்பூர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் தீவிரம் அடைந்தது.
ஜப்தி செய்த காளைமாடுகளை அரசு , கோவில்பட்டி சந்தை, கழுகுமலை சந்தை என ஒவ்வொரு இடமாக கொண்டு சென்று விற்க முனைந்தது. எல்லா இடங்களிலும் " இவை ரெங்கசாமி வீட்டில் ஜப்தி செய்யப்பட்ட மாடுகள்" என்று பேசப்பட்டு ஒருவரும் வாங்கவில்லை. இறுதியில், போலீஸ்காரர்கள் மூலம், எங்கே ஜப்தி செய்தார்களோ அதே நாச்சியார்புரம் கிராமத்தில் தோழர் ரெங்கசாமி அவர்கள்  வீட்டு தொழுவத்தில் கொண்டு வந்து கட்டி விட்டார்கள்..எப்படிப்பட்ட போராட்டம் பாருங்கள் !
அதன்பின்னர் நடைபெற்ற 1967 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி கோவில்பட்டி பகுதி மக்களிடம் ஒட்டுக் கேட்டு வந்தபோது, " ரெட்டைக் காளைகளை ஜப்தி செய்த காங்கிரஸ் கட்சி, இப்போது சற்றும் வெட்கம் இன்றி, ரெட்டைக்காளை சின்னத்தில் ஒட்டுக் கேட்டு வருகிறது பார்...என்று சுவரொட்டிகள் அடித்து ஒட்டினார்கள். முதன்முறையாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தோழர் அழகர்சாமி வெற்றி பெறுகிறார். மீதி எல்லா தொகுதிகளிலும் திமுக -சுதந்திராகட்சி கூட்டு இருந்தபோதிலும், இந்தத்தொகுதியில் மட்டும் அழகிரிசாமி அவர்களை திமுக ஆதரித்தது.  
காங்கிரஸ் கட்சி சார்பில் வ.உ.சி.அவர்களின் மகன் ஆறுமுகம், தோழர்.அழகிரிசாமியை எதிர்த்து நின்றதாக நினைவு.
கி.ரா.வின் " கதவு" கதை பிறப்பதற்கும், தோழர்.அழகர்சாமி வெற்றி பெறவும் காரணமாக இருந்தது தோழர்.ரெங்கசாமி வீட்டில் நடந்த ஜப்தி.
(கருத்தை என்னோடு பகிர்ந்து கொண்டவர்கள் கோவில்பட்டி தோழர்கள் எல்ஐசி தேவபிரகாஷ்,காசிவிஸ்வநாதன்,CPI  )

Sunday, February 14, 2016

அமெரிக்காவின் உச்சநீதி மன்ற நீதிபதியாக அறிவிக்கப்படவுள்ள தமிழகத்தின் சிறீகாந்த் சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்My mole in the White House tells me Obama will nominate 46-year-old Judge Sri #Srinivasan, an Indian-American jurist who Obama nominated in 2013 to the U.S. Court of Appeals for the D.C. Circuit -- and the Senate confirmed unanimously. Having confirmed him unanimously just three years ago, it would be difficult (but hardly impossible) for Republicans to oppose him now. (Twelve former Solicitors General, including Republican notables as Paul Clement and Kenneth Starr had endorsed his confirmation. Moreover, the D.C. Circuit has long been a Supreme Court farm team – Scalia himself, along with John Roberts, Clarence Thomas, and Ruth Bader Ginsburg were judges there before ascending to the Supreme Court.) 

But is Srinivasan progressive? He had been Obama’s principal Deputy Solicitor General before the nomination, arguing Supreme Court cases in support of affirmative action and against Indiana’s restrictive voter ID law, for example. But this record doesn’t prove much. (Having once worked as an assistant Solicitor General, I know the inhabitants of that office will argue whatever halfway respectable arguments the Justice Department and, indirectly, the President, wants made.)

Before the Obama administration, Srinivasan worked for five years in George W. Bush’s Justice Department. Prior to that, as an attorney in the private firm of O'Melveny & Myers, he defended Exxon Mobil in a lawsuit brought by Indonesians who accused the company’s security forces of torture, murder, and other violations against their people;  successfully represented a newspaper that fired its employees for unionizing; and defended Enron’s former CEO, Jeffrey Skilling, later convicted for financial fraud. But in these instances, too, it could be argued he was just representing clients. Another clue: After graduating Stanford Law School in 1995, Srinivasan clerked for two Republican-appointed jurists – Judge J. Harvie Wilkinson III, and Supreme Court Justice Sandra Day O'Connor – both of whom were considered moderate. 

Since he became a judge on the D.C. Circuit, he hasn’t tipped his hand. But I discovered one morsel of information that might interest you: In 2000, he worked on Al Gore’s legal team in the infamous Supreme Court case of “Bush v. Gore.” 

My suspicion is Obama couldn't do better than Srinivasan. No other nominee with get a majority of Senate votes. What do you think?

Agriculture

இந்த மண்ணும்  மக்களும்  செழித்து  நெடுநாள் வாழ வேண்டுமென்றால் இந்த மண்ணில்  செழித்திருந்த பண்பாட்டிற்கு நாம் திரும்பவேண்டும்.
கீழ்க்கண்ட செயல்பாடுகள்  மிக அவசியம்.

1. 1952 முதல் 1967 வரை 15 ஆண்டுகள் 25 கோடிகள் செலவிட்டு  அமெரிக்க அறக்கட்டளைகள் கட்டாயமாக இந்தியா மீது திணித்த பசுமைப்புரட்சி  இன்று  வளமான டெல்டா நிலங்களை நாசமாக்கியுள்ளது. நிலம் ,நீர் ஆகியவைகளை நச்சாக்கி மக்களின் ஆரோக்கியத்தை நாசமாக்கும் கொடிய நோய்களைத் தந்துள்ளது.

பசுமைப்புரட்சி ஒரு சூது.  தூரவீசுவோம். இயற்கைவழி விவசாயத்திற்கு திரும்புவோம்.

2.அமெரிக்காவில் இருந்து கோழிக்கால்கள், சோளப்பொறி,  ஓட்ஸ் ,  தடைசெய்யப்பட்டு குருகிய காலத்தில் ,மீண்டும் வந்துள்ள  மாகி , எண்ணற்ற சாக்லேட்,பிஸ்கட்  வகைகள் , பெப்சி ,கொகோபோன்ற குளிர்பானங்கள் , மினெரல் வாட்டர்.......ஊடகங்கள் வீசுகின்ற காசுகளை பொறுக்கிக்கொண்டு இந்த உணவுக்கு  எத்தனை பேரை ஆடவிடுகிறார்கள்.
நமது பாரம்பரிய உணவு வகைகளை அழித்து,அது உற்பத்தியாகும் இடம்,மனிதர்களை அழிக்க வருகிறார்கள்.நமது உணவுகள், நமது தானியங்கள்,மற்றும் எண்ணற்ற பொருட்கள் நமக்கு உணவாகவும்,மருந்தாகவும்  நின்று காப்பவை.இதை சிதைப்பவர்களை  சமுதாய விரோதிகளாக அழிக்கவேண்டும். சாராயம் குடிப்பேன்,குட்கா போடுவேன், போதை உட்கொள்வேன்  அது எனது சுதந்திரம் என விவாதிப்பவர்கள்  சமுதயக்கட்டுப்பாடு இத்தகைய மனிதர்களுக்கு என உணர்த்தவேண்டும்.

அன்னிய உணவுகள்,பானங்கள் ஆகியவைகளை புறக்கணிப்போம்.

3.நாட்டின் எந்த பிரச்சினைகளைப்பற்றி பேசினாலும்  thats not my problem  என்று கூறி யான்கி தோரணையில் தோளைக்  குளுக்குபவர்கள்  இந்த சமுதாயத்தின் நட்பு சக்தி அல்ல .காசுக்கு எதையும் செய்து தர இவர்கள் தயாராக இருப்பவர்கள்.  அன்னிய கம்பெனிகளுக்கு பல வித கையாட்கள் தேவைப்படுகிறார்கள்

4.இன்றுவரை  மத்திய,மாநில கட்சிகள்   காவிரி நீர் பிரச்சினை, பாறை வாயு ஓ என் ஜி.சி சிக்கல், கெயில்,கூடங்குளம், மீனவர் பிரச்சினை,மணல் கொள்ளை , கார்பாறைகள் கொள்ளை,விவசாய விலைபொருட்களுக்கு தரவேண்டிய விலையை  மூன்றில்  ஒரு பங்காக அழுத்தி வைக்கும்  அமெரிக்க அடிவருடியாக ஆகிப்போன  இந்திய அரசு---இன்னும் பல பிரச்சினைகள்,எதிர்கால நம்பிக்கைகளாக வளர வேண்டிய குழந்தைகளுக்கு சரியான பள்ளி வசதி இல்லை , பள்ளிப்படிப்பு ,மேற்படிப்பு  யாவற்றையும் கொள்ளையடிக்கும் கல்வி வியாபாரிகளுக்கு  விற்ற அரசுகள்---எவ்வளவோ .........

Sri Lanka Tamils and new Costitution

இறுதியில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது ? :-#Sri Lanka Tamils   and Constitution 

ஏன் அரசியல் அமைப்பு:-

உலகில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இன மொழி நிற வேறுபாடுகளின்றி தத்தம் பிராந்தியங்களில் (நாடுகளில்) உள்ள இயற்கையின் வரப்பிரசாதங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் உரிமையும் சுதந்திரமும் உள்ளவர்கள். ஒருவர் தனியாகவோ அல்லது பலர் கூட்டாகவோ இன்னொருவரின் அல்லது இன்னொரு கூட்டத்தினரின் உரிமை, சுதந்திரத்தைப் பாதிக்காமல்  வாழவேண்டும்.  ஒருவர் தனியாகவும் தனது வெவ்வேறு தேவைகளின் பொருட்டு வெவ்வேறு கூட்டத்தினருடன் சேர்ந்தும் தனது முயற்சிகளை முன்னெடுக்கலாம். அவரவர் வல்லமைக்கும் தகுதிக்கும் முயற்சிக்கும் ஏற்ப பயன்களை அடைவர். தாம் தேடிக்கொண்டவற்றை அல்லது இன்னொருவர் உவந்தளித்ததை அனுபவிக்க ஒருவருக்கு உரிமை உண்டு. இதுதான் சர்வதேச மனித உரிமையின் அடிப்படை.  இந்த அடிப்படைகள்  பேணப்படும் இடங்களில், நாடுகளில் அமைதியும் சமாதானமும் உயர்வும் மகிழ்வும் நிலவும். அதை உறுதிப்படுத்தவே அந்தந்த நாடுகளில் அந்தந்த நாடுகளின் நிலைமைகளுக்கேற்ப அரசியல் அமைப்புகள், சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:-

தமக்கான ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முற்படும் இலங்கை மக்களும்  மேற்சொன்ன அடிப்படைகளை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் முதலில் அனைத்துத்   தரப்பினருக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அது சாத்தியமானால் மிகுதி மிக இலகுவாகவும் விரைவாகவும் நிறைவேறிவிடும்.  எழுத்திலான கனவான் ஒப்பந்தமாவது அவசியம்.

#இலங்கைக்கு ஏற்ற அரசியல் அமைப்பு ;-

ஒரு நாட்டில் உள்ள அனைவரும் ஒரே மதத்தையோ மொழியையோ சாராதவராயின் அந்த நாட்டில் ஒரு மதத்திற்கோ ஒரு மொழிக்கோ முன்னுருமை கொடுக்கப்பட்டால் மேற்கூறிய அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு விடும். இலங்கையில் குறிப்பிடக்கூடியவாறு சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் மலையகத் தமிழர் ஆகிய மக்கள் கூட்டத்தினர் வாழ்கின்றனர். எனவே எந்தவொரு மதத்திற்கோ மொழிக்கோ முன்னுரிமை வழங்க முடியாது. ஆனால் அனைவருமே சிங்களம் அல்லது தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்டிருப்பதால் அவ்விரண்டு மொழிகளையும் வேண்டுமானால் உலகப் பொது மொழியாகிய ஆங்கிலத்தையும் அரசகரும மொழிகளாகக் கொள்ளலாம். பௌத்தம் இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய பல மதங்கள் பின்பற்றப் படுவதாலும் அரச கருமங்களில் மதம் பெருமளவில் பயன்படுவதில்லை என்பதாலும்  மதச்சார்பற்ற அரசாக இருந்துகொண்டு அவரவர் மதங்களை அவரவர் பேணிப்பாதுகாக்க அரசு வேண்டியளவு உதவியாக இருக்க முடியும்.

அடுத்ததாக மேற்குறிப்பிட்ட பிரதானமான நான்கு மக்கள் கூட்டத்தினரும் ஒருகூட்டத்தினரை மற்றக் கூட்டத்தினர் நசுக்காதவாறு சம கௌரவமாக வாழக்கூடியவாறு, ஒரு கூட்டத்தினர் தலைவிதியை இன்னொரு கூட்டத்தினர்  தீர்மானிக்கும் நிலைமை இல்லாதவாறு அந்த அரசியல் அமைப்பு அமைய வேண்டும். இலங்கை முழுவதற்கும் பொதுவான விடயங்களைக் கவனிக்க ஒரு மத்திய அரசு இருக்கலாம். அதைவிட சிங்களவரும் தமிழ் பேசும் மக்களும் வெவ்வேறு  பிராந்தியங்களில் (மாநிலங்களில் ) பாரம்பரியமாக  செறிவாக வாழ்வதால் அவரவர் பிராந்திய நிர்வாகத்தை அவரவர் மேற்கொள்ளக்கூடியவாறு (தமக்கான சட்டங்களை தாமே இயற்றி நடைமுறைப்படுத்தக் கூடியவாறு - காணி, காவற்துறை உட்பட ) இலங்கை அரசமைப்பு அமைய வேண்டும். தமிழர்  பிராந்தியமான வடகிழக்கில், கிழக்கின் ஒருபகுதியில்  முஸ்லிம்கள் செறிவாக வாழ்வதால் அப்பிரதேசம் பிராந்திய அரசின் கீழ் வரும் சில சிறப்புரிமை கொண்ட பிரதேச நிர்வாக அலகாக இருக்கலாம். அதேபோல் சிங்களப் பிராந்தியத்தில் மலையகத்தில் செறிவாக வாழும் மலையகத் தமிழரின் பிரதேசத்திற்கும் சில சிறப்புரிமைகளைக் கொடுக்கலாம்.  புதிய அரசியல் அமைப்பில் இவை  யாவும் அடிப்படைச் சிறப்பு அம்சங்களாகக் குறிப்பிட வேண்டும்.

இந்தச் சிறப்பான அரசியல் ஏற்பாடுகளை எந்தவொரு பிராந்திய அரசோ மத்திய அரசோ எப்படிப்பட்ட பெரும்பான்மையினாலும்  ஒருதலைப் பட்சமாக மாற்ற முடியாது என்று  அரசமைப்பில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். மாற்றங்கள் செய்யவேண்டுமானால் சம்மந்தப்பட்ட இருதரப்பாரதும் ஒப்புதல் தனித்தனியாக வேண்டும் என்று இருக்கவேண்டும். அதனால் சிங்கள மக்கள்  கொடுத்த உரிமையை மீண்டும் பறித்து விடுவார்கள் என்று தமிழரும், தமிழர் தனியாகப் பிரிந்து போய் விடுவார்கள் என்று சிங்களவரும் நினைக்கும் சந்தேகத்திற்கு இடம் இல்லாது போகும். இப்படியான அரசியல் அமைப்பை சமஷ்டி முறையிலோ, பிராந்தியங்களின் இணைவு (மாநிலங்களின் கூட்டிணைவு) முறையிலோ ஏற்படுத்தலாம். இதன் பொருட்டு வடகிழக்கு, தெற்கு, மேற்கு, மத்தி, வடமத்தி என 5 பிரிவுகளாக இலங்கை பிரிக்கப்படலாம். அல்லது இங்கிலாந்தில் ஷ்கொட்லாந்திற்கு நடந்துள்ளதைப்  போல்  வடகிழக்கை மட்டும் பிரித்து அதற்குரிய அதிவிசேட அதிகாரங்களைக் கொடுக்கலாம். எப்படிக் கொடுபடுகிறது என்பதைக் கவனிக்காமல் மேலே சொல்லப்பட்ட உரிமைகள் சுதந்திரம் என்பன மீண்டும் பறிக்கப்பட முடியாதவாறு கொடுக்கப்படுவதை மட்டுமே தான் கவனிக்க வேண்டும்.

அப்படியான அரசியல் அமைப்பை ஏற்படுத்துவதில் உள்ள சவால்கள்:-

சிங்களத் தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் :-

1. இலங்கையைத் தனிச் சிங்களப் பவுத்த நாடாக்க வேண்டும் என்று சிங்கள மக்கள் மத்தியில் காலம் காலமாகக் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் இனவாதச் சிந்தனை

2. தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்தால் அவர்கள் தனி நாடு அமைத்து விடுவார்கள் என்ற சிங்களவர்களின் மனப்பயம்.

3. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சேர்ந்து கல்வியிலும் பொருளாதாரத்திலும் தம்மை முந்தி விடுவார்கள் என்ற சிங்களவரின் பொறாமை.

4. சிங்கள அரசியற் தலைமைகளிடையே (கட்சிகளிடையே) இருக்கும் அதிகாரப் போட்டி. அதற்கு அவர்கள் இலகுவாகப் பயன்படுத்தும் இனவாதம். 

5. தமிழரை, அவர்களின் நிலங்களை, வளங்களை தமக்கு இலவசமாகக் கிடைத்த சொத்தாகப்  பயன்படுத்தி உருசி கண்ட இலங்கை இராணுவத்தை அதிலிருந்து மீட்டெடுப்பது.

இந்தச் சவால்களை முறியடிப்பது நிட்சயமாக எளிதான காரியமல்ல. அதிஉச்ச இராஜதந்திர சிந்தனைகள் செயற்பாடுகள் அதற்கான மனோதிடம் என்பன மிக மிக அவசியம்.  சர்வதேசத்தின் உதவியோடு செயற்பாடுகளை வகுத்துக் கொண்டு இன்றுள்ள (நல்லாட்சி) அரசு  அச்செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைப் போன்று சிங்களப் பகுதிகள் எங்கும் கிராமம் கிராமமாக கொள்கை விளக்கக் கூட்டங்களை (Town hall meetings) நடத்தி சிங்கள மக்களுக்குத் தெளிவை, முற்போக்கான சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அவர்களிடம் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருக்கும் தவறான எண்ணங்களை அனாவசியமான மனப்பயங்களை நீக்க வேண்டும். அரசிற்குச் சார்பான மத்திய, மாகாண மற்றும் உள்ளூராட்சி அரசியல் வாதிகள், இளையோர், மகளிர் அமைப்புகள் அனைவரும் அதில் ஈடுபட வேண்டும். ஊடகங்களையும் இதற்காக முறையாகப் பயன்படுத்த வேண்டும். இனவாதத்தை கக்கிக்கொண்டு பிரச்சாரம் செய்யும் மகிந்த தரப்பினரை முறியடித்து வெற்றி காண வேண்டும். அதற்கான திடசங்கற்பம் நம்பிக்கை சிங்கள அரசியல் வாதிகளிடம் வேண்டும். அதற்கு முன்னோடியாக முதலில் அரசியல் வாதிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.ஆயுத யுத்தத்தில் வெல்வது அவ்வளவு பெரிய விடயமல்ல, இந்த அரசியல் யுத்தத்தில் வெல்வதே உண்மையான வெற்றி. மக்களோடு சேர்ந்து இராணுவத்தினர் மத்தியிலும் சிறிது மனமாற்றம் ஏற்படலாம். அவர்களைச் சமாளிக்கப் பல செயற்பாடுகளை தந்திரோபாயங்களைக் கையாள வேண்டியது இன்றியமையாதது. 

"இந்தப் புதிய அரசியல் அமைப்பால் சிங்கள மொழியும் பவுத்த மதமும் எவ்விதத்திலும் பாதிக்கப்படவே மாட்டாது. மாறாக கடந்த பல தசாப்தங்களாக அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள இலங்கையின்  பொருளாதாரம் அதிதுரித வளர்ச்சி காணவும், அநாகரிகமான அநீதியான அடக்குமுறையான ஜனநாயக விரோத குடும்பஆட்சி இனியும் ஏற்படாமல் நீதியான சட்டத்தின் நல்லாட்சி அமையவும், இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சமத்துவமாக சந்தோசமாக வாழவும், சிங்கப்பூரைப் போன்று பூமிப்பந்தில் ஒரு முன்னுதாரணமாகக் காட்டக்கூடியவாறு இலங்கையை உருமாற்றி, நாம் இலங்கையர் என்று பெருமையோடு  இலங்கை மக்கள்  உலகில்   பிரகாசிக்கவும்  இப்படியான புதிய அரசியல் அமைப்பு மிக அவசியம்" என்பதை பெரும்பாலான சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை புதிய அரசியல் அமைப்போ இலங்கைப்பிரச்சனைக்கு (தமிழர் பிரச்னைக்கு) தீர்வோ சாத்தியமாகாது.  சிங்களத் தலைமைகள் மட்டும் விரும்பி காரியம் நடக்காது. மக்களுக்கான பிரச்சாரங்களை மிக மிக ராஜதந்திரமாக முன்னெடுக்கும்  அதேவேளை ஆட்சியைத்  தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இதனைச் சாதிப்பதே இன்றைய நல்லாட்சிச் சிங்களத் தலைமகளின் ராஜதந்திர அரசியலுக்கான  சவாலாகும். இன்றைய நல்லாட்சியைப் பாதுகாக்க விரும்பும் சிங்கள மக்களோடு இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளும் தமிழர் தரப்பும் இன்றைய அரசு அதன் சவால்களை முறியடிக்கத் தேவையான அனைத்து விடயங்களிலும் உதவியாகவும் அதேசமயம் அவர்கள் சரியான திசையில் பயணிக்கத் தவறும்போது அதி உச்ச அழுத்தங்களைப் பிரயோகிப்பவர்களாகவும்  இருக்க வேண்டியது இன்றியமையாதது.

தமிழர் தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் :-

சிங்களத் தரப்பாரைவிட குறைவாக இருப்பினும் தமிழர் தரப்பிலும் சவால்கள் பல உள்ளன. தமிழ் மக்கள் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு அடிமைப்பட்டு விரக்தியின் விளிம்பில்  நிற்கிறார்கள். இன்றைய சர்வதேச முற்போக்கான அரசியல் யதார்த்தங்களையும் அதன்மூலம் உள்நாட்டிலும் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களையும், கடந்த காலங்களில் இல்லாத ஒரு புதிய அரசியற் சூழ்நிலை, சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருப்பதையும், இந்த நேரத்தில் சிங்கள மக்களை உசுப்பேற்றாமல் அவர்கள்  கொண்டிருக்கும் மனப்பயத்தை சந்தேகத்தைப் போக்கக்கூடிய வண்ணம் தமிழர் செயற்பாடுகள் அமைய வேண்டியதன் தேவையையும் , இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனிநபர் அல்லது கட்சி நலன் பாராது ஒட்டுமொத்தத் தமிழ் பேசும் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டிய அவசியத்தையும் தமிழ் மக்களுக்குப் புரிய வைப்பது தமிழ்த் தலைமையின் சவாலாக உள்ளது. #தமிழர் தலைமையும் தமது பங்கிற்கு தமிழர் பகுதி எங்கும் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டியது மிக அவசியம். சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த தரப்பாரைப்போல் தமிழர் தரப்பிலும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் பித்தலாட்டங்களையும் முறியடிக்க வேண்டியுள்ளது.

மேலும் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுடன் நல்லுறவைப் பேணுவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் அமையப்போகும் வடகிழக்குப் பிராந்திய அரசில் முஸ்லிம்களுக்கான சிறப்புரிமைகள் பற்றிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கிடையே  ஏற்படுத்தியே ஆக வேண்டும்.  மேலும் ஊடகங்களும் வெறுமனே தமது வணிக நோக்கோடு மட்டும் நில்லாது தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து, மக்களை சும்மா உணர்சிவசப்படுத்தி உசுப்பேற்றி அவர்களின் பரந்த அரசியற் சிந்தனைகளை மழுங்கடிக்காமல் பொறுப்போடு செயற்பட வேண்டியது  இன்றைய காலத்தின் கட்டாயமாகும். ஒருவரது பதவி, அதிகாரப்போட்டிக்கு அல்லது தனிப்பட்ட பகைமைகளை சாதிப்பதற்கு இது தருணமல்ல, என்பதை உணர்ந்து இனத்தின் நன்மை கருதியாவது தமிழர் தரப்புகள் ஒற்றுமையாய் ஒரே குரலில் ஒலிப்பதே தமிழினத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் திறவுகோலாகும். திறமையானதோ குறையானதோ, நாம் ஏற்படுத்திய எமது தலைமையை நாமே சிதைக்க முற்படுவோமானால் எம்மினத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. நமக்குத் தேவை பலகாரம், சிலுசிலுப்பு அல்ல. அரசியலில் சிக்கல்களைத் தாண்டிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் சொற்பதங்கள், வசனங்கள்,  கட்டமைப்புகள் வித்தியாசமாக இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் கிடைக்க வேண்டியது எவ்விதத்திலாவது கிடைத்தால் ஏற்றுக்கொள்ளலாம், கொள்ள வேண்டும். ஒரு தரப்பு வெல்வது நிரந்தரமாகாது. இருதரப்பினரதும் வெற்றியே நிரந்தரமாகும்.

யதார்த்தநிலை :--

தமிழராகிய நாங்கள் எதையும் கேட்கலாம், எப்படியும் கேட்கலாம் , எவ்வளவு அழுத்தத்தையும் கொடுக்கலாம், அதி உச்ச ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொள்ளலாம், அவையெல்லாம் நடைபெற்றும் இறுதியில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? என்பதே வானளவு கேள்வியாகும்.  திருப்தியான முடிவு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?. அப்படிக் கிடைக்காவிட்டால்  ஈழத்தமிழினம் முழுவதும் தற்கொலையா செய்ய முடியும்?. சும்மா போராடுவோம் போராடுவோம் என்று எவ்வளவு காலம், எத்தனை சந்ததியை  ஏமாற்றலாம்?.  அரசியல் என்பது வெறும் தொழிற்சங்கப் பிரச்சனை அல்ல. பிரபாகரன் போராட்டத்தால் சாதிக்க முடியாததை வெறும் தெருப்போராட்டத்தால் சாதிக்க முடியுமா?. முடிந்தவரை முயற்சிப்போம். நல்லதையே எதிர்பார்ப்போம். அது கிடைக்கவில்லை என்றாலும் இப்போது  இருப்பதைவிட முன்னேற்றமாக இருக்குமாயின் அதை இறுதித் தீர்வாக ஏற்றுக்கொள்ளாமல் இறுதித் தீர்வை நோக்கிய பயணத்தின் ஒரு கட்டமாக அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பயணிப்பதைத் தவிர நமக்கு வேறு வழி கிடையாது.

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...