Saturday, February 20, 2016

South Sudan

தெற்கு சூடானில் இரு தரப்பு மோதலில் 18 பேர் சாவு

ஜூபா

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் இருந்து, பிரிந்து கடந்த 2011-ல் தனிநாடாக உருவானது தெற்கு சூடான். அதனை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு முதல் அங்கு அரசுப்படைக்கும், கிளர்ச்சிப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் சுமார் 20 ஆயிரம் பேர் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று உள்ளனர். தெற்கு சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போரை தடுக்கவும் மக்களை பாதுகாக்கவும் ஐ.நா. அமைதிப்படை அங்கு முகாமிட்டு உள்ளது. 

மலக்கல் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு மையத்தில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்
ஐ.நா. பாதுகாப்பு மையத்துக்கு அருகே சில்லுக் மற்றும் தின்கா என்ற இரு சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே திடீர் வன்முறை வெடித்தது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மோதல் நேற்று வரை நீடித்தது. இரு பிரிவினரும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 

இதையடுத்து ஐ.நா. பாதுப்பு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை விரட்டி அடித்தனர். இருந்த போதிலும் இந்த வன்முறை சம்பவத்தில் எல்லையில்லா டாக்டர்கள் அமைப்பை சேர்ந்த மருத்துவர்கள் 2 பேர் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...