Tuesday, February 16, 2016

அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமும், அதன் பயனும்

1956 முதல் 1967 வரை அவினாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. கே. மாரப்பன் அன்றைய முதல்வர் காமராஜரிடம் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

1965 - 66 கால கட்டங்களில் பாண்டியாறு-பொன்னம்புழா திட்டமும், குந்தா திட்டமும் என்றும் பேசப்பட்டது.  இதில் அடிப்படை விவசாய சங்கத் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு, விஞ்ஞானி ஜி.டி. நாயுடு, மயில்சாமி கவுண்டர், விவசாய சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி கவுண்டர், அம்பலவான செட்டியார் போன்றவர்கள் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். அன்றைய அதிகாரியாக இருந்த டி.வி. அந்தோணி குடிநீர் திட்டமாகவும் இதை கேளுங்கள் என்று சொன்னபோது, ஆயக்காட்டு திட்டமாக இருந்தது குடிநீர் திட்டமாகவும் மாறியது.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் பில்லூர் அணை நிரம்பி வழியும்போது குந்தா-பவானி ஆகிய இரு ஆறுகளும் இணையும் பகுதிகளான குதிரைமுக்கி என்ற இடத்திலிருந்து 13 கிராமங்களில் உள்ள குளங்கள் நிரம்பும்.  இத்திட்டத்தினால் காளிங்கராயன் பாசனத் திட்டம், அரக்கன்கோட்டை பாசனத் திட்டம், தத்தப்பள்ளி பாசனத் திட்டம் என்ற விவசாயிகளுக்கு பயன்தரும் திட்டங்களும் நிறைவேறும்.

பவானி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் உபரியாக தண்ணீர் போவதை தடுத்து அந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். இதனால் 85 பெரிய குளங்கள், 225 குட்டைகளில் தண்ணீர் நிரம்பும்.  இது கிட்டத்தட்ட 10 டி.எம்.சி.களுக்கு மேலாக நீரை சேமிக்கலாம்.  கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிலங்கள் பாசன வசதி பெறும்.  பாண்டியாறு-புன்னம்புழா-மோயாறு திட்டத்தோடு அத்திக்கடவு-அவினாசி திட்டமும் நிறைவேறும்.

காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி போன்ற பகுதிகளெல்லாம் பயன்பெறும்.  நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது, இத்திட்டத்திற்கு ரூ. 130 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இன்றைக்கு இதன் செலவு மதிப்பு ரூ. 1800 கோடியாகும்.

இவ்வாறு அத்திக்கடவு-அவினாசி திட்டமும் மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய பாசன அணைத் திட்டங்களும் இதனோடு ஒருங்கிணைந்ததுதான் பிரச்சினையின் விடயமாகும்.

பயன்கள் -

1. திட்டத்தின் நோக்கம் பாசன திட்டமாக இல்லாமல் குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்ப வேண்டும் என்பதுதான்.

2. பவானி ஆற்றில் ஆண்டுக்கு 53 T.M.C தண்ணீர் உபரி நீராக கடலில் சென்று கலக்கிறது. இந்த தண்ணீரை அவினாசி உட்பட 2000க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மொத்தம் 85 பெரிய குளங்களும் 225-க்கு மேற்பட்ட குட்டைகளும் நிரப்ப முடியும். இதற்கு தேவையான நீரின் அளவு 1.2 T.M.C மட்டுமே.

3. இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களை சார்ந்த 1.30 லட்சம் ஏக்கருக்கு  மேற்பட்ட விவசாய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

4. ஆண்டுக்கு ஒருமுறை நிரப்பப்படும் தண்ணீரால் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராது. 25 லட்சதிருக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தேவையான குடிநீர் தன்நிறைவு பெரும்.

5. தற்போதுள்ள மின் பற்றாகுறைக் காலத்தில் இது ஒரு மின் சேமிப்பு திட்டமாக உள்ளது. சுமார் 35 லட்சதிருக்கு மேற்பட்ட விவசாய பகுதிகளில் நீர் எடுப்பதற்கு பயன்படும் மின் மோட்டார்களின் பயன்பாடு குறையும்.

6. விவசாய விளை நிலங்கள் விலை நிலங்களாக(வீட்டு மனைகளாக) மற்றப்பாடுவது முற்றிலும் தடுக்கப்படும். பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்படும், ஆழ்துளை கிணறுகள் தொண்டபடுவது தடுக்கபடும், இதனால் ஏற்படும் பூகம்பம் போன்ற பேரிடர் தடுக்கப்படும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...