திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட கடலோரம் ஒட்டிய சாத்தான்குளம், திருச்செந்தூர், திசையன்விளை பகுதியில் வித்தியாசமான சிகப்பு நிற மண்ணுடன் விரிந்த பகுதிதான் தேரிக்காடுகள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வயதுள்ள வளர்ந்த பனைமரங்கள் இப்பகுதியில் அதிகமாக தென்படும். ஒரு பக்கத்தில் மின் உற்பத்தி செய்கின்ற காற்றாடிகள். இங்குதான் டைட்டானியம் கிடைக்கின்றது என்று டாடா நிறுவனத்தினர் கடந்த 2007ல் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு மக்கள் போராட்டத்தால் அந்த திட்டம் நிறுத்திவைக்கப்படவில்லை. ஆனால் முடக்கப்படவில்லை. அதன் கோப்புகள் அப்படியேதான் இருக்கின்றன. இதற்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆரல்வாய் கணவாய் மூலம் வருகின்ற காற்று காற்றாடிகளுக்கு மின் உற்பத்தியை பெருக்க உதவியாக உள்ளது. மழைகளும் பெரிதாக இப்பகுதியில் பெய்வதில்லை. இங்குதான் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைத்து கால்வாய் வெட்டி, திசையன்விளை, திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகள் பாசன வசதிக்கு திட்டமிடப்பட்டது. இந்த மண்ணில் வாழை, கொய்யா, மா, முந்திரி, முருங்கை, போன்ற பணப் பயிர்களும் வளர்கின்றன. இந்த விவசாய பூமிக்கு கிழக்கே கடற்காற்றும், மேற்கே இருந்து மழைக் காற்றும் இந்த பயிர்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளன.
இந்தத் தேரிக்காட்டில் வரலாற்று ரீதியாக அரேபியர்கள், கிறிஸ்து மார்க்கத்தை பரப்ப வந்த சவேரியர், ஜி.யு. போப், கால்டுவெல் போன்ற ஆளுமைகள் உளவிய மண்ணாகும்.
இந்தத் தேரிக்காட்டில் வரலாற்று ரீதியாக அரேபியர்கள், கிறிஸ்து மார்க்கத்தை பரப்ப வந்த சவேரியர், ஜி.யு. போப், கால்டுவெல் போன்ற ஆளுமைகள் உளவிய மண்ணாகும்.
No comments:
Post a Comment