Saturday, February 13, 2016

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU)


1975 காலகட்டங்களில் இந்த பல்கலைக்கழகத்தில் சில காலம் மாணவனாக இருந்தபின் சென்னை சட்டக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்ததால் டெல்லி ஜே.என்.யூ. விலிருந்து சென்னைக்கு வந்துவிட்டாலும் அந்த பல்கலைக்கழக விடுதிகளில் கிடைக்கின்ற வசதிகளை அடிக்கடி எண்ணிப் பார்ப்பதுண்டு. சில நாட்களுக்கு முன் அங்கு சென்றபோது, விடுதிகளின் உள்ளே சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது.  ஆறு விடுதிகளாக இருந்து 1990ல் 11 விடுதிகளாகி, இன்றைக்கு மாணவர்கள் தங்குவதற்கு 22 விடுதிகள் உள்ளன.  இந்த விடுதிகளில் உள்ள அறையின் மாத வாடகை வெறும் 11 ரூபாய்தான்.  மொத்த கட்டணம் வருடத்திற்கு 219 ரூபாய்தான். இதையும் இரண்டு தவணைகளாக கட்டலாம்.  ஒவ்வொரு மாணவனுக்கும் அரசு மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்கிறது. 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற கணக்கில் ஆசிரியர்களும் உள்ளனர்.  இவ்வளவு வசதியும் வாய்ப்புகளும் இருந்தாலும் பல்கலைக்கழக வளாகத்தின் சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய வகையில் சில மாணவர்கள் நடந்துகொள்கின்றனர். ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், யேல் போன்ற பல்கலைக்கழகங்களைப் பார்க்கும்போது அந்த வளாகங்கள் சுத்தமாக மாணவர்களே பொறுப்போடு பராமரித்து வருகின்றனர். அந்த உணர்வு ஜே.என்.யூ. மாணவர்களுக்கு வரவில்லை.

மாணவர்களுக்கு பல்வேறு சுதந்திரங்கள். ஒவ்வொரு விடுதியிலும் அரசியல் சூழல், விவாதங்கள், எதிர்வாதங்கள், எதிர்வினைகள் என கூட்டம் கூட்டமாக ஆலோசனைகளும், சொற்பொழிவுகளும், சம்பாஷனைகளும் இரவும் பகலும் இன்றைக்கும் உள்ளன.

ஜே.என்.யூ.வில் பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த அறிவு ஜீவிகள் அதிகம். டெல்லி பல்கலைக்கழகத்தில், பி.ஜே.பி., காங்கிரசை சேர்ந்த மாணவர் அமைப்புகள் எப்போதும் வலுவாக இருக்கும்.  ஜாமீயாமில்யாவிலும், ஜே.என்.யூ. போன்று பல தரப்பு சிந்தனைகள் உள்ள அறிவு ஜீவிகள் அதிகம் உண்டு.  

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...