Monday, February 29, 2016

Budget 2016

நிதிநிலை அம்சங்கள்  முழு விவரம் ...!!!

வருமானவரி விகிதங்களில் மாற்றம் இல்லை- விவசாயம், கிராமப்புற மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

பொது பட்ஜெட் 2016-2017: நிதி அமைச்சர் ஜெட்லி உரையின் முக்கிய அம்சங்கள்
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது
அரசின் நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுப்பாட்டில் வந்துள்ளது .

அரசின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது .

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது
இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக சர்வதேச நிதியமைப்புகள் பாராட்டு
சவாலான நிதிச்சூழலில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது .

செலவு அதிகரித்துள்ள சூழலில், சமநிலையிலான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது .

அந்நிய செலாவணிக் கையிருப்பு 350 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது
மூன்றில் ஒருபங்கு மக்களுக்கு கிடைக்கக் கூடிய மருத்துவக் காப்பீடு அறிமுகம்
கிராமப்புற மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு அதிகம் செலவிட அரசு முன்னுரிமை
கட்டமைப்பு, வங்கித்துறைகளின் முன்னேற்றத்தில் முழு கவனம் செலுத்தப்படுகிறது .

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது .

இதுவரை இல்லாத குறைந்த பிரீமியத்தில் அதிக இழப்பீடு பெறும் வகையில் பயிர்க்காப்பீடு அறிமுகம்
2022ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க இலக்கு
சர்வதேச பொருளாதார மந்த நிலை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது .

விவசாயம், சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, திறன் வளர்ப்பு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன .

நீண்ட கால நீர்ப்பாசனத் திட்ட நிதி நபார்டு வங்கி மூலம் ஏற்படுத்தப்படும்
விவசாயிகளின் நலனுக்கு 35,984 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நபார்டு வங்கி மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்படுத்தப்படும் .

கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்
அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை வேளாண்மைக்கு கொண்டுவரப்படும் .

89 நீர்ப்பாசனத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும் .

அந்நிய சந்தைகள் பலவீனமாக இருப்பதால், உள்நாட்டு சந்தைகள் வலுப்படுத்தப்படும்
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டம் அறிமுகம் .

வேளாண் சந்தைகள் இணைய தளம் மூலம் இணைக்கப்படும் .

திவால் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவர ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்படும்
கிராமப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தில் 2.23 லட்சம் கி.மீ சாலைகள் இணைக்கப்படும் .

புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கு 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு .

தரிசுநில மேம்பாடு திட்டத்தின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டேர் பரப்பு நீர்ப்பாசன வசதி பெறும் .

100 நாள் வேலைத்திட்டத்திற்கு 38,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

கிராமப் பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கு 2.87 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு .

கிராமப் பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கு 228 சதவிகிதம் அதிக நிதி ஒதுக்கீடு
2018 மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் .

நடப்பு மாதம் வரை 5,542 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 300 நகரங்களில் வசதிகள் ஏற்படுத்தப்படும்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நில ஆவணங்கள் மின்னணு மயமாக்கப்படும்
நில ஆவணங்கள் மின்மயமாக்கலுக்கு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு .

கிராமப்புறங்களில் கணினிவழிக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் .

தூய்மை இந்தியா திட்டத்திற்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக 87,765 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

முதியோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
கிராமப்புறங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் எரிவாயு இணைப்பு வழங்கத் திட்டம் .

விவசாயக் கடன் இலக்கு 9 லட்சம் கோடி ரூபாய் கிராமப்புறங்களில் எரிவாயு இணைப்பு பெண்கள் பெயரில் வழங்கப்படும் .

75 லட்சம் நடுத்தரக் குடும்பங்கள் எரிவாயு இணைப்பு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர் .

வரும் நிதியாண்டில் நாடு முழுவதும் 3000 பொது மருந்து கடைகள் திறக்கப்படும் 

நாட்டின் அனைத்து மாவட்டங்களில் சிறுநீரக சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் .

உயர்கல்விக்கு நிதியுதவி வழங்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும் .

உயர்கல்வி நிதியமைப்புக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு .

62 புதிய நவோதயா வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்படும் .

சிறு தொழில்முனைவோர் துறைக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் .

எழுந்திரு இந்தியா திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

எழுந்திரு இந்தியா திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்கு கடனுதவி
நாடு முழுவதும் 1500 பன்முகத் திறன் வளர்ப்புப் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் 

வருங்கால வைப்பு நிதியில் புதிய உறுப்பினர்களுக்கு அரசு பங்களிக்கும்
பிஎஃப் புதிய உறுப்பினர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு 8.33 சதவிகித பங்களிப்பை அரசு வழங்கும் .

அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன்வளர்ப்பு பயிற்சி அளிக்க இலக்கு
நின்று போன 85 சதவிகித சாலைத் திட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன .

சாலை, நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
சிறு கடைகள் விருப்ப அடிப்படையில் வாரம் முழுவதும் செயல்பட அனுமதி
ஒட்டுமொத்தமாக சாலைத்திட்டங்களுக்கு 97 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
தேசிய வேலைவாய்ப்பு பதிவேட்டில் 3.5 கோடி பேர் பதிவு .

50 ஆயிரம் கி.மீ மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்
1 லட்ச ரூபாய் குடும்ப காப்பீட்டில், முதியோருக்கு 30 ஆயிரம் ரூபாய் கூடுதல் பலன் 

மாநில அரசுகளுடன் இணைந்து 160 விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும் .

எஸ்எஸ்எல்சி சான்றிதழ்களை மின்னணு முறையில் பாதுகாக்க ஏற்பாடு .

அணுமின் சக்தி உற்பத்திக்கு 3000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு .

நடப்பு நிதியாண்டில் 10,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை அமைக்க இலக்கு
இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சந்தைப் படுத்த 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
பொதுத்துறை நிறுவன சொத்துகளை பாதுகாக்க புதிய கொள்கை உருவாக்கப்படும்
அணுமின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க 20 ஆண்டுகால ஒருங்கிணைந்த திட்டம் ஏற்படுத்தப்படும் 

பங்கு விலக்கல் துறையின் பெயர் முதலீடு மற்றும் பொதுச் சொத்துத்துறை என மாற்றப்படும் .

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் புதியவர்களுக்கு நிதியுதவி அளிக்க 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

கட்டமைப்புத்துறைக்கு 2,21,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீடாக 25,000 கோடி ஒதுக்கீடு .

பொதுத்துறை வங்கிகளின் சேவைக்கு மத்திய அரசு பக்கபலமாக இருக்கும்
சிறு தொழில் கடன் வழங்கும் முத்ரா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ரூ. 1,80,000 கோடியாக உயர்வு .

விவசாயிகளுக்கான உரமானியம் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் .

மானியத் திட்டங்களின் நிதி மக்களின் கணக்கை நேரடியாகச் சென்றடைய ஏற்பாடு
ஆதார் எண் அடிப்படையில் பல்வேறு திட்ட மானியங்கள் மக்களைச் சென்றடைய ஏற்பாடு .

பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
வங்கித்துறையின் செயல்பாட்டில் அரசு தலையிடாது .

சமூகப்பாதுகாப்புத் திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கப்படும் .

கம்பெனிகள் சட்டம் தொழில் தொடங்க ஏதுவாக எளிமையாக்கப்படும் .

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலிக்க குழு அமைப்பு .

டயாலிசிஸ் இயந்திரங்களுக்கான உற்பத்தி வரி நீக்கப்படும் .

வருமான வரிக் கழிவு 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிப்பு
வாடகை வருமானம் பெறாத சொந்த வீட்டுக்கான வரிச்சலுகை அதிகரிப்பு
வரி வசூலிப்பை எளிமையாக்க அரசு நடவடிக்கை .

வருமான வரிச் சலுகையால் 2 கோடி பேர் பலன் பெறுவர் .

5 கோடி ரூபாய்க்கு குறைவாக வணிகம் செய்யும் வணிக நிறுவனங்களுக்கான வரி 29 சதவிகிதமாகக் குறைக்கப்படும் .

வருமானவரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை .

35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரிச்சலுகை .

புதிதாகத் தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் .

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் சுங்கம், கலால் வரியில் மாற்றம் கொண்டுவரப்படும் .

60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு முதல்முறையாக, ரூ.50 லட்சத்திற்குள் வீடு வாங்குவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரிச்சலுகை
ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி உயர்த்தப்படுகிறது .

பணக்காரர்களுக்கான கூடுதல் வரி 12லிருந்து 15 சதவிகிதமாக உயர்வு
புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10லிருந்து 15 சதவிகிதமாக உயர்வு
காற்றில் மாசைக் குறைக்கும் வகையில் சிறிய கார்கள் மீது 2 சதவிகித வரி விதிக்கப்படும் .

நிலக்கரி மீதான பசுமை எரிசக்தி வரி டன்னுக்கு ரூ.200 லிருந்து ரூ.400 ஆக உயர்வு .

வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .

ஏற்றுமதித்துறைக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும் .

தொழில் தொடங்க விதிகளை எளிதாக்கும் வகையில் புதிய கம்பெனி சட்டம் கொண்டுவரப்படும் .

பெட்ரோல் கார்கள் மீது கட்டமைப்பு வரியாக ஒரு சதவிகித வரி விதிக்கப்படும்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...