இலங்கையில் தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: - ஐநா,
இலங்கையில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் ஜெய்த் அல் ஹுசைன், 4 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றார். அங்கு நடத்திய ஆய்வுக்கு பின்னர், அவர் கூறியதாவது: இலங்கை அரசு, தனது கடந்தகால தவறுகளை போராடி சரிசெய்ய வேண்டும். இலங்கை ராணுவம், தமிழர்களின் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண்பதன் மூலம், இலங்கை ராணுவம் தன் மீது படிந்துள்ள கறைகளை அகற்ற வேண்டும்.ஐ.நா. அறிக்கையில் கண்டறியப்பட்ட உண்மைகள் குறித்து ஆலோசனை நடத்தும் பணியை இலங்கை அரசு தொடங்கி உள்ளது. வெளிப்படையான, நேர்மையான ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இலங்கையில், தமிழர் பகுதிகளுக்குச் சென்ற ஜெய்த் அல் ஹுசைன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது, காணாமல் போன தமிழர்கள் விவகாரத்தை இலங்கை அரசிடம் எழுப்புவதாக அவர் உறுதியளித்தார். மேலும், அந்நாட்டு அதிபர் சிறிசேன, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே ஆகியோரையும் சந்தித்தார்.நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: இலங்கையில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் ஜெய்த் அல் ஹுசைன், 4 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றார். அங்கு நடத்திய ஆய்வுக்கு பின்னர், அவர் கூறியதாவது: இலங்கை அரசு, தனது கடந்தகால தவறுகளை போராடி சரிசெய்ய வேண்டும். இலங்கை ராணுவம், தமிழர்களின் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண்பதன் மூலம், இலங்கை ராணுவம் தன் மீது படிந்துள்ள கறைகளை அகற்ற வேண்டும்.ஐ.நா. அறிக்கையில் கண்டறியப்பட்ட உண்மைகள் குறித்து ஆலோசனை நடத்தும் பணியை இலங்கை அரசு தொடங்கி உள்ளது. வெளிப்படையான, நேர்மையான ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இலங்கையில், தமிழர் பகுதிகளுக்குச் சென்ற ஜெய்த் அல் ஹுசைன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது, காணாமல் போன தமிழர்கள் விவகாரத்தை இலங்கை அரசிடம் எழுப்புவதாக அவர் உறுதியளித்தார். மேலும், அந்நாட்டு அதிபர் சிறிசேன, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே ஆகியோரையும் சந்தித்தார்.#eelam#srilankantamils
No comments:
Post a Comment