Monday, February 22, 2016

கிராமிய சிந்தனை

கரிசல் காட்டில் சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆசிரியராக இருந்துகொண்டு அற்புதமான எளிய படைப்புகளை படைக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியை Sengamala Nachiyar அவர்களுக்கு சல்யூட்.  இதை லண்டனில் இருந்து தற்போது சென்னைக்கு வந்துள்ள அன்பு நண்பர் அர்ஜுனா சிவானந்தம் படித்து மகிழ்ந்தார்.  இவர் இன்றைக்கு ஆட்சியில் உள்ள பிரதமர் டேவிட் கேமரூன் கன்சர்வேட்டிவ் கட்சியின் நிர்வாகி.  ஈழத் தமிழர் மத்தியிலும் லண்டனில் உள்ள அரசியல் களத்தில் உள்ளோரோடும் நன்கு அறிமுகமானவர். இவருக்கும் இந்த வரிகள் ஈர்த்தன.

அன்பிற்குரிய சகோதரி அவர்களே, கிராமத்தில் இருந்து உங்கள் பணிகளை தொடருங்கள். வாழ்த்துக்கள்.

கிராமத்து மனைவியின் காதல்
********************************************
வீடுவாசல் கூட்டி வைப்பேன்
விருந்துணவு சமைத்து வைப்பேன்
உன்வரவை எதிர் பார்த்து
வாசலிலே நின்றிருப்பேன்..
அருகம்புல் வேர்நிழலில்
மூன்றுகல் அடுப்பு வைத்து
முக்காப்படி அரிசி போட்டுச் சமைக்கச் சொன்னாலும் செய்திடுவேன்.!
சாமத்திலே எழுந்திடுவேன்
சமையல் எல்லாம் முடித்திடுவேன்
டீத்தண்ணி போட்டுவச்சி
முகம் கழுவி எழுப்பிடுவேன்.!
மஞ்சப்பூசித் துளிப்பூவும் சூடி
நெற்றியில் பொட்டிட்டு
தாம்பூலம் தட்டில் வைத்துத்
தந்திடுவேன் நான் உனக்கு .!
காடுகரை வேணாம் மாமா உன்
காசுபணம் வேணாம்
காலம் உள்ளவரை உன்
மனசு மட்டும் போதும் மாமா..!!
யார் என்ன சொன்னாலும்
வேறாய் நாம் பிரியாமல்
கூடுவிட்டுக் காடு போனாலும்
கூடவே வாழ்ந்திடுவோம் மாமா ..!!

********************************************
விளை நிலங்கள்
விளையாத களங்களாக
பசுஞ்சோலைகள்
பண்ணை வீடுகளாக
தோப்பு துரவுகள்
வீட்டடி மனைகளாக
மாற்றியோர் வாழ்வில்
ஏற்றமே கண்டார்
இவர் வாழ்விலோ
வரப்புகள் உயர்ந்தாலும்
வாழ்க்கை உயரவில்லையே..!

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...