Monday, August 22, 2016

நாலடியார் -39

நாலடியார் -39

வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார்,
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்.

ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே வருகிறது என்பதை எண்ணிப் பார்க்காமல், நாள்தோறும் தங்கள் வாழ்நாள் வளர்ந்து வருகிறது என்றெண்ணி மயங்கும் மூடர்கள், வருகிற ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வை அறுக்கவரும் வாள் என்றறிய மாட்டார்கள்..

No comments:

Post a Comment

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:

  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் என்பதை, திடீரென மாறிய வேட்பாளர்? திமுக சொல்ல நினைக்கும் அந்த செய்தி என்ன?@bbctamil ஸ்டாலின் மருமகன் ...