Thursday, August 18, 2016

சென்னப்பட்டணம்

தற்போது நான் வாசிக்கும் நல்ல
நூல் ;

சென்னப்பட்டணம்
- மண்ணும் மக்களும்
ராமச்சந்திர வைத்தியநாத்.

சென்னை நகரம் நிர்மாணிக்கப்பட்ட பின்னணி இதில் உள்ளது. பல பகுதி மக்களின் வருகையாலும் வாழ்வாலும் நகரம் உருவான கதை இது. மக்களுக்கான போக்குவரத்து, நீர்நிலைகள், தொழில், சேவைகள், கலை, பன்முக கலாச்சாரம் வளர்ந்த கதையும் இது. வெள்ளைக்கார ஆட்சியிலும் சுதந்திரப் போராட்ட இயக்கம் தோன்றி வளர்ந்ததிலும் அதில் வாழ்ந்த, வந்து சென்ற மனிதர்களின் எதிரும் புதிருமான கதை. தொழிலாளர் இயக்கங்கள் உருவான கதை. இடங்கை, வலங்கை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உருவான கதை. சுதந்திரத்தை கொண்டாடியதும் எதிர்த்ததுமான கதை. மக்கள் ஒற்றுமையை பிரித்ததும் வளர்த்ததுமான கதை. சென்னையை உருவாக்கிய மக்கள் சென்னையிலிருந்து வெளியேற்றப்படும் கதை. பல்வேறு கருத்தோட்டங்களையும் போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கதை. மண்ணும் மக்களுமான சென்னையின் கதை.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...