Sunday, August 14, 2016

விடியல் நீர் இறக்கம் பாசன வசதி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் துரிஞ்சிப்பட்டி கிராம விவசாயிகள் கடந்த வாரம் யாருடைய உதவியும் இல்லாமல் விடியல் நீர் இறக்கம் பாசன திட்டத்தை உருவாக்கி உள்ளனர். 42 விவசாயிகள் ஒருங்கிணைந்து கூட்டுறவு முறையில் சுமார் 90 லட்சத்தை முதலீடு செய்து தங்களுடைய நிலங்களுக்கு நிலத்தடி நீர் மூலமாக பாசன வசதி பெற தங்களுக்கான தங்கள் திட்டத்தை வகுத்து முறைப்படுத்தியுள்ளனர். அரசுக்கு நீர் பாசனப் பிரச்சினையில் எத்தனை மனுக்கள் கொடுத்தாலும், பாலச்சந்தரின் "தண்ணீர் தண்ணீர்" திரைப்படத்தில் கோவில்பட்டி தாலுக்கா ஆபிசில் கொடுக்கின்ற மனு, குப்பைத் தொட்டிக்கு செல்வதைப் போன்ற கதைதான். ஆனால் சுயமரியாதையோடு துரிஞ்சிப்பட்டி கிராம விவசாயிகள் சுயமாக முயற்சிகள் எடுத்து சாதித்துள்ளனர். பாராட்ட வேண்டாமா? குளத்தையும், நிலத்தடி நீரையும் புனரமைத்து பாதுகாக்கும் இந்த கிராம மக்களைப் போல மற்ற கிராம மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு வரவேண்டும். 

No comments:

Post a Comment