Monday, August 29, 2016

திருப்புடைமருதூர் ஓவியங்கள்


                                                             திருப்புடைமருதூர் ஓவியங்கள்,
திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில், வீரவநல்லூரிலிருந்து ஏழு கிமீ தொலைவில், தாமிரபரணியுடன் கடனாநதி கலக்குமிடத்தில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் திருப்புடைமருதூர். பெயருக்கேற்ப நெடிதுயர்ந்த மருதமரங்கள் சூழ, நாறும்பூநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
            கி பி ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே திகழும் இக்கோயில், பிற்காலச்சோழர், விஜயநகர-நாயகர்கள், திருவிதாங்கூர் மன்னர்கள் எனப்பலராலும் காலந்தோறும் தொடர்ந்து வளர்ச்சிப்பெற்று விரிவடைந்துள்ளது 
         தற்போதுள்ள கம்பீரமான இராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. இவ்வைந்து நிலைகளின் உட்புறங்கள் அழகிய மரத்தூண்களையும் மரவிதானங்களையும் கொண்டு அவற்றில் அழகு மிக்க சிற்பங்களை பெற்றுள்ளன.
             ஏறக்குறைய திருவிளையாடற் புராணம் முழுமையும் விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் மாணிக்கவாசகர் மற்றும் திருஞானசம்பந்தர் தொடர்புடைய நிகழ்ச்சிகள் விரிவாகவும் பெரிதாகவும் சித்தரிக்கப் பெற்றுள்ளன. பள்ளிக்கொண்ட பெருமாள், சுப்பிரமணியர், திரிபுரசுந்தரி, சரஸ்வதி, பகவதி, சனீஸ்வரன், எனத் தனித் தெய்வ உருவங்களும் தீட்டப் பெற்றுள்ளன.
             
            இரண்டாம் தளத்தில், விஜயநகரத்திற்கும், திருவிதாங்கூருக்கும் இடையே நடைபெற்ற 'தாமிரபரனிப் போர்' முழுமையாகவும் விரிவாகவும் தீட்டப்பெற்றுள்ளது. அரசர்கள், தளபதிகள்,காலாட்படை, குதிரைப்படை,யானைப்படைவீரர்கள்,பொற்பார்னர்கள் முதலியோரும், அரசவைக்காட்சிகளும், வாள்,வேல்,ஈட்டி,துப்பாக்கி ஆகியவற்றால் படைகள் தாக்கிக்கொள்ளும் கடுமையான போர்களக்காட்சிகளும் அக்கால அரசாங்க நடவடிக்கைகளும் மிக நுட்பமாகத் தீட்டப்பெற்றுள்ளன. இங்கு மிகப்பெரிய பரப்பில் தீட்டப்பட்டுள்ள அராபிய குதிரை வணிகக்கப்பல் காட்சி உலகப் புகழ்பெற்றதாகும்.
இவ்வோவியங்களின் சிறப்புகள்:-
                                     16 ஆம் நூற்றாண்டின் சமய, சமூக, அரசியல் வரலாற்றின், முக்கிய ஆவணங்களாக திகழ்கின்றன.
                                        # முதன்மை வண்ணங்களாலும் கலவை வண்ணங்களாலும் தீட்டப்பெற்றுள்ள உருவங்கள்,உணர்ச்சிபாவத்திற்கேற்ப, செயல்களுக்கேற்ப,பல்வேறு கோணங்களில் அமைந்து உயிரோட்டத்துடன் விளங்குகின்றன.
                                        # கதை கூறும் ஓவியங்களுள் இவ்வோவியங்கள் மிக விரிவும் நுட்பமும் வாய்ந்தவையாகும்.
                                        # உருவங்கள், ஆடைகள், அணிகலன்கள், பிறவகை அலங்காரங்கள், இசைக்கருவிகள், ஆகியன நுட்பமாகத் தீட்டப்பெற்றுள்ளதால் மிகச்சிறந்த பண்பாட்டுக் கருவூலங்களாகத் திகழ்கின்றன.         

இச்சிறப்பு வாய்ந்த ஓவியங்களை ,சில நாட்கள் அல்ல.... சில மாதங்கள் அல்ல... ஒரு ஆண்டோ ,இரண்டு ஆண்டுகளோவும் அல்ல...கடின உழைப்பாலும்... கலை வேட்கையாலும் பத்து ஆண்டுகால ஆய்வு. திருப்புடைமருதூரின் ஓவியங்களை கூறு கூறாக விளக்கி விடுகின்றன, அதை தீட்டிய ஓவியர்களின் அகக்கண்ணின் வழியாகவே வாசகர்களையும்(மாணவர்களையும்) வழி நடத்திச் செல்கிறார்
                நடமாடும் வரலாற்று ஆவணப் பெட்டகமாக திகழும் பேராசிரியர், ஆய்வாளர் பாலுசாமி(பாரதிபுத்திரன்) ஐயா அவர்கள் தமிழர்களுக்காக தனது பெட்டகத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தந்த ஒரு பகுதியே சித்திரக்கூடம் என்னும் பெரும் பகுதி. 
                இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவை 13*9 இஞ்சுகளும் , ஏறத்தாழ 320 பக்கங்களும், ஆர்ட் காகிதத்தாலும், கடின அட்டையிலும் வரும் 2016  நவம்பர் 3 வது வாரத்தில் தடாகம் பதிப்பகம் முழு வண்ண நூலாக வெளியிடுகிறது. (கலை, இலக்கியம், பண்பாடு, சூழலியல் போன்ற தளங்களில் தொடர்ந்து சிறந்த நூல்களை தடாகம் பதிப்பகம் கொடுத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது)
இந்நூலின் சிறப்புகள்:-
           பிறரால் செய்யப்பெற்ற கீறல்கள் மட்டும் சரிசெய்யப்பெற்று, பழமைச் சிறப்பு குன்றாமல், வண்ணங்களின் தன்மை சிறிதும் மாறாமல் தரப்பட்டுள்ளன.
           நுட்பங்கள் புலப்படுமாறு பெரிய அளவில் ஓவியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன 
            ஒவ்வொரு ஓவியத்தின் உள்ளடக்கமும் மாந்தர்களின் செயற்பாடுகளும் விரிவாக விவரிக்கப்பட்டு, நுட்பங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
            தமிழக நாயக்கர் ஆட்சிப்பரப்புகள், திருப்புடைமருதூர், இராஜகோபுரம், ஐந்து தளங்கள் ஆகியவற்றிற்கு வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
           அச்சுததேவராயர், பூதலவீர உதயமார்தாண்டவர்மர் ஆகியோர் மற்றும் ஆரல்வாய்மொழிக் கணவாய், புன்னைக்காயல் துறைமுகம் ஆகியவற்றுக்கான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன 
           ஐந்து தளங்களிலும் இராஜகோபுரக் கதவுகளிலும் இடம்பெற்றுள்ள மரச்சிற்பங்கள் குறித்து விரிவான கட்டுரையும் புகைப்படங்களும் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன
          , தளவாய் அரியநாதர் வரலாறு, திருவிளையாடற் புராணக்கதைகள், வள்ளிக்கத்தை, சுந்தர் வரலாறு போன்றனவும் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.
         தனியொரு கோயில் சுவரோவியங்கள் குறித்து, ஏறக்குறைய அனைத்து ஓவியங்களுடனும் அவை ஒவ்வொன்றுக்குமான விளக்கங்களுடனும் ஆழமான விளக்கங்களுடனும் ஆழமான ஆய்வுக்கட்டுரைகளுடனும் முமையாக தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவே 
        

         முன்பதிவு செய்ய விரும்புவோர்
பனுவல் புத்தக நிலையம்
  www.panuval.com/chitirakoodam



No comments:

Post a Comment