Sunday, August 14, 2016

காளிங்கராயன் கால்வாய்

கொங்கு மண்டலம் மஞ்சள் விளையும் பூமியில் காளிங்கராயன் என்ற பெயரை கேட்டாலே மரியாதை கலந்த பார்வை வரும். காளிங்கராயன் கால்வாய் ஈரோடு மாவட்டத்தில் பவானியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையாகும். வருடத்திற்கு 10 மாதம் தண்ணீர் பெருக்கோடி செல்லும். இந்த தண்ணீரின் வளத்தால் இந்த மண்ணில் மஞ்சள் விளைகின்றது. இந்த கால்வாய்க்கு ஒரு வரலாறு உண்டு. எப்படி கல்லணையை கரிகாலன் கட்டினாரோ, அதேப் போல இந்த வாய்க்காலை வெட்டி, அணையைக் கட்டியவர் காளிங்கராயன். பவானியல் இருந்து நொய்யல் வரை பாய்ந்து கொங்கு வட்டாரத்தை வளம் செழிக்க செய்கின்றது.

இந்தக் கால்வாய், கோணலாக இருந்தாலும், திட்டமிட்டு தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்டது.  கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரத்தில் உள்ளது. முடிகிற இடமான நொய்யலில் கடல் மட்டம் 412 அடியாகும். நேர்கோட்டில் 50 கிலோ மீட்டர் பாய்கின்றது. துவங்கும் இடத்திலிருந்து மேடு பள்ளங்களை தாண்டி செல்வதற்காக சற்று வளைந்து நெளிந்து கோணல் வடிவில் உள்ளது. ஆகவே இதனால் 90 கிலோ மீட்டர் அளவு நீர் பாயும் தொலைவும் உள்ளது.

காளிங்கராயன் மூலமாக 786 மதகுகள் வழியாக 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இது ஒரு கணக்கென்றாலும், இதற்கு மேலும் பயன்பாட்டில் உள்ள நிலங்களும் உள்ளன. இவ்வளவு திட்டமிட்டு கட்டிய காளிங்கராயன் யார் என்று பார்த்தால் ஊத்துக்குளி பாளையக்காரர் ஆவார்.

தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுக்கா பகுதியின் பாளையமாகும்.  பழங்காலத்தில் சோழநாட்டில் தொண்டை மண்டல வேளாளர் என்று அறியப்பட்ட பசுங்குடி மக்கள் என்று அழைக்கப்பட்டு, கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய வம்சாவளியைச் சார்ந்தவர்தான் காளிங்கராயன்.  காளிங்கராயனைப் பற்றி முழுமையாக பதிவிட வேண்டுமென்றால் பெரிதாகிவிடும். அது குறித்து விரிவான பதிவை என்னுடைய வலைதளத்தில் செய்ய உள்ளேன்.  

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...