பிரபல ஆங்கில (மால்குடி) எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனுக்கு நான் நன்கு அறிமுகமானவன். சென்னைக்கு வந்தால் அவர் சந்திக்கும் இந்து என். ராம், இரா. செழியன், தீரர் சத்தியமூர்த்தி புதல்வி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அம்மாள் போன்றவர்களை சந்திப்பது உண்டு. அவர் சென்னை வருவதற்கு முன், தொலைபேசியில் மைசூரில் இருந்து என்னுடன் தொடர்பு கொள்வது வாடிக்கை. அப்போதெல்லாம் செல்பேசி கிடையாது. அவருடன் சென்னையில் அவர் வாழ்ந்த புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவுக்கும், கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் நிறுவிய தி.நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள இந்தியா காபி ஹவுஸ், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தாஸ்பிரகாஷ் உணவு விடுதி, பிரிட்டிஷ் ஹை கமிஷன் என்று பல சென்னையின் முக்கிய இடங்களுக்கு உடன் சென்றது உண்டு. தற்போது மைசூரில் 1952ல் அவர் கட்டிய வீட்டை கர்நாடக அரசு நினைவிடமாக்கியுள்ளது. அந்த வீட்டில் அவருடைய பேத்தி புவனேஸ்வரி வாழ்ந்து வந்தார். கர்ம பூமி என்ற வீட்டில் புத்தகங்கள், பரிசுப் பொருட்கள் என நிரம்ப இருக்கும். 2001 வரை இந்த வீட்டில் ஆர்.கே. நாராயணன் வாழ்ந்துவந்தார். இதில் ஒரு சில பகுதி இடித்து இடைக்காலத்தில் புனரமைக்கப்பட்டது. மைசூர் என்றால் ஆர்.கே. நாராயணன் நினைவில்லாமல் இருக்க முடியாது. வரலாற்றுப்பூர்வமான மைசூரில் ஆர்.கே. நாராயணனுக்கு ஒரு நிரந்தரமான நினைவகம் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஆர்.கே. நாராயணனும், அவரது சகோதரர் ஆர்.கே. லட்சுமணனும் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் அறிந்த ஆளுமைகள் ஆகும். தமிழகத்தின் பழக்க வழக்கங்களை சற்றும் மறக்காமல் வாடிக்கையாக கொண்டவர்தான் ஆர்.கே. நாரயாணன். ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராக இருக்கும்பொழுது, அவரை சந்தித்தபோது, மெட்ராஸ் கஃபே, கன்னாட் பிளேஸ், சென்ட்ரல் நியூஸ் மார்ட் மாடியில் இருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று சூடான இட்லியும், சாம்பாரும் கலந்த கலவை உணவை வாங்கி கொடுத்ததெல்லாம் மறக்க முடியவில்லை. மல்லிகைப் பூவின் மணத்தை விரும்புவார். அதுவும் குறிப்பாக மதுரை மல்லி என்றால் பிரியமாக மோர்ந்து தன்னுடைய வாகனத்தில் வைத்துக் கொள்வது உண்டு.
Sunday, August 14, 2016
ஆர்.கே. நாராயணன்

Subscribe to:
Post Comments (Atom)
#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.
———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment