மயிலை ரானடே நூலகம்
----------------------------------
பல ஆளுமைகளின் சொற்பொழிவும், முக்கிய அரசியல் நிகழ்வுகளை குறித்து எழுந்த விமர்சனங்களைக்
கேட்ட மயிலையின் அடையாளமான ‘ரானடே நூலகம்’, ‘மயிலாப்பூர் கிளப்’பும், கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடங்களாகும்.நல்ல நூலகம்.பொது மக்களுக்கு பயன்பட்ட இந்த இடத்தை காலி செய்து கோயில் நிர்வாகம்
தனியாருக்கு தாரைவார்க்கப் போகிறதாமே?
இந்த ரானடே நூலகம் தொடங்கிய வெங்கட்ராம கிருஷ்ணசுவாமி ஐயர், பிரிட்டிஷ்காரர்களின் அர்பத் நாட்
நிதி நிறுவனம் நொடித்த பிறகு சுதேசி மக்களின் நிதித் தேவைக்காகவும் சேமிப்புகளைப் பாதுகாக்கவும்
சொந்தமாக வங்கி தேவை என்ற நிலையில் இந்தியன் வங்கி தொடங்கப்பட ரங்கசுவாமி சீனிவாசனைப்
போல முயற்சிகளை மேற்கொண்டவர்.
1907-ல் இந்தியன் வங்கி மக்களுக்கான சேவையைத் தொடங்கியது. ரானடே நூலகம், தென்னிந்திய சங்கம்,
தொழில் நிறுவன சங்கம், குழந்தைகளுக்கான ராமகிருஷ்ண இல்லம், இந்திய ஊழி யர்கள் சங்கம்,
மயிலாப்பூர் ஆயுர் வேதக் கல்லூரி மருந்தகம் ஆகி யவை தொடங்கப்படுவதில் பெரும் பங்கு
வகித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட வரலாற்றில் இடம்பெற்ற ரானடே நூலகம் மூடப்படுவது வேதனை தருகிறது.
#ரானடேநூலகம்
#மயிலை
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-06-2017
No comments:
Post a Comment