Friday, June 9, 2017

வந்தேறி ... எனும் வசைவாள்

சமீபகாலங்களில் வந்தேறி எனும் சொல்வாள் வீசப்படுகின்றது. பெரும்பாலும் விவாதத்தில் கருத்தாயுதம் கையில் இல்லாத போது இவ்வாறு காழ்ப்புணர்ச்சி வெடிக்கின்றது
இந்தியா ஒரு தேசமாக இருக்கும் போது , ஒரு மாநிலத்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கும் போது, அதே அரசியல் சட்டத்தின் படி நீ முதல்வராக துடிக்கும் போது நீ யார் வந்தேறிகள் என அடுத்தவரை சொல்வதற்கு? நீ உன் சொந்த தெருவை விட்டு அடுத்த தெருவுக்கு வரும் போது அங்கு வந்தேறி ,உன் கிராமத்தை விட்டு இன்னொரு தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் போது அந்த தொகுதிக்கு நீ வந்தேறி என ஒப்புக் கொள்கின்றாயா?
நேற்று பிரிட்டனில் நடந்த தேர்தலில் இந்தியாவை சேர்ந்த 56 பேரும் மற்றும் ஈழத்தமிழர்கள் சிலரும் போட்டியிடுகின்றனர். அவர்கள் எல்லாம் வந்தேறிகள் என புறக்கணிக்கப்பட்டால் அவர்கள் இந்த உரிமையை பெற்று இருக்க முடியுமா என சிந்தித்து பார்க்க வேண்டும். அமெரிக்காவில் 4 இந்தியர்கள் காங்கிரஸ் (நாடாளுமன்ற) உறுப்பினர்களாகவும் செனட்சபை( மேலவை) உள்ளனர். இரத்த சொந்தம் எந்த நாட்டில் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை , நாங்கள் இப்படித் தான் பேசுவோம் என்றால் இதனால் இனம் இழப்பை சந்திக்குமே தவிர அடையப் போவது எதுவுமில்லை. இதனால் குழப்பம் விளையுமே தவிர அரசியல் தீர்வு கிடைக்காது. குந்தகம் விளையுமே தவிர சொந்த பந்தங்கள் வழாது.
உலகம் முழுவதும் தமிழர்கள் பற்பல துறைகளில் கோலோச்சுகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதோ நாமெல்லாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் வகையில் உலகில் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் தழிழர்கள் பட்டியல்.
1) சிங்கப்பூர் அதிபர் - எஸ். ஆர். நாதன் (2002 - 2011)
2) மொரிஷியஸ் அதிபர் - வீராசாமி ரெங்கிடு - 1992
3) மொரிஷியஸ் அதிபர் - அங்கீடி வீரய்யா செட்டியார் - 2002
4) மொரிஷியஸ் அதிபர் - அரிரங்கா கோவிந்தசாமி பிள்ளை
5) கயானாவின் அதிபர் - மோசஸ் வீராசாமி நாகமுத்து -
6) சிங்கப்பூர் துணை பிரதமர் - எஸ். ஜெயகுமார்
7) சிங்கப்பூர் நிதி அமைச்சர் - தர்மன் சண்முகரத்தினம்
8) சிங்கப்பூர் விளையாட்டுத் துறை அமைச்சர் - விவியன் பாலகிருஷ்ணன்
9) மலேசியாவின் பினாங் மாகாணத்தின் முதல்வர் - ராமசாமி பழனிசாமி
10) இலங்கை கிழக்கு பிராந்தியத்தின் முன்னாள் முதல்வர் - சிவனேசதுறை சந்திரகாந்தன்
11) இலங்கை தொழில்துறை அமைச்சர் - ராதாகிருஷ்ணன்
12) இலங்கையின் முன்னாள் கேபினட் அமைச்சர்
- தேவராஜ்
13) தென் ஆப்ரிக்கா - தொலைத் தொடர்பு அமைச்சர் - ராதாகிருஷ்ணன் படையாச்சி
14) கனடா நாடாளுமன்ற உறுப்பினர் - ராதிகா சிற்றபேசன்
15) இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் - லக்ஷ்மன் கதிர்கிராமர்
16) சிஷெல் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் - பேட்ரிக் பிள்ளை
17) ரீயூனியன் ஐலாண்ட் சார்பாக பிரான்ஸ் நாட்டின் செனட் உறுப்பினர் - ஜீன் பால் வீரப்புலி
18) பிஜி நாட்டின் பிரபல அரசியல் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் - பெருமாள் மூப்பனார்
19) பிஜி நாட்டின் பிரபல அரசியல் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் - குணசேகரன் கவுண்டர் -
20) சிங்கப்பூர், பல்துறை அமைச்சர் - எஸ். தனபாலன்
மேற்குறிப்பிட்ட தமிழர்கள் சிறு உதாரணமே. இம்மாதிரி பல தமிழர்கள், கடல் கடந்து, தன் உழைப்பு மற்றும் திறமையைக் காட்டி தமிழர்களை தலை நிமிரச் செய்திருக்கிறார்கள்.
#வந்தேறிகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-06-2017

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...