தி எக்கனாமிக் டைம்ஸ் ஆங்கில தினசரியில் (08.06.2017) வெளிவந்த "We Live in a Photo Democracy" என்ற ஆங்கில பத்தி வெளியானது. இது குறித்து பல்வேறு சிந்தனை ஓட்டங்கள் எழுந்தன. செயல்பாடுகள் கிடையாது. மக்கள் நல அரசு என்பதற்கான சூழல் இல்லை. ஒவ்வொருவரும் பத்திரிக்கைகளில் தங்கள் புகைப்படமும், தொலைக்காட்சியில் தங்களுடைய பேட்டியும் வந்தால் போதுமென்ற மனநிலையில்
உள்ளனர். தொலைக்காட்சி விவாதங்களில் வெட்டியாக அரட்டை கச்சேரி தங்களுக்கேற்றவாறு ஏற்ற இறக்க விவாத வசன சம்பாசனைகள் நடைபெறுகின்றது. இது தான் இன்றைய புகைப்பட ஜனநாயகம்.
இதற்கு மேல் ஒன்றுமில்லை. திட்டங்களும் இல்லை. செயல்பாடுகளும் இல்லை.
"இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்"
என்ற அபூர்வ ராகங்கள் படத்தில் கவியரசர் கண்ணதாசனின் வரிகளே நினைவுக்கு வருகிறது.
#புகைப்பட_ஜனநாயகம்
#photo_democracy
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-06-2017
No comments:
Post a Comment