Friday, June 23, 2017

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் குடியரசுத் தலைவரை குறித்தான வட்டமேசை விவாதத்தில் அடியேன் சொன்ன வேறுசில செய்திகள்.

1. பிரதீபா பாட்டீல் அவர்கள் 2007ல் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட போது அதிமுக கூட்டணிஅவரை எதிர்த்து போட்டியிட்ட பி.ஏ.சங்மாவை ஆதரித்தது. ஆனால் அந்த அதிமுக கூட்டணியில் இருந்து 6 ஓட்டுகள் பிரதீபா பாட்டீலுக்கு கிடைத்தது. அதை குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று வரை அவர்கள் யாரென்று தெரியவில்லை.

2. புதுச்சேரி மாநிலத்திற்கு கே. ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராக போட்டியிட்ட1997ம் ஆண்டில் தான் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க ஓட்டுரிமை கிடைத்தது. யூனியன் பிரதேசமான டெல்லிக்கும் இதே ஆண்டில் தான் வாக்குரிமை கிடைத்தது.

#குடியரசு_தலைவர்_தேர்தல்
#KSRadhakrishnanpostings
#KSrpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-06-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...