இன்றைய (27/06/2017) தி இந்து நாளிதழ், 'இன்றைய (27/06/2017) தி இந்து நாளிதழ், 'குடியரசுத் தலைவர்களும் சர்ச்சைகளும்!'என்ற தலைப்பில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் குடியரசுத் தலைவர்களாக இருந்தபோது அதிகாரப்பகிர்வு ஏற்பட்ட பல்வேறு சர்ச்சை சம்பவங்களின் செய்திகள் இடம்பெற்றுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர்களாக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டு பல சந்தர்ப்பங்களில் சந்திப்புகளும் நிகழ்ந்ததுண்டு. அது குறித்தான விரிவான கட்டுரை வருமாறு:
rkkurunji@gmail.com!'என்ற தலைப்பில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் குடியரசுத் தலைவர்களாக இருந்தபோது அதிகாரப்பகிர்வு ஏற்பட்ட பல்வேறு சர்ச்சை சம்பவங்களின் செய்திகள் இடம்பெற்றுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர்களாக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டு பல சந்தர்ப்பங்களில் சந்திப்புகளும் நிகழ்ந்ததுண்டு. அது குறித்தான விரிவான கட்டுரை வருமாறு:
ராஷ்ட்ரபதி பவன் சுவர்களுக்கு தான் தெரியும்
-------------------------------------
- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
ஒரு திரைப்படத்தில் ‘வரும் ஆனால் வராது’ என்றொரு வசனத்தை கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். அதுபோலவே, குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் இல்லை என்பதை போல பேசிக்கொள்வது உண்டு. குடியரசுத் தலைவர் வெறும் ரப்பர் ஸ்டாம்பா?பதுமைய? அல்லது நாட்டின் உச்ச அதிகாரத்தின் மையமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பிரிட்டிஷ் நாடளுமன்ற முறையை பின்பற்றுகின்ற நாடாளுமன்ற ஜனநாயக நாடு இந்தியா. அமெரிக்கா, பிரான்ஸை போல குடியரசு தலைவரை மக்களே தேர்ந்தெடுக்கின்ற மாதிரி இல்லாமல் மறைமுகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். மாநிலங்களின் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு இதில் ஓட்டுரிமை கிடையாது.
இந்திரா காந்தி காலத்தில் 1975, 76 களில் குடியரசுத் தலைவர் முறையை கொண்டு வரவேண்டும் என்று கடுமையான நடவடிக்கைகள் இருந்தன. வசந்த சாத்தே, ஏ.ஆர். அந்துலே போன்றவர்கள் எல்லாம் இதற்கான பிரச்சார பணிகளில் இறங்கினர்.
நாட்டு விடுதலைக்கு பின், ஜவஹர்லால் நேரு ராஜாஜியை குடியரசுத் தலைவராக்க வேண்டுமென்று முயன்றார். ஆனால் ராஜேந்திர பிரசாத்துக்கு ஆதரவான நிலை இருந்ததால் நேருவும் ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தார். நாடு விடுதலை பெற்ற பின் குடியரசுத் தலைவருக்கு அதிகாரமா, பிரதமருக்கு அதிகாரமா என்ற சர்ச்சை எழுந்தது.
ராஜேந்திர பிரசாத், 18-09-1951 அன்று நேருவுக்கு குடியரசுத் தலைவருக்கு உச்ச பட்ச அதிகாரங்கள் உள்ளன என்று கடிதம் எழுதினார். ஏற்கனவே 21-03-1950 இல் ராஜேந்திர பிரசாத் அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளை எல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்ற வினாவையும் எழுப்பினார். நேருவுக்கும் ராஜேந்திர பிரசாத்துக்கும் இத்தகைய சர்ச்சைகள் தொடர்ந்தன. ‘ஹிந்து கோட்’ சட்டத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இருவரிடையே நடந்தது. டெல்லியில், இந்திய சட்ட நிறுவனத்தின் (Indian Law Institute) துவக்க விழாவில் கடுமையாக குடியரசுத் தலைவர் இதுகுறித்து பேசியது உண்டு. சோம்நாத் கோவிலுக்கும் செல்வதும், துவாரக பீடக் காலை சுத்தம் செய்வதை குடியரசுத் தலைவர் தவிர்க்க வேண்டுமென்று நேரு கடுமையான குறிப்புகளை ராஜேந்திர பிரசாத்திற்கு அனுப்பியதும் உண்டு. குடியரசுத் தலைவர் – பிரதமர் அதிகார வரம்புகளை குறித்த பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை சென்று, இந்திய தலைமை வழக்கறிஞர் செட்டுல்வார்டு சட்ட ஆலோசனைகளை வழங்கியதும் உண்டு. விடுதலை பெற்றவுடன் துவக்கத்திலேயே இப்படியான பனிப்போர் ஏற்பட்டது.
டாக்டர். இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்த போது 1962 சீனப் போர் பிரச்சனையிலும், பாதுகாப்பு வாகனங்களை கொள்முதலில் நடந்த ஊழல் விவகாரத்திலும் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனை பதவி விலக வேண்டுமென்று நேருவிடம் நேரடியாக வாதிட்டு கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்ததன் விளைவாக நேருவுக்கு மனவருத்தங்கள் ஏற்பட்டன. தூக்கு தண்டனை கைதிகள் விவகாரத்தில் கருணை மனுக்களை தினமும் பெற்று உடனுக்குடன் இராதாகிருஷ்ணன் பைசல் செய்ததை நேரு விரும்பவில்லை.
இந்திரா காலத்தில் குடியரசுத் தலைவராக இருந்த ஜாகீர் உசேன், வி.வி.கிரி, பக்ருதீன் அலி அகமது ஆகியோர் ஆட்சியை அனுசரித்து சென்றனர். அவசர நிலை காலத்தில் பக்ருதீன் அலி அகமது நடந்து கொண்ட முறைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
வி.வி.கிரி தன்னுடைய பதவி காலம் நிறைவு பெற்றுச் சென்ற போது, லாரிகள் நிறைய ராஷ்ட்ரபதி பவனிலிருந்து பொருட்களை அவரது குடும்பத்தார் எடுத்துச் சென்றார்கள். அசோகச் சக்கரம் பொறித்த இருக்கையையும் கையகப்படுத்தி எடுத்துச் சென்ற போது அவரது துணைவியாரிடம் போராடி ராஷ்ட்ரபதி பவன் அதிகாரிகள் திரும்பப் பெற்றனர். இன்றைக்கு வி.வி.கிரி இல்லை. ஆனால் நடந்த சம்பவத்தை பதிவு செய்வதில் குறையொன்றும் இல்லை.
ஜனதா ஆட்சி காலத்தில் நீலம் சஞ்சீவ ரெட்டி குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு வந்தார். மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்த போது சஞ்சீவ ரெட்டி இந்திரா காந்திக்கு ஆதரவு நிலையை எடுத்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதே சஞ்சீவ ரெட்டி வி.வி.கிரியை எதிர்த்து 1969ல் போட்டியிட்ட பொழுது இந்திரா காந்தி ரெட்டியை நிராகரித்ததால் காங்கிரஸ் பிளவுப்பட்டது.
சஞ்சீவ ரெட்டிக்கு பின் வந்த ஜெயில் சிங் பொறுப்பேற்று, இந்திரா காந்தி மறையும் வரை எந்த பிரச்சனையும் எழவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி பிரதமர் பொறுப்புக்கு வந்தவுடன் முட்டல், மோதல் துவங்கியது. ராஜீவ் அரசு பரிபாலனங்களை குறித்து தன்னிடம் சொல்வதில்லை என ஜெயில் சிங் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அஞ்சல் நிலைய மசாதா 1986ல் திருப்பி அனுப்பியதால் சர்ச்சைகள் நிகழ்ந்தன. சீக்கியர் பிரச்சனையில் ஜெயில் சிங்கின் அணுகுமுறை வேதனை தருகின்றது என ராஜீவ் குறிப்பிட்டதுண்டு. பின் ராஜீவும், ஜெயில் சிங்கும் அமர்ந்து பேசியும் முழுமையான இணக்கம் ஏற்படவில்லை.
ஆர். வெங்கட்ராமண் 1991ல் குடியரசுத் தலைவராக இருந்த பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதிய மசோதாவை கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்து தனது ஆட்சேபனையை தெரிவித்தார்.
சங்கர் தயாள் சர்மா பொறுப்பில் இருந்த பொழுது, ராஷ்ட்ரபதி பவன் நிர்வாகத்தில் சிறு சிறு மனத் தாங்கல்கள் ஏற்பட்டன.
பின் வந்த கே.ஆர். நாராயணன், 1997ல் உத்திரபிரதேசத்தின் கல்யாண் சிங்கின் பாஜக அரசை கலைக்க வேண்டுமென்று பிரதமர் ஐ.கே. குஜ்ரால் சொல்லியும், பிரிவு 356ஐ பயன்படுத்த ஒப்புக் கொள்ளவில்லை. அதே போல பீகாரில், ராப்ரி தேவி அரசை கலைக்க வாஜ்பாய் அரசு பரிந்துரைத்த போதும் மறுத்துவிட்டார். கே.ஆர். நாராயணன் வெற்றி பெற்ற தேர்தலில் தான் புதுச்சேரி, புதுடெல்லி முதலிய யூனியன் பிரதேசங்களும் வாக்களிக்க கூடிய உரிமையை பெற்றனர்.
அப்துல் கலாம் பொறுப்புக்கு வந்தபோது, 2006ல் ஆதாயமும் சலுகைகளும் பெறும் பொறுப்புக்களை வகிக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலே முன்தேதியிட்ட மசோதாவை மன்மோகன் சிங் வலியுறுத்தியும் தன்னுடைய வீட்டோ அதிகாரத்தால் முழுமையாக நிராகரித்தார் கலாம்.
முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீல் வேட்பாளராக அறிவிக்கும் போதே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பதவிக் காலம் முடிந்தபின் ராஷ்ட்ரபதி பவன் சோபா, நாற்காலிகள் முதலியவற்றை அதிகாரிகள் தடுத்தும் எடுத்துச் சென்றார். இவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை ஓய்வு பெற்ற பின்னர் தன்னுடனே எடுத்துச் சென்றார். தன்னுடைய பதவிக் காலத்தில் ரூ.205 கோடி செலவில் 252 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற் கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
பிரணாப் முகர்ஜி அரசியலில் அனுபவம் பெற்றதால் ராஷ்ட்ரபதி பவனை குறித்தான வரலாறுகளை ஆவணப்படுத்தினார். நடைமுறை மற்றும் செயல்பாடுகளில் தெளிவாகவும் கறாராகவும் இருந்தார்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 77 (1) ன்படி, நாட்டில் நடக்கும் அரசு பரிபாலனங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவருடைய திருப்தியை கொண்டு தான் நடைமுறை படுத்தப்படுகிறது என்பது சம்பிரதாயம். குடியரசுத் தலைவர் மத்திய அரசின் முடிவுகள், மசோதாக்கள் ஒப்புதல் அளித்தால் தான் அவற்றை செயல்படுத்த முடியும். பிரிவு 85 ன்படி, நாடாளுமன்றத்தை கூட்டவும் கலைக்கவும் அதிகாரம், போர், வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு, உள்நாட்டு கலவரங்கள், பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு குழப்பங்கள் ஆகியன எழுந்தால் அவசர நிலையை பிரகடனப்படுத்துவது, மாநிலங்களில் சட்ட ஒழுங்கு கெட்டால் பிரிவு எண். 356ஐ பயன்படுத்துவது, தூக்கு தண்டனை கைதிகளுக்கு பிரிவு. 72 ன்படி கருணை காட்டுவது என்ற அதிகாரங்களை குறிப்பிடலாம்.
ஒரு பழைய செய்தி; டெல்லியிலிருந்து வரும் ஆங்கில ஏடான, இந்துஸ்தான் டைம்ஸ் என்று நினைக்கின்றேன். அதில் ராஷ்ட்ரபதி பவனில் சமைக்கின்ற சுவையான உணவு வகைகள் டெல்லியிலுள்ள பல உணவு விடுதிகளுக்கு அனுப்பி அதைக் காசாக்கியதும் உண்டென்று எழுதியது. இப்படியான சர்ச்சையான செய்திகள்.
இப்படி உயர்ந்த இடத்தில் ஆங்கிலேய அரசாங்கம் நடத்திய தர்பார் மாளிகையில் கடந்த எழுபது ஆண்டுகளாக இந்திய அரசியல் சதுரங்கத்தில் நடந்த தெரிந்த செய்திகள், கமுக்கமான செய்திகள் ராஷ்ட்ரபதி பவன் சுவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
#குடியரசுத்தலைவர்
#குடியரசுத்தலைவர்தேர்தல்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-06-2017

rkkurunji@gmail.com
No comments:
Post a Comment