Sunday, June 11, 2017

இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் தமிழக துறைமுகங்களுக்கு பாதிப்பா?

குமரி மாவட்டம் குளச்சலில் துறைமுகம் வேண்டுமென்றும் சில சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் தடைபடும் என வேண்டாமென்றும் விவாதங்கள் ஒருபுறம் நடந்துகொண்டு இருக்கிறது. சேது சமுத்திர  திட்டமும் முடக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தியா வந்து புதுதில்லியில் பிரதமரையும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்தார். அப்போது இந்திய அரசு நடத்தும் கன்கார் என்ற நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு சரக்குகளை இறக்கும் முனையத்தை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் கொழும்பு துறைமுகம் வளர்ச்சியடையும். தூத்துக்குடி துறைமுகத்தின் முக்கியத்துவம் குறையும். குளச்சல் துறைமுகத் திட்டம் நடைமுறைக்கு வருவது கேள்விக்குறியாகிவிடும்.
இப்படி தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்ற வகையில் இந்திய அரசும் இலங்கை துறைமுகத் திட்டங்களுக்கு உதவுகின்றது. ஒரு பக்கம் சீனாவோடு மானசீகமாக இலங்கை உறவு வைத்துக் கொண்டு இந்தியாவிடம் கபட நாடகம் ஆடுவதை கூட இந்திய அரசால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்து மகா சமுத்திரத்தில் இலங்கையின் தயவால் சீனா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளுடைய ஆதிக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும். இது குறித்து கடந்த 08.06.2017அன்று
வந்த செய்தியில் இது குறித்து முழுமையான விவரங்கள் உள்ளன.



#culachal_port
#குளச்சல்_துறைமுகம்
#இந்திய_இலங்கை_ஒப்பந்தம்
#indo_srilanka_accord
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-06-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...