Friday, June 23, 2017

மதநல்லிணக்கம் (Secularism)

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் குடியரசுத் தலைவர் தேர்தலைக் குறித்து வட்ட மேசை விவாதம் நாளை (24.06.2017) காலை 11.00 மணியளவில் ஒளிபரப்பாகிறது. அதில் அடியேனின் ஒரு கருத்தை பதிவு செய்கிறேன்.
"திருக்கோவில்களில் பாசுரங்களும், பதிகங்களும் பாடி ஆறுகால பூஜை நடக்கட்டும்!
தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள் நடக்கட்டும்!!
மசூதிகளில் பாங்கோசையோடு தொழுகைகள் நடக்கட்டும்!!!
பெரியாரின் கருத்துகள் சதுக்கங்களில் கேட்கட்டும்!!!!"
இது தான் சகிப்புத்தன்மை. Secularism த்திற்கு மதசார்பின்மை என்று நாம் தமிழில் சொல்கிறோம். ஆனால் அதற்கான தமிழாக்கம் ‘மதநல்லிணக்கம்’ என்று தான் அழைக்க வேண்டும். ‘பன்மையில் ஒருமை’ - ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், நடைமுறைகள் கொண்ட இந்த நாட்டை மதநல்லிணக்கம் என்ற புனித கயிரால் கட்டி ஒற்றுமைப்படுத்துகிறோம்.

#Seuclarism
#மதசார்பின்மை
#இந்தியா
#KSRadhakrishnanpostings
#KSrpostings
#PTTVOnlineNews
#Puthiya_Thalaimurai_TV
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-06-2017

No comments:

Post a Comment

Kerala